#அய்யய்யோ_அய்யய்யோ...
எப்பவும் போகிற பாதை தான் ..
ரெண்டு பக்கமும் வரிசையா புதரா இருக்கும்.. ஒரு பக்கம் கால்வாய் ஓடும்..
அங்கங்க ஒன்னு ரெண்டு மரங்கள் கும்பல் கும்பலா இருக்கும்..
பகல்ல மட்டுந்தான் அந்த வழியா போக முடியும்... இருட்டாயிடுச்சுனா வேற பக்கம் தான்..
பைக்ல தான் அந்த பக்கம் போவோமா..
மூனு கிலோ மீட்டருக்கு கொஞ்சம் பொருமையா தான் போகனும்..
ஏன்னா அப்பத்தான் திடீர் திடீர்னு பிரேக் பிடிக்க முடியும்..
'ஏன் பிரேக் பிடிச்சு பிடிச்சு போகனும்?' நீங்க கேக்குறது புரியுது..
ஏன்னா.. அப்ப தான் பாம்புங்க மேல ஏத்தாம போக முடியும்..
ஆமாங்க.. அந்த பக்கம் பாம்புகள் அதிகமுங்க.. ரோட்டுக்கு இந்த பக்கமும், அந்த பக்கமுமா அவங்க கடந்து போவாங்க..
அப்பப்ப அவங்க குட்டிங்க கூட ஓடும்..
அதனால நாம எப்பவும் அந்த பாதையில வேகமா போறதுல்ல..
ஆனா.. சில தருதலைங்க வண்டியில வேணும்னே ரொம்ப வேகமா போயி அதுகள ஏத்தி கொண்டுபுடுவானுங்க..
அன்னைக்கி அப்பிடித்தான்.. நாம போகும் போது நம்மல முந்திகிட்டு ஒருத்தான் வேகமா போனான்.. போனானா.. அப்பறம் போயிட்டான்.. அதாவது அந்த இடத்தை கடந்து போயிட்டான்..
நாம பொறுமையா போனோமா..
கொஞ்ச தூரம் போயி பார்த்தா...
ஒரு குட்டி பாம்பு.. ஒரு ஒன்ற அடியில..
சுடச்சுட செத்து கிடந்துச்சு..
நாம.. உச்..உச்..சுனு.. உச்சு கொட்டிட்டு இறங்கி அந்த பாம்பு குட்டிய ஓரமா நகர்த்தி போட்டுட்டு வண்டிய எடுத்துட்டு போகும் போது ஒரு பெரிய பாம்பு வேக வேகமா அந்த குட்டி பாம்ப நோக்கி ஓடுச்சு..
நாமும், 'பாவம் அந்த அம்மா பாம்பு'னு நினைச்சிகிட்டே.. மெதுவா போயிட்டு இருந்தோம்.. கொஞ்ச தூரம் போயி எதேச்சையா பக்கவாட்டு கண்ணாடியில பார்த்தாஆஆஆஆஆ..
அந்த பெரிய பாம்பு நம்மல விரட்டிகிட்டு வருது.. அய்யய்யோ.. இது என்னடா வம்பா போச்சேனு..
நாம,
ஆபத்துக்கு பாவமில்ல, அப்படி பாவம் பார்த்தா நாம பாவமாயிடுவோம்னு
வண்டிய வேகமா ஓட்டிட்டு போயாச்சு..
ரெண்டு நாள் அந்த பக்கம் போகவே இல்ல..
செத்து போனத ஓரங்கட்டுனதுக்கு என்னடா இது பாவம் ஒரு பக்கம்.. பழி ஒருப்பக்கமா இருக்கேனு அந்த பக்கம் போகல..
அதனால வேற வழியில சுத்திப்போயாச்சு..
அதையும் மறந்தாச்சு..
மூனாவது நாளு..
ஒரு அவசர வேலையா போக வேண்டியிருந்தது..
சுத்திப்போனா நேரமாகும்னு
இந்த பாதையிலேயே போகலாம்னு வண்டிய ஓட்டிகிட்டு கொஞ்சம் வேகத்துல தான் போனோம்..
போனோமா...
அப்ப வண்டி அந்த பாம்புகுட்டி செத்துப்போன இடத்த தாண்டிப் போகும்போது,
திடீர்னு ஒரு பெரிய பாம்பு ,
பாதையில இந்த பக்கத்துல இருந்து அந்த பக்கமா போச்சு..
கிரீஈஈஈச்..னு பிரேக்க போட்டு வண்டிய நிப்பாட்டிட்டோம்.. நமக்கும் அந்த பாம்புக்கும் இடையில ஒரு அடிக்கும் குறைஞ்ச அளவு இடைவெளி தான்..
கொஞ்சம் கூர்ந்து கவனிச்சி பார்த்தா மூனு நாளைக்கு முன்னால நம்மல விரட்டுன பாம்பு..
கொஞ்ச நேரத்துல 'திக்'னு ஆகிடிச்சி..
வண்டியும் நின்னுடுச்சு..
கொஞ்சம் கால ஊண்டி வண்டிய பின்னாடி நகர்த்துனா தான் வண்டிய உதைச்சி ஸ்டார்ட் செய்ய முடியும்..
காலை ஊண்டி பின்னாடி நகர்ந்தா பாம்பு முன்னாடி வருது..
"குப்" புனு வேர்த்திடுச்சு..
என்னடா இது...
பாம்பு பழி வாங்குமா..
அப்படி பழி வாங்குற அளவுக்கு நாம ஒன்னும் அதோட குட்டிய கொல்லலையே.. செத்து கிடந்தத ஓரமா தானே தள்ளி வச்சோம்..
மெயின் ரோட்டுல போகும்போது நாயி அடிப்பட்டாக்கூட அத நகர்த்தி ரோட்டோரமா தான நகர்த்துவோம்.. இப்படி நினைச்சிகிட்டே வண்டிய பின்னாடி நகர்த்துனா.. அதுவும் விரட்ட வருது... சரி.. என்ன தான் ஆகட்டும்னு பார்ப்போம்.. துணிஞ்சி வண்டிய ஓங்கி உதைச்சி .. கியரா மாத்தி ஓட்டப் போனா..
ஒரே கொத்து காலுல..
சரியான வலி...'சுரீர்'னு ஏறுச்சு ..
அவ்ளோதான் வண்டியில இருந்து கொஞ்ச தூரம் எகிறி விழுந்து..
பாம்புக்கும் நமக்கும் ஒரு பத்தடி தூரம் இருக்கிற மாதிரி.. உருண்டு.. பாக்கெட்ல இருந்த கைக்குட்டைய பட்டுனு உருவி... பாம்பு போட்ட அதாவது கொத்துன இடத்த விட்டு ரெண்டு அங்குலம் தள்ளி, நல்லா இருக்கி கட்டுப்போட்டுட்டு எழுந்தா..
மறுபடியும் பாம்பு விரட்டி வருது..
அய்யய்யோ... என்னடா இதுனு தட்டுத் தடுமாறி எழுந்து ஓட முடியாமல் ஓடுறோம்..
ஓடும் போதே..
"இதோ பாரு.. நீ.. நாகராஜனா, நாகராணியான்னு தெரியாது..
உன்னோட பாம்பு குட்டிய நான் கொல்லல.. எனக்கு முன்னாடி போனவந்தான் ஏத்தி கொன்னுறுக்கான்... நான் அத ஓரங்கட்டி தான் வச்சேன்..
என்ன விட்டுடு..விட்டுடு" னு தத்தி தத்தி ஓடுறோம்.. ஏற்கனவே வலி "விண்ணு" "விண்ணுனு" தெறிக்கிது..
ஊகும்.. விடவே இல்ல அந்த பாம்பு..
அப்பறம்... ஓட முடியல.. வேற வழியில்ல உசுர காப்பாத்திக்கனும்னா பேசாம அத கொன்னுடனும்னு ஏதாவது கம்போ, பெரிய கல்லோ கிடைக்குமானு தேடுறோம்.. கல்லு கிடைக்கல..
ஒரு நடுத்தர அளவு மரந்தான் இருந்துச்சு... சரி.. அதை உடைச்சாவது அடிக்கலாம்னு மரத்த உடைக்கப் போனா...
அந்த மரம் ஒல்லியா இருந்தாலும் நல்லா வலுவா இருந்துச்சு..
மரத்த ஆட்டி ஆட்டி உடைக்கிறதுக்குள்ள அந்த பாம்பு ரொம்ப வேகமா கிட்ட வந்திடுச்சு... கால் வேற சரியான வலி ஓட முடியல.. மறுபடியும் கெஞ்சல் பாம்புகிட்ட.. ஊகும்..
மறுபடியும் ஓங்கி ஒரு கொத்து இன்னொரு கால்ல..
"அய்யய்யோ.... அம்மா... என்ன பாம்பு கொத்திடுச்சே... யாராவது காப்பாத்துங்க" னு உச்சகட்ட சத்தத்துல கீழ விழுந்து கத்துறோம்...
..
..
"கனவுல பாம்பு கொத்துனா நல்லது தான்டா.. அதுக்காக.. கட்டில்ல இருந்து கீழே குதிச்சி இப்படி அலறுனது நல்லது இல்ல... எப்பா காதே செவுடாகுற அளவுக்கா கத்துவ.. அங்க பாரு பக்கத்து வீட்ல இருக்குறவங்க எல்லாம் வந்துட்டாங்க.. போய் மூஞ்ச கழுவிட்டு கிளம்பு கடைக்கு நேரமாகுது" னு அம்மா சொல்லிட்டு போக...
நேரத்த பார்த்தா 5 மணி..
காலையில இல்லைங்க.. சாயுங்கல 5 மணி..
ச்சே.. பகல் கனவானு மண்டையில தட்டிகிட்டு.. கைகால் முகத்த கழுவிட்டு..
துணிய மாட்டிகிட்டு..
அம்மா கொடுத்த டீயை குடிச்சிட்டு..
வண்டிய எடுத்துகிட்டு கடைக்கு கிளம்புனோம்..
சரி.. கொஞ்சம் வெளிச்சம் நல்லா இருந்ததுனால.. 'அந்த' பாதையிலேயே போகலாம்னு மெதுவா அப்படியே ஓட்டிகிட்டுப் போனா...
அங்கே...
ஒரு பெரிய பாம்பு...
செத்து கிடந்துச்சு.....
(பாதி கனவு மீதி உண்மை)
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக