செவ்வாய், 16 மே, 2017

வந்தை நதி

உச்சி வெயிலு மண்டைய பொளக்குற நேரம்..
நம்ம ஜின்னா பாய் ஏதோ அவசரமா பேசனும்னு வந்தை ஆறுக்கு போன் போட்டாப்ல..
"முத்து முத்தம்மா முத்தமொன்னு தரலாமா..
"முத்து முத்தம்மா முத்தமொன்னு தரலாமா.." (போன் காலர் டியூன் தான்) 'ஊக்கும்.. இதுக்கு மட்டும் ஒன்றும் கொறைச்சல் இல்லை'னு பாய் முனுமுனுத்துகிட்டே இருக்கும் போது
மூன்றாவது முறையாக
"முத்து முத்தம்மா முத்தமொன்னு தரலா.."
"அலா..ஆரு'' எதிர்முனையில்

" அலோ.. தம்பி வந்தை நாந்தாம்பா ஜின்னா பாய் பேசுறேன்.."

"ஆஆஆஆங்.. அல்லுங்க ஆய்.."

"என்னாது.. அள்ளுங்க..ஆய்..யா..
யோவ் தம்பி...நான் ஜின்னா பாய் பேசுறேன்"

"அல்லா(ம்) எரியிது.. ஈக்கிர(ம)ஆ அல்லுங்க ஆய்"

"டேய்.. என்னடா உளர்ற..
விளையாடாதடா..ஆறு'

" அல்லாம் எனக்கி..எரியிது.. அல்லுங்க.. ஆய்.."

"டேஏஏஏய்.. இருடா நேர்லையே வந்து உன்ன பாத்துக்கிறேன்"னு கோவமா போன வச்சிட்டு வேகமா  நடந்து போய்
அவரோட பைக்க எடுத்து  "அடேய்..வந்தை இதோ வரேன்டா" னு பல்ல கடிச்சிகிட்டு பைக்க ஓங்கி ஒரே உதை.. டர்ர்ர்ர்..னு அலறிகிட்டு நம்ம பாயை சுமந்துகிட்டு வண்டி ஓடுச்சு..

கொஞ்ச தூரம் போனதும் வண்டிய அப்படியே நிறுத்தி சட்டை கையில் இருந்து போனை எடுத்து நம்பர அழுத்த
"அலோ.. யாருங்க" னு ஒரு பெண் குரல்..

"அலோ.. நா..ஜின்னா பாய் பேசுறேன்மா.. "

"ஆ.. சொல்லுங்க ணே"

"விஜயகுமார் இல்லையாமா"

"அவரு, காலையில ஒரு போன்கால் வந்ததும், அவசரமா கிளம்பி போயிட்டாருங்க ணே.. ஏங்கிட்டையும் ஒன்னுஞ்சொல்லல.. போகுற அவசரத்துல போனை வச்சிட்டுப் போயிட்டாருங்க ணே"

"சரிமா.. வந்தா நான் போன் செய்ய சொன்னேனு சொல்லுங்க மா"

"சரிங்க ணே" போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது..

"அடச்சே.. இந்த மனுசன் வேற எங்கப்போனாரு.. அவரையும் கூட்டிட்டுப்போய் வந்தை பயல ஒரு வழிபண்ணாலாம்னு பார்த்தா" என்று மீண்டும் வண்டியை வேகமாக ஓட்டிப்போக ஆரம்பிச்சாரு..
வெயிலு வேற மண்ட காய செய்தது..

இடது, வலதுனு மூனு தெரு தள்ளி ஒரு வீட்டுக்கு முன்னாடி நிறுத்த..
அங்க ஏற்கனவே ஒரு பைக் வண்டி நின்டத பார்ததும்..
"அடடே.. இவரும் இங்க தான் இருக்காரா" னு அந்த வண்டியை தட்டிட்டு ..
"அடேய் வந்தைஐஐஐ" னு கோவமா கத்திகிட்டு உள்ளே போனாஆஆஆஆ...

அங்க,
வந்தை வாயில  கீழ் உதட்டுல ஒரு கட்டோடு நிற்க.. ஆள் பார்க்க
வெள்ளைக்காரனுக்கு வந்த நீக்ரோ உதடுபோல இருந்துச்சு..

"அட.. ஆங்க..ஆய்" என கூப்டுகிட்டே வந்தை வர..
"அடடே.. வாங்க பாய்" என்று கோரசாக சொல்லிகிட்டே விஜயகுமாரும், கார்த்திக்கும் நடந்து வர..

"அய்யய்யோ.. என்னடா ஆச்சு வந்தை உனக்கு'னு பாய் கேட்க..

'அது வந்து பாய்ய்ய்" னு கார்த்திக் சொல்ல வர..

"இர்டா..நான்ஏ.. சல்லுறான்.."

"வேண்டான்டா வந்தை , கார்த்திக்கே சொல்லட்டும்.. உனக்கு ஏன்டா கஷ்டம்" னு விஜயகுமார் சொல்ல..

'இல்ல ணே.. நான்ஏ..சல்றான்.."

'ஊக்கும்.. இது தான் உங்கிட்ட பிடிவாதம்.. சொல்லித்தொல"வி.குமார்

"ம்ம்ம்.. சொல்லு.. சொல்லித் தொல' பாய் காட்டமாக..

" அது.. அந்து ஆய்... ஏத்து ஆத்திரி..ஆடியில அடுக்கக்கோக"

பாய் முழிச்சிகிட்டே விஜயகுமார பார்க்க..
(இனி வந்தை பேச , பாய் வி.குமாரை பார்க்க அவர் அதை மொழிப்பெயர்த்து சொல்வதாக கற்பனை செய்துக்கொள்ளுங்க)

"தம்பி கார்த்திக் போயி பாய்க்கு ஒரு கூல்டிரிங்ஸ் வாங்கிட்டு வா..
பாய் உக்காருங்க அவன் என்ன சொல்றான்னா ..
' அது வந்து பாய்.. நேத்து ராத்திரி மாடியில படுக்கப்போக' அப்போ"

"இர்ங்க..இர்ங்க.. ஆந்தான்ணே  அல்லுஅன்.."வந்தை..

'இருங்க..இருங்க..நாந்தான்ணே சொல்லுவேன்' வி்.குமார்

"ஆடில இர்க்குங்கோது...
இடீர்னு.. தஙில் அந்துடுச்ச"

'மாடியில இருக்கும்போது..
திடீர்னு.. தமிழ் வந்திடுச்சா..'

"எண்டு ஏரும்.. ஏசிகிட்டு இருந்தோஆஆ.. நான்.. அகள  கட்டிகிடிச்சி உத்தம் அச்சேனா..அக்கறம் ஆத்தா.. அது நாயி.."

'ரெண்டு பேரும்.. பேசிகிட்டு இருந்தோமா.. நான் அவள  கட்டிப்பிடிச்சி முத்தம் வச்சேனா..
அப்பறம் பாத்தா  அது நாயி..'

"அக்கறந்தான் த்எரிஞ்சத்உ.. அது கனகுனு.. அழுத்தி இடிச்சதுல.. அந்த நாயி குதட்ட கடிச்சிடிச்சிங்க ஆய்"

'அப்பறந்தான் தெரிஞ்சது.. அது கனவுனு.. அழுத்தி பிடிச்சதுல..
அந்த நாயி உதட்ட கடிச்சிடுச்சுங்க பாய்'
டே..டேய். போதுமுடா இதுக்குமேல நானே சொல்லிடுறேன்டா வந்தை..
உலகத்துலேயே முதல் முதலா இப்படி ஒரு மொழிக்கு மொழிப்பெயர்த்தவன் நானா தான் இருக்கனும்.. கொடுமைடா.'னு வி.குமார் தலையில அடிச்சிகிட்டு சொல்ல..

"ஙரிணே.."(சரியாமாம்) மண்டைய ஆட்டுனான் வந்தை..

" பாய்.. பைய்யன் எப்பவுமே முத்தத்துலேயே நினைப்ப வச்சிகிட்டு மாடியில படுத்திருக்கான்.. கனவுல அவனோட ஆளு வந்திருக்கு.. ஏதோ கசமுசா கனவுல.. அதனோட வெளிப்பாடு.. பக்கத்துல படுத்திருந்த நாய் மாட்ட.. பாவம்.. நாய் புடிங்கிருச்சு..
நல்ல வேள பாலமுருகன் கொஞ்சம் தள்ளி படுத்ததுனால தப்பிச்சாப்போல"

"என்பது பாலாவு வந்திருக்காப்லையா.. ஆளு எங்க?"

"ஆமாங்க பாய்.. அவர்தான் காலையில போன் செஞ்சி விசயத்தை சொல்லி ஆன்டனி ஆம்ரோஸ் டாக்டர்ட கூட்டிப் போறேன் வாங்கனு சொல்ல.. நானும் அங்க போயி பார்த்தா  .. டாக்டர் உதட்டுல தையல் போட்டு பிளாஸ்டர் ஒட்டிட்டு இருந்தார்.. அப்பறம், கொஞ்சம் முன்னாடி தான் வந்தோம்.. பாலா நம்ம கடைக்கு மருந்து வாங்க போயிருக்கார்.."

"அடப்பாவமே..  இது தேவையா இவனுக்கு.." என்று சொல்லிகிட்டு இருக்கும்போதே பாலாவும், துரை தேவன் அண்ணனும் " வாங்க பாய்"னு அழைத்தபடி வந்தனர்..

"அடடே.. வாங்க பா.. இப்ப தான் வரீங்களா துரை'

" அப்பவே வந்துட்டேனுங்க பாய்.. போய் டாக்டர  சத்தம் போட்டுட்டு வரேனுங்க"

"ஏன்?"

"பின்ன என்னங்க பாய்.. மொத்தமா வாயில  தையல போட்டு அடைக்கிறத விட்டுட்டு.. பாதிய மூடியும், மூடாமலும் விட்டுட்டார்.. இப்ப என்னடானா நொய்நொய்னு பேசி நம்ம உயிர எடுக்குறான்.. அதான்.. கோபத்துல ரெண்டு காட்டு காட்லாம்னு போனேன்"

"ஊக்கும்.. எல்லாருமே வந்தையால நொந்து தான் போயிருக்காங்க போலயே... ஆனா... இனி கையால எழுதி நம்மல இம்சை செய்வானே" னு சொல்லிகிட்டு இருக்கும் போதே..
கார்த்திக் கூல்டிரிங்ஸோட வர..
பின்னாடியே ஒரு நாயும் வர..

"இந்த நாய் தாங்க பாய்" னு சொல்லி வாய் மூடுறதுக்குள்ள

என்ன நினைச்சிச்சோ தெரியல .. அந்த நாய் விறுவிறுனு வந்தைகிட்ட போயி..
போன வேகத்துல அவன  கடிச்சி வச்சசிடிச்சு...
"ங்ஙே..ங்ஙே..ங்ஙே" னு வந்தை அலற..

பாலமுருகன் போன எடுத்து "அய்யய்யோ... டாக்டர் .. நம்ம வந்தைய திரும்பவும் நாய் கடிச்சிருச்சு'

" அச்சச்சோ... அப்படியா எங்க"

"கையில  டாக்டர்.."

"சரி..சரி.. கூட்டிட்டு வாங்க" போன் கட்டாக..

"அடடே இது என்னடா .. நாய் கடிச்சுருச்சேனு வருத்தப்படுறதா..
இனி கொஞ்ச நாளைக்கி எழுதி இம்சிக்க மாட்டானேனு சந்தோச படுறதா.. அரே அல்லாஹ் என்னடா இது
வந்தைக்கு வந்த சோதனை.." தலையில தட்டிகிட்டு இருக்கும் போதே

துரை, பாலா, கார்த்திக், விஜயகுமார் நால்வரும் வந்தகயை தூக்கிட்டு
"ஆட்டோ..ஆட்டோ.. " னு கத்திகிட்டே ஓடுனாங்க..

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக