ஞாயிறு, 29 ஜூலை, 2018

பயணம் போகும் பாதையில்

பயணம் போன பாதையில்..

பேருந்தை விட்டு இறங்கியதும்
கால்களை குத்தும் சரளைக்கல்..
குச்சி கையால் அளந்து
பிச்சிப்பூவை முழம்போடும்பாட்டி..
பாதை ஓரம் உருளும்
போதை இளைஞர்..
தள்ளுவண்டி காய்கரிகாரரிடம்
பேரம் பேசும் அப்பார்ட்மெண்ட் பெண்..
பீட்சா உணவு ஊழியர் எந்திரத்தில்
பண அட்டை தேய்க்கும் மத்தியவயதுகாரர்..
கையேந்தும் முதியவரை கண்டும்காணமலும்
ஆன்றாய்ட்டு போனில் பேசும் நவநாகரிக இளைஞன்..
கபடி விளையாடும் சிறுவர்களை விரட்டி
கிரிக்கெட் விளையாடும் கார்பரேட் நிறுவனத்தார்..
விருந்தினர் மாளிகை அருகே குப்பையில்
குவிந்திருக்கும் மீதமான உணவு..
காலுடைந்த தெரு நாய்க்கு பிஸ்கட் ஊட்டும்
அழுக்குத் துணி சிறுவர்கள்.
இவர்களை எல்லாம் கடந்து
பெரிய சொகுசு மாளிகை அருகே
காரை பெயர்ந்த அடர்ந்த மரங்களுடன்
உடைந்து கட்டுப் போட்டுள்ள வாயிற் கதவு
வீட்டினுள் முடிந்தது பயணம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக