செவ்வாய், 30 மே, 2017

வந்தையும் மாய உலகமும்..

#வந்தையும்_மாய_உலகமும்

இந்த வீதி எங்குதான் சென்று முடிகிறது என்று , இன்று பார்த்தே விடுவோம் என்ற எண்ணத்தில் தொடர்ந்து நடக்கலானான் வந்தை ..
ஏதேதோ சிந்தனைகள், என்னென்னவோ நினைவுகள் கடக்கும் ஒவ்வொரு அடியிலும்..
ஏதோ ஓர் எதிர்பார்ப்பு எதிரில் என்ன இருக்கும் என்று அறியும் ஆவலில்..

ஏதேதோ சப்தங்கள், ஓசைகள், இசைகள் என மாறி மாறி கேட்க,
காதின் மடல்கள் தான் சற்று விரிபட கேட்டபடியே நகர்ந்தான்..

திடீரென கண்களின் விழிகள் அகல.. விரைத்து அசையாமல் நின்றுவிட்டான்...
எதிரில்...

எதிரில்...

சிறு சிறு ஒளித்துளிகள் இணைந்து ஒரு பெரிய பந்தினைப் போல உருவாகி,
வெளிர் நீலத்தில் ஒளிர ஆரம்பித்தது..
அந்த இடமே அவ்வெளிச்ச சாயத்தால் ஒளிர ஆரம்பித்து..
வந்தையின் முகத்திலும் வெளிச்சம் பரவ.. இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தான்...
மெல்ல நகர்ந்து அப்பந்தின் அருகில் செல்ல ஆரம்பிக்க,
"வந்தை நில்.. நானும் வரேன்" என்றொரு குரல் கேட்க..
திரும்பினான்..
அங்கே..
பால முருகன் மூச்சு வாங்க ஓடி வந்துக்கொண்டிருந்தான்..

மூச்சு வாங்க ஓடிவந்த பாலா..
"வந்தை.. இந்தப்பக்கம் போவக்கூடாதுனு எங்க தாத்தா தமிழ் குமரன் நிறைய தடவ சொல்லிருக்காரு.. ஏன்னு கேட்டால் சொல்ல மாட்டாரு..
நானும் போகனும்னு நினைப்பேன் ஆனால் முடியாது..
இப்ப நீ இந்தப்பக்கம் போனத பார்த்தேனா .. அதான் நானும் உன் பின்னாடியே வந்தேன்" என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்..
"ஓ.. அப்படியா.. எனக்கும் தான் ரொம்ப நாளாக ஆசை.. என்னோட சின்ன தாத்தா லட்சுமணன் னும் அப்படிதான் சொல்வாரு ணே.. இன்னைக்கி பார்த்தே ஆகனும்னு நினைச்சிகிட்டு,  நம்ம உருப்புட்டானந்தா கிட்ட கேட்டேனா... 'எதுவாக இருந்தாலும் அடுத்தவங்க்கிட்ட கேட்டும் உனக்கு புரியல இல்லனா தெரியலைனா நீனே இறங்கி பார்த்து தெரிஞ்சிக்க தம்பி' னு சொல்லிட்டாரு .. அதனாலதான் இன்னைக்கி துணிஞ்சி நடந்தாச்சு" என்று சொல்லியபடி இருவரும் அந்த ஒளிரும் பந்தை நோக்கி போக,
அந்த பந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி அதாவது அவர்களிடம் சிக்காமல் நகர்ந்தது...

இருந்தாலும் அதை விடாமல் இருவரும் வேகமாக பின்தொடர அதுவும் வேகமாக நகர ஆரம்பித்தது.. பின்பு இருவரும் ஓட.. அதுவும் வேகமாக ஓட..
எப்படியோ ஓடி அதை இருவரும் பிடித்தவுடன்..
அது..
வெடித்து சிதறியது..
அப்போது..

அப்பொழுது,
வந்தையும், பாலாவும் காற்றில் பறந்தபடி மிதந்துக்கொண்டிருந்தனர்..
அவர்கள் இருவர் கண்களுக்கும் அங்கே இரு உடல்கள் இருப்பது தெரிந்தது.. அது யாராக இருக்கும் என இருவரும் கேட்டுக்கொண்டே அருகில் சென்றதும்...
இருவருக்கும் அதிர்ச்சி..

அது அவர்களின் இருவருடைய உடல்களே தான்..

"அய்யய்யோ.. நாம இப்போ செத்து ஆவியா மாறிட்டோமா..
அய்யய்யோ எங்க தாத்தா சொன்னத கேட்காம போயிட்டேனே..இப்ப நம்மல காணாம  நம்ப வீட்ல தேடுவாங்களே.. இந்தப்பக்கம் கூட யாரும் வரமாட்டாங்களே" னு பாலா அழ ஆரம்பிக்க....

"அய்யய்யோ.. ஆமா பாலாணே.. நானும் கேக்கலையே.. எல்லாம் அந்த உருப்புட்டானந்தாவால வந்த வினை.. யோவ்..உருப்புட்டானந்தா உனக்கு நா என்ன பாவம்யா செஞ்சே(ன்).. இப்படி ஆயிட்டோமே யா..
மவனே நீ மட்டும் கையில கிடைச்சேஏஏ.." என வந்தை பல்லை கடிச்சி சொல்லிகிட்டு இருக்கும்போதே.. திடீரென ஒரு புகைமண்டலம்.. பார்த்தால்..
அங்கே உருப்புட்டானந்தா..

"தம்பீகளா.. நீங்கள் உங்கள் தேடலில் துணிந்து இறங்கிவிட்டீர்கள்.. அதற்காக இதையெல்லாம் பார்த்தால் முடியாது" என..

"போயா..போ.. இப்ப வந்து வியாக்கியானம் பேசுற.. இப்ப நாங்க தான் செத்துபோயிட்டோமே.. எங்க வீட்ல எல்லாரும் பாவம்,
நாங்க இல்லாம  எங்களைத் தேடி எப்படிலாம் அலைவாங்க.." னு வந்தை கத்த..

"தம்பி .. நீங்க ரெண்டு பேரும் செத்துப்போயிட்டீங்கனு யாரு சொன்னா.. நல்லா கிட்டப்போயி பாருங்க"

இருவரும் கிட்டபோய் பார்த்தார்கள்..
மூச்சு விடுவதால் நெஞ்சு மேலும் கீழும் அசைவது தெரிந்தது..
இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில்..
அதில் பாலாவின் குறட்டை வேறு..

"பார்த்தீர்களா.. தம்பி.."

"ஆமாம்..உருப்புட்டானந்தா..
ஆனால்.. அந்து பந்து வெடிச்சதே" வந்தை கேட்க..

"அப்படியிருந்தால் உங்கள் உடல்கள் சிதறியிருக்கனுமே..
ஏன் அப்படி ஆகலை தெரியுமா தம்பிகளா?"

"அதான் தெரியலைங்களே சாமீ" பாலா...

"ஏன்னா.. இப்ப நீங்க இருக்குறது
'மாய உலகம்' எப்படியோ உள்ளே நுழைந்துவிட்டீர்கள்.. இனி வெளியேறுவது உங்கள் திறமை தம்பீகளா.. சிக்கலான நேரங்களில் மட்டும் நான் வருவேன்..சரியா.. நான் கிளம்பட்டுமா?" என கேட்க..

"ஒரு நிமிசம் உருப்புட்டானந்தா..
எங்க வீட்ல எங்களைத் தேடுவாங்களே.." என வந்தை கேட்க..

"ஒன்னுந் தேடமாட்டாங்க..
உங்க இம்சை ரெண்டு நாளைக்கு இருக்காதுனு உங்க தாத்தாக்கள் தமிழ் குமரனும் யும்.
லட்சுமணனும் னும் நிம்மதியா இருப்பாங்க... சரி.. நான் வரட்டா" என்று உருப்புட்டானந்தா இருவருக்கும் டாட்டா சொல்லிவிட்டு கிளம்பினார்..

இருவரும் கையை ஆட்டிவிட்டு, அந்த பாதையில் மிதக்க ஆரம்பித்தார்கள்..
சிறிது தூரம் போனதும் ஒரு பெரிய மரம் அது மிக அகலமாக இருந்தது.. அதில் ஒரு பெரிய பொந்து.. இருவரும் அதனுள் நுழைந்து மறுபுறம் வந்தாஆஆஆஆல்....

(தொடரும்)

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக