ஆற்றல் அனைத்தும் உன்னில் உண்டு
பேற்றல் பேச்சை விடுவாய் மனமே
சீற்றம் தன்னை விட்டு மறந்தால்
ஏற்றம் நாளும் தொடரும் மனமே..
சூட்சுமத்தின் நிலையதை உரைத்தேன்
ஆசானாகி என்றும் உனக்கு..
திகில் காடு
6
"ஏன் தீர்வு இல்ல.. இருக்குப்பா" என இருவர் தோள்கள் மீதும் கையை வைத்து நின்றிருந்தார் அவர்களின் மேனேஜர்..
"நிச்சயம் தீர்வு இருக்கு..
இன்னைக்கு சீக்கிரம்
வேலை முடிஞ்சி ரெண்டு பேரும் என்னோட வீட்டுக்கு வாங்க..
முக்கியமான விசயங்கள் பேசுறோம்.
இப்ப போய் கூலா வேலைய பாருங்க..
சாய்ங்காலம் பார்க்கலாம்" என்று இருவருடைய தோள்களையும் தட்டிகொடுத்து சென்றார்..
"பாத்தியா சரவணா.. மேனேஜரே சொல்லிட்டார்..கவலைய விடு.. என்னனு போய் பாத்துடுவோம்..
இப்ப வேலைய முடிக்கிறோம்.. சாய்ங்காலம் போய் என்னனு பாக்குறோம்.. ரைட்.. வர்ட்டா" என்று
சரவணன் கைகளை பிடித்து குலுக்கிவிட்டு நகர்ந்தான் சிவா..
"சரிடாப்பா" என்று சொல்லியபடி வேலையில் மூழ்கினான் சரவணன்..
டிங்டாங்..டிங்டாங்..டிங்டாங்.. டிங்டாங்.. டிங்டாங் என சத்தம்போட்டுவிட்டு மணி 5 என்பதை காட்டியது கடிகாரம்..
அலுவலகத்திலிருந்து அனைவரும் கிளம்ப ஆரம்பித்தனர்..
மேனேஜர் தன்னுடைய சிறிய கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு நடந்தபடியே.. "என்ன தம்பிகளா போலாமா..நம்ம கார்லையே போயிடுவோமே"..
" இல்லைங்க சார்.. நாங்க பைக்ல வந்திடுறோம்..சிவாவோட வண்டி மெக்கானிக் செட்ல இருக்கு.. போகும்போது எடுக்கனும் சார்" என்று சரவணன் தன் வண்டி சாவியை கையில எடுத்தபடியே சொன்னான்.
"ஆல்ரைட்..பாத்து வாங்கப்பா" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்..
சரவணனும், சிவாவும் பைக் அருகே வரும்பொழுது மரத்தின் மேலிருந்து ஒரு காக்கா சரவணன் மீது எச்சமிட்டது..
"ச்சேய்..இது வேறையா .. " என்று சொன்னபடி சிவா.. "சரவணா வா .. கேட் பக்கத்துல இருக்குற குழாயில கழுவிடுவோம்" என்று அவனை கேட் அருகே அழைத்துச் செல்ல..
திடீரென
"சடாஆஆர்" என்றொரு பெருஞ்சத்தம்..
இருவரும் திரும்பி பார்க்க,அங்கிருந்த புன்னை மரத்திலிருந்து ஒரு பெரிய கிளை உடைந்து வண்டியின் அருகே விழுந்தது.. இருவரும் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டு இருக்கும்போது, எச்சம் போட்ட காக்கை 'கர்..கர்..' என கத்தியபடி பறந்தது..
"காக்கா..ஆய் போனதும் நல்லதா போச்சுங்க தம்பி..இல்லைனா உங்க ரெண்டு பேர் மேலேயும்ல விழுந்திருக்கும் " என்றபடி கேட் செக்யூரிட்டி ஓடி வந்தார்..
பிறகு மூவரும் சேர்ந்து அந்த மரக்கிளையை இழுத்து ஓரங்கட்டினர்.. மரக்கிளை நல்ல கனமாக இருந்தது.
"நீங்க செஞ்ச புண்ணியம் தம்பி, உங்க குலசாமி தான் காக்கா வடிவத்துல வந்து காப்பாத்தியிருக்கு.. " என்று
சொல்லியபடியே பாட்டிலில் இருந்த தண்ணீரில், சரவணன் மேலிருந்த எச்சத்தை துடைத்தபடி சொன்னார் செக்யூரிட்டி..
"ரொம்ப.. நன்றிங்க பழனியண்ணே"
என்று, தன் கைக்குட்டையால் ஈரத்தை
துடைத்த படியே தன் வண்டியை எடுத்தான் சரவணன்.. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் திரும்பவில்லை என்பதை அவன் முகம் காட்டியது..
உடனே சிவா "சாவிய கொடு சரவணா வண்டிய நான் ஓட்டுறேன்" என்றபடி சாவியை வாங்கி வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்..
"காக்கா உக்காந்து பனம் பழம் விழுந்த கதன்னு தான் கேள்விப்பட்டுறுக்கோம்.
இங்க என்னடானா மரமே ஒடைஞ்சி விழுதே..
அந்தம் மரம் அவ்ளோ வீக்கா..
இல்ல..
அவ்ளோ வெய்ட்டா அந்த காக்கா.. ஒன்னும் புரியலையே..ங்ஙே.." என்று சிவா சொன்னதும்..
"ஹா ஹா ஹா ஹா" என்று சிரித்தான் சரவணன்..
"அப்பாடா.. மூட மாத்தியாச்சுடா.. " என்றபடி வண்டியை கொஞ்சம் வேகமாக்கினான்..சிவா..
சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் அந்த ஆடம்பர அப்பார்ட்மெண்ட் நுழைவாயிலில் நுழைந்ததும் அங்கிருந்த செக்யூரிட்டி அலுவலகத்தில் இருந்து ஓடி வந்த ஒரு வட இந்திய இளைஞன் அவர்களை நிறுத்தி விசாரிக்கையில், சற்று நடுத்தர வயதுள்ள தமிழர் அவர்களை உள்ளே அனுமதிக்கலாம் தெரிந்தவர்கள் தான் என்று அவனுக்கு சொல்லிவிட்டு, இருவருக்கும் வணக்கம் வைத்து அனுப்பினார்.. சரவணன் பல முறை மேனேஜருடன் வந்துள்ளதால் பழக்கம்..
அப்பார்ட்மென்டின் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர் ..மூன்றாவது பிளாக்கின் கீழ் வண்டியை நிறுத்திவிட்டு, லிப்டுக்குள் வந்தார்கள்..
6 ஆம் எண்ணை அழுத்தியதும், லிப்ட் சில வினாடிகளில் 6 ம் தளத்தில் நின்று, இருவரும் வெளியேறி,
வலப்பக்கத்திலிருந்த, "சிவசங்கரன்" என்ற பெயர் பலகைக்கு அருகிலிருந்த அழைப்பு மணி பொத்தானை அழுத்தியதும் சோலைக்குள் குருவிகள் பாடும் இன்னிசை கேட்டு அடங்கியதும்.. 'டொடக்' என்று கதவு திறந்ததும் "வாங்க.. வாங்க.. தம்பிகளா.. என்ன இவ்வளவு நேரம்.. பைக்க தள்ளிகிட்டே வந்தீகளா..ஹிஹிஹி.."என்று சிரித்தப்படியே வரவேற்றார் மேனேஜர்..
வெள்ளை வேட்டி, வெள்ளை டி-சர்ட்டில் இருந்தார் அவர்..
" இல்லைங்க சார்.. உங்க பின்னாடியே தான் கிளம்பினோம்" என்று மரம் விழுந்த விவரத்தை ஒரே நிமிடத்தில் சொல்லி முடித்தான் சிவா..
"அடடே..ம்ம்ம்..அப்படியா.."
என்று வியப்பானார் மேனேஜர்..
உடனே சரவணன்.."எங்க.. சார் பிள்ளைங்க.. மேடம்.. யாரையும் காணோம்.."என்றதும்..
"ஓ..அதுவா.. காஞ்சிபுரத்துல இருக்குற நம்ம மாமனார் வீட்டுல ஒரு விசேசம்.. அதுக்கு காலையிலேயே புறப்பட்டு போயிட்டாங்க.. நான் இனிமே தான் கிளம்பனும்.. சரி.. என்ன சாப்புடுறீங்க.. ஜூஸ் ஆர் காபி, டீ " என்றதும்..
சிவா "ஜூஸ் சாப்பிடலாம் சார்" என்றதும்..
'ம்..சாப்பிடுவோமே..' என்று சொல்லிவிட்டு ஃபிரிட்ஜை திறந்து ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பழரசத்தை மூன்று கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மூன்று பேரும் எடுத்து பருக ஆரம்பித்தனர்..
சிவா, சரவணனின் முகத்தை பார்த்து தலையசைக்க, அவனும் கேட்போம் என்பதை போல தலையாட்ட..
அதை கவனித்த மேனேஜர்..
"புரியுது சிவா.. என்ன தீர்வுனு தானே.. சொல்றேன்.. ஜூசை குடிங்க இதோ வறேன்" என்று சொல்லிவிட்டு ..
அங்கிருந்த அலமாரியில் இருந்த புத்தகங்களில் ஏதோ ஒன்றை தேடினார்.. அலமாரியில் நிறைய புத்தகங்கள்.. சில நிமிட தேடலுக்கு பின்பு முகம் மலர்நதது.ஒரு புத்தகத்தை எடுத்து வந்து சரவணனின் கைகளில் கொடுக்க..
அதன் அட்டைப்படங்கள் பார்ப்பதற்கு மிக வித்தியாசமாக இருந்தது.. தலைப்பு இல்லை..
ஒரு பக்கத்தை திருப்பியதும்....
"கனவு என்னும் மாய உலகம்
நடந்ததும்_ நடக்க இருப்பதும்" என்ற தலைப்பு..
"இப்ப நான் சொல்ல போறது ரொம்ப முக்கியமான விசயம்" என்று ஜூசை குடிக்க ஆரம்பித்தார் மேனேஜர்....
தொடரும்..
விஜயகுமார் வேல்முருகன்
முந்தைய அத்தியாயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக