வெள்ளி, 14 செப்டம்பர், 2018

தலயின் சிந்தனை ரகசியம்

#தலயின்_சிந்தனை_ரகசியம்..
(பண்ணையாரும், தலயும்)

#தல: பண்ணையார்.. அதோ போறார்ல அந்த அவரு..

#பண்ணையார் : ஆமா.. அவருக்கு என்ன இப்ப?

தல: அவரு அவங்க வீட்ல சிங்கம் மாதிரி..

பண்ணையார் : அடடே.. அவரு அவ்ளோ பவர்ஃபுல் வேலையில இருக்குற ஆளா?

தல: அதான் இல்ல.. காட்டுல எப்படி பெண் சிங்கம் வேட்டையாடிட்டு வந்து போடுற மான் கரிய, கொஞ்சமும் கூச்சமும் இல்லாம முக்காவாசி தின்னு தீத்துபுட்டு, ஏப்பம் விட்டு சோம்பேரியா படுத்திருக்குமே அதுபோல..
அவரு அவங்க வீட்ல..

பண்ணையார் : சும்மா சொல்லாதிங்க தல.. அவரு வீட்டு வேலையாவது செய்வார்ல..

தல: அதுலாம் கிடையாதுங்க பண்ணையார்.. அந்தம்மா தான் எல்லா வேலையும் செஞ்சி வச்சிட்டு  வேலைக்குப் போவாங்க..
இப்பக்கூட அவரு நொறுக்குத் தீனிதான் வாங்கிட்டுப் போறாரு..
சும்மா இருந்து போரடிச்சா திம்பாராம்..

பண்ணையார் : அடடே.. அப்ப அது சிங்கம் இல்ல அசிங்கம்னு சொல்லுங்க ..
சரி தல.. உங்க கிட்ட ஒன்னு கேக்கனுமே..

தல: கேளுங்க பண்ணையார்..

பண்ணையார் : வர வர எப்புடி இப்படி சிந்திக்கிறீங்க?

தல: ஓ.. அதுவா.. ஒரு தடவ நம்ப தாஸ் அண்ணன் வந்து, மாஸ்டர் ஒரு லேகியம் கொடுத்தாராம் அத நீங்க கொடுக்க சொன்னதா கொடுத்துட்டுப் போனார் பண்ணையார்.. அத சாப்பிட்டதுல இருந்து தான் இப்படி..

பண்ணையார் : (மனதிற்குள்) அடடே.. மாஸ்டரோட லேகிய இம்சையிலிருந்து தப்பிக்கலாம் னு பார்த்து, அத ஈகே கிட்ட கொடுத்தா, அவரு அத தாஸ்கிட்ட தள்ளி விட்டு, கடைசியில தாஸ் இவர்கிட்ட தள்ளி விட்டுட்டாரா.. இந்த ஆளு(தல) நாம பேதி மாத்திரையே கொடுத்தாலும் , 'பண்ணையார் கொடுத்தா பஞ்சாமிர்தம்'னு சொல்லி சாப்புடுற ஆளாச்சே.. ஆக மொத்தம் மாஸ்டரோட லேகியம் ஏதாவது வடிவத்துல வந்து இம்சிக்கிதேனு.. நினைச்சிகிட்டு இருக்கும் போது..

தல: பண்ணையார்..பண்ணையார்.. என்ன முழிச்சிகிட்டே தூங்குறீங்களா?

பண்ணையார் : ஆ..ஆங்.. அதுலாம் ஒன்னுமில்ல.. உங்களோட அறிவுப் பூர்வமான சிந்தனைய நினைச்சி எருமை பட்டு.. ச்சேய் பெரும பட்டு அசந்துட்டேன் தல..

தல: போங்க பண்ணையார் அடிக்கடி என்னை புகழாதீங்கோ.. கிகிகி..(என்று கீழ பார்த்து சிரிச்சிகிட்டே நிமிர்ந்து பார்க்க..

பண்ணையார் ஆள விடுடா சாமீனு வேக வேகமாக ஓட்டமெடுக்க..

'நில்லுங்க பண்ணையார்..நில்லுங்க பண்ணையார்'னு  தல விரட்டிகிட்டே போக..
அங்க இருக்குற ஆடு மாடெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருந்துச்சு..

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக