உன்னில் உள்ள உன்னை அறிய
உண்மை நிலை தன்னை அறிய
முகமூடி கலைத்து மனது முழுதும்
ஒன்றே உணர்வாய் நாளும் கண்டு
மூச்சுக்காற்றில் சூட்சுமம் அறிவாய்
பேச்சினை கேட்பாய் ஆசான் உரைப்பேன்...
திகில் காடு
5
சரவணனில் பைக்கில் சிவா உட்க்கார போகும்பொழுது, அவர்களை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது..
இருவரும் அப்படியே நின்றுவிட்டார்கள்.
அவர்களின் அருகில் திடீரென கார் நின்றது..
சரவணனின் முகத்தில் சிறு புன்னகை.
கார் கதவின் கண்ணாடி கீழே இறங்கியது.
"அய்யய்யோ.. நான் சொன்னது காதுல விழுந்திருக்குமா சரவணா.. கரெக்டா வீங்குன வாயன் வந்துட்டானே"என சரவணனின் காதை கடித்தான்.
"சிவா.. கொஞ்சம் சும்மா இருடா..
வணக்கம் சார்.."
"ம்ம்.. வணக்கம்.. என்ன சரவணா, சிவா இங்க என்ன செய்யுறீங்க, ஆபீஸ் போகல" இது அவர்களின் மேனேஜர்..
"ஆபீஸ் தான் போறோம் சார்.. சிவா பைக் பஞ்சர் .. இங்க நிக்க சொன்னேன்..அப்படியே சேர்ந்து போலாம்னு..அதான் கிளம்புறம்.."
"ஆ..ஆ..ஆமா சார்.. நீங்க போங்க நாங்க பின்னாடியே வந்திடுறோம்.." என்று சந்தானம் சாயலில் சொன்னான் சிவா..
"சரிங்க.. தம்பிங்களா.. பாத்து வந்து சேருங்க.." என்றபடியே காரில் கிளம்பினார் மேனேஜர்..
"ஏம்பா சிவா.. சும்மா இருக்க மாட்டியா அவர் காதுல விழுந்தா என்ன ஆகுறது?"
"என்ன சொல்லுவாரு 'ஏம்பா யே வாய் அப்படியா வீங்கியிருக்கு'னு கேப்பாரு..
அட நீ வேறப்பா அவர் வருவார்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்..
சரி அத விடு ஏதோ விசயம் பேசனம்னு சொன்னியே.. மொத அத சொல்லு". என்றான் சிவா..
" ஓ.. அதுவா வண்டில உக்கார் அத பத்தி ஆபீஸ்ல விளக்கமா சொல்றேன்" என்று இருவரும் அலுவலகம் வந்தனர். சிறிது நேரம் வேலை செய்துவிட்டு, சரவணா முன் தினம் கண்ட திகில் கனவையும்,
போலீஸ் ஏட்டய்யா சொன்ன தலை வெட்டிக் கதையையும் சொல்லி முடித்தான்.
"அய்ய்ய்யோ.. ஒரு திகில் படம் பார்த்த எஃபக்ட்டுப்பா..சரி.. இதுல உன்னோட பிரச்சினை என்ன?"
"என்னது என்னோட பிரச்சினை என்னவா? அந்த கனவு தாம்பா என்னோட பிரச்சனையே .. அடிக்கடி ஒரே கனவு திரும்ப திரும்ப வந்துகிட்டே இருக்கு ..அதுவும் சரியா காலையில நாலரை மணிக்கெல்லாம் முழிப்பு வந்துடுது.. அதுக்கப்புறம் தூக்கமே வர மாட்டேங்குது..
அன்னைக்கெல்லாம் வேலையே சரியா பாக்க முடியறதில்ல.
அதுவுமில்லாமா வேலை சரியா செய்யலனு நம்ம சார்கிட்டையும்
திட்டு வாங்கியிருக்கேன்..
அதைக்கூட என்னோட லேப்டாப்ல பதிவு செஞ்சிறுக்கேன்" என்று தன்னோட லேப்டாப்ல எழுதியிருந்ததை காட்டினான்..
"அடப்பாவமே...
என்ன சரவணா.. போன வருசத்தோட,
இந்த வருசம் அடிக்கடி வந்திருக்கு..
சாரி..ப்பா.. நான் கூட உன்ன அப்போ புரிஞ்சிக்காம சத்தம் போட்டுறுக்கேன்.."
"ம்ம்.. பரவாயில்ல சிவா.. இன்னைக்கி உன்கூட வண்டியில பேசிட்டு வந்ததுல எனக்கு எந்த நினைப்பும் வரல..
ஆனா.. போன தடவ திட்டு வாங்குன போது... பேசாம ஒரு மாசம் லீவு போட்டுட்டு ஊருக்குப் போலாம்னு கூட தோனுச்சு.." என்றான்..
"ஆமா.. இந்த பேய் கதை, திகில் கதை,
இப்படி பட்ட புத்தகங்கங்களோ, படங்களையோ நிறைய பாப்பியா?"
"சேச்சே.. அப்படிலாம் ஒன்னும் படிச்சதுமில்ல, படங்கள பாத்ததுமில்ல..
ஏன் கேக்குற சிவா?"
"சந்த்ரமுகி படத்துல ஜோதிகா நிறைய கதைகளையும், புத்தகங்களையும் படிச்சிட்டு, ஆழ் மனசுல அந்த நினைப்புலையே இருந்து, அந்த கதைகள்ல வர கேரக்டராவே மாறிடுவாங்க..
அது போல ஏதாவது இருக்குமானு கேட்டேம்பா"
"ஹா ஹா ஹா.. அப்படிலாம் இல்லப்பா.. எங்க அப்பா அம்மா ஒரு விபத்துல செத்ததையே எங்க அத்தை நான் காலேஜ் படிக்கும் போது தான் சொல்லிருக்காங்க.. எங்க மாமா மிலிட்டரில இருந்ததுனால எப்பவுமே தைரியம் வரும் மாதிரியான கதைகளையும், சம்பவங்களையும் தான் சொல்லுவாங்க.. அவ்வளவு தான்..
மத்தபடி ஒன்னுமில்ல.. ஆனால் இந்த பயங்கர கனவுதான் நம்மல ரொம்ப ஆட்டிப்படைக்கிது.. " என்று சரவணன் சொன்னான்..
"ஆமா.. இதுக்கு தீர்வே இல்லையா?"..
சிவாவின் கேள்விக்கு..
" ஏன்..இல்ல.. நிச்சயம் இருக்கு" என்று
இரண்டு கைகள் இருவர் மீதும் வீழ்ந்தது..
அப்பொழுது...
(தொடரும்)
முந்தைய பதிவுகளை படிக்க
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக