வியாழன், 29 அக்டோபர், 2015

அனுபவம்2

ஸ் .. அய்யோ.. அய்யோ.. அய்யோ..
நமக்குனே வந்து சேருவாய்ங்கப் போல..
என்னடா புலம்புறான்னு பாக்குறீங்களா..
கேளுங்க அந்த சோகக் கதைய(!?!)
ஒரு இந்திக்காரத் தம்பீ, மருந்துச்சீட்ட எடுத்துக்கிட்டு மருந்து வாங்க வந்தாப்ல.

'நமஸ்த்தே.. பைய்யா (bayya)..
(உரையாடல் இந்தியில் உங்களுக்காக தமிழில்)

"நமஸ்தே! வா..பைய்யா"

'இந்த மருந்தெல்லாம் உங்க கிட்ட இருக்கா'

"இருக்குத் தம்பி"

'எதுக்காக எழிதிருக்காங்க பைய்யா?'

நானும் அந்த சீட்டுல இருந்த மருந்துங்கள படிச்சுப் பாத்துச் சொன்னேன்..

'எத்தன மருந்து எழுதியிருக்காங்க பைய்யா?'

"மூனு மருந்துங்க எழுதிருக்காங்க தம்பி"

'அய்யோ.. பைய்யா நான் டாக்டர்கிட்ட அஞ்சி வியாதி சொன்னேன்..
அவர் மூனுக்குத் தான் எழுதியிருக்காரா?  மத்த ரெண்டு வியாதி கேக்காதே..'

"அப்படிலாம் இல்லபா தம்பி.. இங்கிலீஷ் மருந்துல ஒரு மாத்திரை ரெண்டு மூனு வியாதிங்களுக்கு கேக்கும்.. அதனாலதான் டாக்டர் அப்படி எழுதியிருக்கார்"

'அப்போ.. சரியாகிடுமா பைய்யா'

"சரியாகிடும் தம்பி"

'எத்தனை நாளைக்கு மருந்து எழுதியிருக்காங்க'

"மூனு நாளைக்குத் தம்பி"

'மூனு நாளைக்கு சாப்பிட்டா சரியாகிடுமா பைய்யா?'

"சாப்பிட்டா சரியாகும்"

'அப்போ.. தொடர்ந்து சாப்பிடலைனா சரியாகாது தானே'

"இந்தக் கேள்விக்கு, நான் என்ன பதில் சொல்லனும்னு எதிர்பார்க்கிற?"

'சாரி... பைய்யா.. மொத்தம் மருந்துக்கும் எவ்வளவு பைசா ஆகுது?'

கணக்குப்போட்டுட்டு "150 ரூபாய் ஆகுதுபா" னு சொன்னேன்..

'இது மூனு நாளைக்கா?'

"ஆமா"

'ரெண்டு நாளைக்கி?'

"100 ரூபாய்"

'அப்போ ஒரு நாளைக்கி?'

"அடேய்..உங்கிட்ட எவ்ளோதான்டா இருக்கு?''

'சரி..பைய்யா..எனக்கு ஒரு வேளை மருந்துக் குடு'

"இந்தா.. தம்பி...25 ரூபாய் குடு"

'பைய்யா.. இத எப்படி சாப்புடனும்?'

"இப்ப போய் சாப்பாடு சாப்புட்டு ஒரு 1/2 மணி நேரம் கழிச்சி மூனு மாத்திரையையும் முழுங்கிடு தம்பி"

'சரி..பைய்யா.. இந்த மூனு மாத்திரையில முதலில் எந்த மாத்திரை முழுங்கனும்?'

"தம்பி..மூனு மாத்திரைகளையும் பிரிச்சிட்டு, ஒன்னா  கையில  எடுத்து மொத்தமா வாயிக்குள்ள போட்டு தண்ணிய ஊத்தி முழுங்கிடு"

'பைய்யா..'

(உஸ்..அபா...விடமாட்டான் போலிருக்கு)
"என்ன தம்பி?"

'எத்தனை மணிக்கு மாத்திரைகளை முழுங்கனும்?'

"பத்து மணிக்குடா"

'அய்யோ..பைய்யா.. நான் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கிடுவேனே..
என்ன பண்ண..'

"எலி மருந்த வாங்கி சாப்புட்டு படுத்துடுடா"

'என்ன பைய்யா சொல்ற?'

"மாத்திரையும் வாங்க வேண்டாம்..
ஒரு மண்ணும் வாங்க வேண்டாம்..
உன்ன ஒரு ஆளையே பாத்திட்டு இருந்தா மத்தவங்கள யார்டா பாக்குறது..
ஒழுங்கா மருந்த வச்சிட்டுப் போயிரு..
இல்ல..."

'சரி.. பைய்யா.. நான் பத்து மணிக்கே மருந்த முழுங்கிடுறேன்..'

இப்ப புரியுதுங்களா என்னோட புலம்பலுக்கு காரணம்...

'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக