போதுமிந்த நாகரீகப்பாடு!
~~~~~~~~~~~~~~~~~~
மனுசனோட எண்ணங்கள
புரிஞ்சிக்கதா(ன்) முடியலடா சாமி
தினுசுதினுசா வாய்ஜாலம் பேசி
திரியுறான்டா சாமி
காரியந்தா(ன்) முடியும்வரை
காலதான புடிக்கிறான்டா சாமி
காரியந்தா(ன்) முடிஞ்சப்பின்ன
கழுத்ததான புடிக்கிறான்டா சாமி
நாலுக்காசு சேர்ந்ததுமே
நடையுடையும் மாறுதடா சாமி
நல்லபார்வ போயிதானே
நக்கல்பார்வ ஆனதடா சாமி
கொஞ்சநஞ்சம் ஈரமனசும்
கொழுப்பெடுத்த திமிருமனசா ஆனதடா சாமி
அன்பா பேசுன வார்த்தையெல்லாம்
வம்பா பேசும் வார்த்தையாச்சுடா சாமி
நெலமையெல்லாம் மாறிப்போச்சு
நெனைப்பும் இப்ப நாறிப்போச்சேடா சாமி
நெகிழ்ந்து கூடிசிரிச்ச மூஞ்சி
நெதமும் சுரிச்ச மூஞ்சி ஆனதடா சாமி
கோடிப்பணம் இருந்தென்ன
கோட்டவீடு இருந்துமென்ன
கூடச்சேர்ந்து அனுபவிக்க அன்பு
கூட்டமொன்னும் இல்லையடா சாமி
படிக்காத கண்ணு கண்ணியமா இருக்குது
படிச்சுபுட்டு வந்தபய கண்ணுமூடிக் கெடக்குது
படிச்சமமதைல திமிராதான் அலையுது
படிக்காதவர ஏளனமா பாக்குது
எல்லாந்தெரிஞ்சும் முட்டாளாக் கெடக்குது
எகத்தாளம பேசிதான படிச்சமதிப்ப கொறைக்குது!
இந்த பாழாப்போன பணந்தான்
இவங்க கண்ணை மறைக்குதோ
பரீட்சைக்குன்னு படிக்கும் படிப்பு
பகுத்தறிவு உயிரைக் குடிக்குதோ!
போகும்போது பாடையில பொணம்தானே சாமி
போறப்ப கூட என்னகொண்டுபோவமடா சாமி
போதும் போதும் பட்டநாகரீகப் பாடு சாமி
போகும்போது குணத்தோட போகனுன்டா சாமி
காலத்துக்கும் கருத்தா நடந்துக்கனும் சாமி
காப்பாத்தி வளர்த்த நாட்டுக்கும் வூட்டுக்கும்
காவலா இருந்துக்கோ சாமி
கடமையித மறக்காம எடுத்துக்கோ சாமி!..
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக