காத்திருக்கும் யாசகனாய்
வசந்தகாலங்கள் தோறும்
வந்துசெல்லும் நினைவுகளோடு
இலையுதிர்த்த மரமாய் தனிமையில்.!
வறட்சியாய் வீசும் தென்றலும்
மிரட்சியாய் பார்க்கும் பார்வையுமாய்
அடிக்கடி வந்து செல்லும்
செல்லரிக்காத நினைவுகள்.!
சுழன்றடிக்கும் சுழற்காற்றில்
சிக்கிய காய்ந்த சருகுகளாய்
ஈரமற்று வீசும் வெப்பமாக
எரிந்தும் எறியவியலா நினைவுகள்.!
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக