வியாழன், 29 அக்டோபர், 2015

அனுபவம்

   குமார் இரவு கடைய அடைச்சிட்டு வீட்டுக்கு கிளம்பும்போது மணி 11.30க்கு மேல ஆகிடிச்சு.. வண்டிய எடுத்துக்கிட்டு, அகலுக்கு எழுத வேண்டிய தொடரின் 3வது பகுதிய நினைச்சிக்கிட்டே போயிட்டு இருந்தேன் எப்படி இன்னும் கொஞ்சம் திகில் சேக்கலாம்னு யோசிச்சிட்டுப் போகும்போது எண்ணூர் பாலம் பக்கத்துல இருக்குற சுடுகாட்டுகிட்ட வண்டி திடீர்னு நின்றுச்சு.. சுத்தியும் முத்தியும் பார்த்தால் கரு கும்னு ஒரே இருட்டு.. சுடுகாட்டுல ஏதோ எரிஞ்சிகிட்டு இருந்ததுனால புகை வந்துகிட்டு இருந்துச்சு.. லேசா பதற்றம் .. ஏன்னா வண்டி நின்ன இடத்துல தான் ஒரு ஆள வெட்டி கொன்னுபுட்டானுங்க..
வண்டிய உதைச்சி உதைச்சி பார்த்தேன்..ம்ஹூம் ...நகர மாட்டேனு அடம்.. அப்பறம் போன்ல இருக்குற டார்ச்ச அடிச்சி பார்த்தாஆஆஆ..
புகை மண்டலம் அதிகமாகி என்னைய பார்த்து வர மாதிரி இருந்துச்சு..
திடீர்னு தொண்டைய எதோ அடைக்கிற மாதிரி இருந்துச்சு..
வண்டிய மறுபடியும் பார்த்தால் பெட்ரோல் ரிசர்வ்ல வந்திடுச்சு..
ச்சேய்னு மண்டையில தட்டிகிட்டு வண்டிய மறுபடியும் உதைச்சிட்டு நிமிர்ந்து பார்த்தாஆஆஆ அந்த புகை மண்டலம் கிட்ட வந்திடுச்சு..
அய்ய்ய்யோ னு கண்ணை மூடிகிட்டு வண்டிய ஓங்கி ஒரு உதை.. டர்டர்டர்னு வண்டி ஸ்டார்ட் ஆகிடிச்சு.. அந்த இடத்த விட்டு வேகமா ஓட்டி
பாலத்துல ஏறிட்டேன். ஒரு பத்து மீட்டர் தூரம் போயிருப்பேன். உடனே பாலத்துல எரிஞ்சிட்டு இருந்த விளக்கு எல்லாம் அனைஞ்சிடுச்சி.. ம்ம்ம்.. இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.. மழை வேற லேசா தூறிட்டு இருந்துச்சு...அப்புறம்..
விளக்கெல்லாம் அனைஞ்சிடுச்சா..

நம்ம வண்டி வெளிச்சம் மட்டும் தான்..
ச்சே..என்னடா மறுபடியும் கரண்டு போயிடுச்சானு நினைச்சிட்டுப் போகும்போது...
பாலத்து மேல ரெண்டுப் பேரு.. சுமார் 20_25 வயசுக்குள்ள இருப்பாங்க..
நம்மல நோக்கி ஓடி வந்தாங்க..

இப்ப எனக்கு 'திக்'குனு ஆகிப்போச்சு..
ஏற்கனவே அந்தப் பகுதியில தான் ஒரு தடவ கடைய அடைச்சிட்டு வரும்போது வழிப்பறியில மாட்டிக்காம தப்பிச்சு வந்துட்டோமா..அது வேற நினைவுக்கு..
அன்னையிலிருந்து இன்னைக்கி வரைக்கும் வண்டி பெட்ரோல் டேங்க் கவர் உள்ள ஒரு கத்தி ஒரு அடி நீளத்துல மறைச்சி வச்சிருப்போம்..

கையால கத்திய தடவிப் பார்த்துக்கிட்டே வண்டிய வேகமா, பாலத்து மேல ஒரு பாத வலது பக்கமா பர்மா நகர நோக்கி திரும்பும் அதுல திருப்பினா.. அவனுங்க நம்மல கண்டுக்காம நேரா ஓடிட்டு இருந்தாங்க..
ச்சே..என்னடா இது நாம மெர்சலாய்ட்டோமேனு ..வண்டியோடத் திரும்பி, வண்டி வெளிச்சத்துல அவனுங்களப் பார்த்தா.. ஒருத்தன் தெரிஞ்ச மூஞ்சி..ஓடிகிட்டு இருக்கான்..
இன்னொருத்தன் தெரியாத மூஞ்சி.. கையில  கண்ணாடி பாட்டிலோட அவன விரட்டிட்டு ஓடுறான்.. அய்யய்யோ.. என்ன பிரச்சனைன்னு நானும் பின்னாடியே வண்டியிலப் போய் விரட்டுனவனுக்கு முன்னாடிப்போய் டக்குனு நின்னுட்டேன்.. அவன் ஓடி வந்த வேகத்துக்கு நிக்க  முடியாம வண்டியில இடிச்சி ரெண்டு பேருமே கீழ விழுந்துட்டோம்.. விழுந்ததுல அவன் கையிலிருந்த கண்ணாடி பாட்டில் உடைஞ்சிப் போச்சு..
"யார்டா.. நீ.. ஏன்டா அவன விரட்டுரே" னு கேக்கும்போது 'அப்பா அப்பா' ஒருக் குழந்தையோட சத்தம் தூரத்துல இருந்துக் கேட்டுச்சு...
"உன்னால  தான்டா அவன் தப்பிச்சுப் போயிட்டான்" னு உடைஞ்ச பாட்டில என்னை குத்த வரும் போது.. மறுபடியும் 'அப்பா அப்பா'னு குழந்தையின் குரல்..
நான் அவனோட கையைப் பிடித்து தடுக்கும்போது...

'அப்பா எந்திரிங்க.. அம்மா எழுப்பச் சொன்னாங்க..மணி ஏழு ஆயிடுச்சு' னு என் மகள் என்னை எழுப்பிடுச்சு..
அப்பறம் என்ன பேந்த பேந்த முழிச்சிகிட்டே எழுந்தேன்...

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக