சனி, 6 மே, 2017

திகில் காடு 3

"சூட்சும்ம் அதை தானே உணர்வது எளிதல்ல..
வெறும் தீக்குச்சியால் அதனுள் இருக்கும் ஆற்றலை தானே வெளியே கொண்டு வர முடியாது.. அது உரசுவதற்கு ஒரு தீப்பெட்டி தேவைப்படுவதைப்போல சூட்சுமத்தை அறிய
அதனை உணர, உணர்த்த ஒரு ஆசான் தேவை.. அப்படி பட்ட ஆசான் கிடைக்கும் வரை தேடு மனமே.."

                     திகில் காடு
   
                                3

  "நம்ம ஏரியா சுடுகாட்டுல ஒரு பயங்கரம் நடந்துசு்சுங்க " என சொன்ன போலீஸ் ஏட்டையும், ராமசாமி அய்யாவையும் அதிர்ச்சியுடன் கவனிக்க ஆரம்பித்தான் சரவணன்..

"என்னாச்சுங்க ஏட்டையா" ராமசாமி அய்யா..

" நேத்து நம்ம ஸ்டேசனுக்கு ஒரு போன் வந்திருக்கு, சுடுகாட்ல ஏதோ ஒரு பிணம் தலையில்லாம இருக்குனு..
அதான் எஸ்.ஐ. கூப்டார்னு எல்லாரும் சுடுகாட்டுக்குப் போயிட்டோம்..
அங்க போனா,
கொலை கேஸ்ல ஜெயிலுக்குப் போயிட்டு, பரோல்ல வெளிய வந்தானே
'பெட்ரோல் குண்டு'பாபு..
அவன் திடீர்னு முந்தா நேத்து தற்கொலை செஞ்சிகிட்டான்ல..
அவன நேத்து மத்தியானம் தான் அடக்கம் செஞ்சிட்டு வந்தோம்..
இப்ப போய் பார்த்தா அவன புதைச்ச இடத்த தோண்டி வெளிய எடுத்துப் போட்டு தலைய வெட்டிட்டு, வயித்த கிழிச்சி குடல எல்லாம் எடுத்திருக்கு.
பாக்கவே ரொம்ப பயங்கரமாகவும், கொடூரமாகவும் இருந்துச்சு..
சுடுகாட்டையே சுத்தி சுத்தி பார்த்தோம்..
பக்கத்துல எங்கையாவது தலை இருக்கானு.. எங்கேயும் காணோம்..
அப்பறம் அவனோட சொந்தக்காரவங்களுக்கு தகவல் சொல்லி வரவச்சிட்டு, அப்படியே ஜட்ஜ் அய்யாகிட்ட தகவல் சொல்லிட்டு,  வெட்டியான வரவச்சி மறுபடியும் புதைச்சிட்டு வந்தோம்" பேச்சை நிறுத்தி கொஞ்சம் தண்ணீர் குடிச்சிட்டு மறுபடியும் தொடர்ந்தார் ஏட்டய்யா..

"அப்பறம் இத யார் செஞ்சிறுப்பா, அவனுக்கு விரோதிங்க யார் யார் இருந்தாங்கனு விசாரிக்கனும்னு
நானும் எஸ்.ஐ சாரும் மத்த போலீஸ்காரவங்களும் ஜீப்ல பேசிகிட்டே ஸ்டேசனுக்குப் போய் இறங்கினோம்..
அங்கப் போனால் அங்க ஒரு பயங்கரமான அதிர்ச்சி..
ஸ்டேசன் வாசல்ல பாபுவோட தலை..
தலைய சுத்தி , உறுவுன குடலை மாலையா போட்டிருந்துச்சு..
அப்பறம் அதையும் அப்புறபடுத்துனோம்"

"யேன் வாழ்நாள்ல 'குடல உருவி மாலையாப் போட்டுடுவேன்'ன்னு சொல்றத கேட்டிறுக்கேன் ஆனால் நேத்து தான் அத கண்ணால பார்த்தேன்.. ரொம்ப கொடுமைடா சாமி" ன்னு தலையில் தட்டிக்கொண்டே சரவணனை பார்த்து ஒரு புன்னகைத்து
"என்னங்க தம்பி..  நேத்து ஸ்பாட்டுக்கு உங்க நிருபர் ராஜேஷ் தான் வந்திருந்தார்.. 
இப்ப என்ன
வேலைக்கு கிளம்பியாச்சா?"

"ஓ..அப்படிங்களா?..
ஆமாங்க சார் ..கிளம்பியாச்சு..
என்னங்க சார் பயங்கரமா இருக்கு..
இதுக்கு முன்னாடி இது போல நடந்திருக்கா?" கேட்டான் சரவணன்..

"என் சர்வீஸ்ல இது போல பாத்ததுமில்ல கேள்விப்பட்டதும் இல்ல..
தலைய வெட்டி எடுத்துட்டு வந்து சரண்டைஞ்சவங்கள பாத்திருக்கேன்..
ரெண்டு மாசம் முன்னாடிக்கூட, ஒருத்தன் அவன் பொண்டாட்டி இன்னொருத்தன் கூட கள்ளத்தொடர்பு வச்சிருந்தானு அந்த பொண்ணோட தலைய துண்டா வெட்டி எடுத்துட்டு வந்து நம்ம ஸ்டேசன்லேயே சரண்டைஞ்சிட்டான்.."

"அடப்பாவமே.. இது என்ன ஒரே தலைவெட்டி புராணமாவல்ல இருக்கு.." இது ராமசாமி அய்யா..

ஏட்டய்யா "ஆனா.. இந்த 'பெட்ரோல்குண்டு' பாபு கதை ரொம்ப பயங்கரம்ல"..

உடனே சரவணன் "ஆமா.. அது என்ன சார் பேரு ,  'பெட்ரோல் குண்டு' பாபு?".

" ஓ.. அதுவா தம்பி.. பெட்ரோல் குண்டு தயாரிக்கிறதுல பாபு கைத்தேர்ந்தவன்..
சாதரண பெட்ரோல் குண்டுல பாதிப்பு குறைவு.. ஆனா இவன் தயாரிக்கிறதுல பயங்கரமான பாதிப்ப ஏற்படுத்தும்..
அப்படி ஒரு டெக்னிக்ல செய்வான்..
அதான் .. அப்படி ஒரு பட்டப்பேரு.." ஏட்டய்யா சொல்லிகிட்டு இருக்கும்போதே, அவருடைய போன் மணி அடித்தது....
"ஹலோ.. சொல்லுப்பா...

"................"

அப்படியா?

".................."

என்ன எழுதியிருக்கு..

"...................."
ம்ம்..ம்ம்...
ம்ம்..சரி.. எஸ்.ஐக்கு சொல்லிட்டியா..

"..................."

"சரி.. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன்" என்று சொல்லி போனை அனைத்ததும்.. சரவணனும், ராமசாமி அய்யாவும் அவரையே பார்த்தனர்.

"என்னங்க.. ஏட்டய்யா.." கேட்டார் ராமசாமி..

"காலையில ஸ்டேசன் வாசல பெருக்குற ஆயா இரத்த கறையோட ஒரு அட்ட வாசல்ல இருந்ததுனு எடுத்துக் கொடுத்துச்சாம்..
அதுல..
'பிணமாகக் கூட
இவன் நிம்மதியா
இருக்க கூடாது..
பாதிக்கபட்டவள்'னு கிறுக்கலா ஒரு பொண்ணு எழுதியிருக்காம் அய்யா..ம்ம்ம்"
என்று பெருமூச்சு விட்டார் ஏட்டைய்யா...

"என்னது ஒரு பொண்ணா இத செஞ்சது.. அதுவும் சுடுகாட்டுக்கு போயி தலைய அருக்குற அளவுக்கு.."என்று ராமசாமி அய்யா சொன்னதும்..

சரவணனுக்கு இரவு வந்த கனவு நினைவுக்கு வந்தது...

அப்போது...

............(தொடரும்)

முந்தைய பதிவினை படிக்க..
~~~~~~~~~~~~~~~~~~~~~
http://vijayakumarvelmurugan.blogspot.in/2017/05/2.html?m=1

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக