புதன், 12 ஆகஸ்ட், 2015

கவிதை

உழவனாவேன் நான்
***********************
கவிப்பாடும் குயிலில்லை 
நான்
காய்ந்தவயிற்றைப்பாடும் காக்கையாவேன் நான்
கவிதை எழுதும் கவிப்புலவன் இல்லை
நான்
கழனியில் களையெடுக்கும் கருப்புஉழவன்
நான்
பண்ணியற்றும் பண்டிதன் இல்லை
நான்
பண்படும் நிலத்தின் பண்பறிந்தவன்
நான்
எதுகை மோனை எதுவென்றறியாதவன்
நான்
ஏர்பிடிக்க காளை எதுவென்றறிந்தவன்
நான்
உயிர்உருக கவிதையிசைக்கும் புதுமைக்கவிஞனில்லை
நான்
பயிர்வளர்த்து உயிர்காக்கும் பழமையுழவனாவேன்
நான்…!

            விஜயகுமார் வேல்முருகன்

2 கருத்துகள்: