காத்திருந்த கண்கள்.. (1)
நடுநிசி தாண்டி பாதி தேய்ந்த நிலாவின் வெளிச்சம்.. ராப்பூச்சிகளின் தொடர் சத்தம்.. படபடத்து மரம் விட்டு மரம் தாவி அமர்ந்த ஆந்தையின் அலறல் என சற்று பீதியடைய வைக்கும் சூழல்..
ஆளுயர ஒரு சிலம்பத்தடி, கரும்போர்வை போர்த்திய உருவம்.. சுருட்டை பிடித்தபடி 'சரட்..சரட்..' என கட்டை செருப்பை தேய்த்தபடி நடக்க..
தூரத்தில் .. ஒரு நாய் குரைக்கும் சத்தம் வர..
தன் நடையின் வேகத்தை கூட்டி,
நாய் குரைப்பு வந்த திசையை நோக்கி நடந்து சற்று நேரத்தில் அங்கே செல்ல..
கழுத்தறுபட்ட நிலையில் ஒரு நாய் துடித்துக் கொண்டிருக்க..
திகைத்துப் போன அந்த உருவம் ..
சுருட்டை அனைத்துவிட்டு ..
சுற்றியும் தன் கூரிய கண்களால் நோட்டமிட்டது..
நாயின் துடிப்பு அடங்க.. அதை ஒரு ஓரமாக நகர்த்திவிட்டு .. புதர் மண்டிக்கிடந்த இடங்களில் தன் கைத்தடியால் தட்டிப் பார்த்து நகர்ந்துக் கொண்டே போக..
"தடதட" வென யாரோ ஓடும் சத்தம்..
சுதாரித்துக்கொண்ட கருப்பு உருவம் ..
ஆள் ஓடிய சத்தம் வந்த திசையை நோக்கி வேகமாக ஓட..
திடீரென யாரோ அந்த உருவத்தின் கால்களை தடுக்கிவிட .. நிலைத் தடுமாறி அந்த உருவம் விழ, கைத்தடி கைநழுவி தூர விழ ,அதன் போர்வை விலக.. கண்கள் கோபத்தில் தகித்தபடி #கறுப்பாண்டி..
அந்த ஊர்க்காவலன்..( நாம் கறுப்பு என்றே அழைப்போம்)
நிலைத்தடுமாறி விழுந்த கறுப்பை திடீரென, எங்கிருந்தோ தாவி வந்த முகமூடி மாட்டிய இருவர் அழுத்திப் பிடித்தனர்..
திமிறிய கறுப்பை அசைய விடாமல் இருவரும் அழுத்திப்பிடிக்க..
சற்றுத் தள்ளி.. கையில் பளபளக்கும் ஒரு வாளோடு இன்னொரு முகமூடி மனிதன்..
கறுப்பை நோக்கி வர ஆரம்பிக்க..
கறுப்பின் முகத்தில் எந்தவித அதிர்ச்சியும் இல்லை..
ஒரு கேலி புன்னகை மட்டும்..
அந்த முகமூடி மனிதனின் கண்களை பார்த்து..
வாளேந்தியவனின் கண்களில் கோப பார்வை தெறித்தது.. வேகமாக வாளை உயர்த்தியபடி கறுப்பை நோக்கி பாய..
அதிரவைக்கும் உறுமலோடு பாய்ந்து வந்த ஒரு கருப்பு கோம்பை நாய்..
வாளேந்தியவனின் கைகளை மூர்க்கமாக குதற அலறியபடி விழுந்தான் அவன்..
கறுப்பும், தன் முழு சக்தியையும் திரட்டி தன்னை பிடித்திருந்தவர்களை உதறிவிட்டு காற்றில் பறக்க விட்டபடி..
"ஹா ஹா ஹா ஹா ஹா ஹா" என ஒரு அதிரடி சிரிப்பை சிரித்து
"ஏய்ய்ய்.. என்னோட ஊர்லையே வந்து வேலை காட்டுறீங்களாடே.. ஒரு நாயை கழுத்தறுத்துப் போடும் போதே நினைச்சேன் அது இந்த செங்கோடனோட வேலைன்னு.. அடேய்..
செங்கோடா உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா.. கண்ணு முழிய வச்சே யாருன்னு கண்டுபிடிப்பான்டா இந்த கறுப்பாண்டி..
மறுபடியும் உங்க வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களாடா.. இனி அந்த ஆண்டவனே வந்தாலும் உங்கள காப்பாத்த முடியாதுடா.. ஹா ஹா ஹா ஹா ஹா" என்று கர்ஜித்து அடங்க..
கொம்பையனும் (நாய்) பாய்ந்து வந்து கறுப்பின் அருகில் வந்து கம்பீரமாக முறைத்து உறுமியது..
இனி அதிரடி ஆரம்பம்..
(தொடரும்)
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக