மண்ணினில் பிறந்த மாந்தரில் தாயின் ..மாண்பினை மறந்தவர் இல்லை பண்ணினை எழுதும் புலவரும் தாயின் ..பண்பினைப் பாடிட மறவர்! எண்ணமும் சிறந்து விளங்கிடத் தாயை ..என்றுமே நினைத்திட வேண்டும்! திண்ணமாய் அன்பைத் தாயிடம் வைத்தே ..திறமைகள் வளர்த்திடல் நலமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக