#வேட்டைக்காடு 1
மேற்கு கொஞ்சம் கொஞ்சமாக சிவக்க..
சூரியன் மறைந்துக் கொண்டு இருக்க.. மெல்ல மெல்ல இருள் படர ஆரம்பித்தது..
அதுவரை அந்த ஆலமரத்தில் கூச்சலிட்டு கொண்டிருந்த பறவைகளின் ஒலிகள் அடங்கி.. அடர்த்தியான அமைதி..
ஆள் அரவமற்ற வீதி.. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீதி விளக்குகள் எரிந்துக் கொண்டிருக்க..
'டக்..டக்..டக்.டக்..' யாரோ நடந்து வரும் ஓசை கேட்க.. ஒரு நீளமான நிழல் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி..
நீண்ட அங்கி அணிந்த ஒரு உருவத்தின் காலடிக்கு நேராய், அந்த உருவத்தின் அளவாய் மாறியது நிழல்..
சலனமற்ற கண்கள்..
பரிதாபத்திற்கு உரியது போன்ற முகம்..
தாடையில் சிறிய குறுந்தொடி..
நீளமாக வளர்ந்த தலைமுடி..
தன் அங்கியின் பையினுள் கைகளை விட்டபடி அங்கும் இங்குமாக வேகவேகமாக திரும்பி பார்த்தபடி நடந்து வந்தது..
ஒரு குப்பைத் தொட்டி..
அதனை கடந்து போகயில் சற்று தள்ளியிருந்த ஒரு சந்திலிருந்து மூன்று பேர் .. இளவட்டமான உடல்கள் வெளியே வர..
அவர்களை கடந்து வேகமாக நடந்து கடந்தான் அந்த நீளமான முடிக்காரன்..
மூவரும் அவனை பின் தொடர ஆரம்பித்தனர்..
அவன் தன் அங்கியின் பையிலிருந்து கையை எடுக்காமல் நடையை வேகமாக்கினான்..
அந்த மூவரிம் வேகமாக ஓடி வந்து அவனை தடுத்தனர்..
அதில் ஒருவன் "ஏய்.. பையில என்ன வச்சிருக்க? ஒழுங்கா அத வெளியே எடு" சொல்ல..
அவன் "என்கிட்ட உங்களுக்குத் தேவையானது ஒன்னுமில்ல.. " சொல்ல..
இன்னொருவன் "அப்போ ஏன் கைய உள்ளையே வச்சிருக்க?"
அவன் "அது உங்களுக்குத் தேவையில்லாத விசயம்.. என்னை தடுக்காதீங்க..விடுங்க" சொல்ல
மூன்றாமானவன் "என்னடா பெரிய பருப்பாட்டம் பேசுற.. " என்று சொல்லியபடியே அவன் கன்னத்தில் அடித்தான்..
அப்பொழுதும் அவன் தன் கையை அங்கியிலிருந்து எடுக்காமல் அடியை வாங்கிக்கொண்டு வேகமாக நடக்கப்பார்த்தான்..
மூவரும் அவனை விடாமல் சூழ்ந்துக்கொண்டனர்..
ஒருத்தன் அவன் தலையில் அடித்தான்..
"வேண்டாம்.. என்ன சீண்டாதிங்க.. விட்டுடுங்க.. சொன்னா கேளுங்க.. உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன்" என்று அவன் சொல்ல..
"டேய்.. என்னாடா நீ பெரிய மயிரா நீ" என்று சொல்லியபடி ஓங்கி முகத்தில் குத்தினான் ஒருவன்..
இரண்டாமவன் , அவனின் கால்களுக்கு நடுவே தன் கால்களை நீட்ட, மூன்றாமவன் அவனை வேகமாக தள்ளிவிட,
கீழே இடறி விழுந்ததில் அந்த நீண்ட அங்கி காரனின் முகத்தில் அடிபட்டதில் மூக்கிலும், உதட்டிலும் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.. பார்க்க பரிதாபமாக இருந்தது..
அப்பொழுதும் அவன் சொன்னான் "மறுபடியும் சொல்றேன் வேண்டாம் விட்டுடுங்க.. தேவையில்லாத பிரச்சினைல சிக்கிக்காதிங்க.. கடைசியா எச்சரிக்கிறேன்" என்று சொன்னதும்.. மீண்டும் ஒருவன் அவனை அடிக்க, அடி வாங்கிக் கொண்டு சற்று தள்ளி நின்றான்..
"என்னடா பாக்கெட்ல வச்சிறுக்க எடுடானா?' என்று கத்தியபடி அவன் அங்கியின் பையிலிருந்த கையை வேகமாக இழுக்க..
கையில் முட்டைகள் உடைந்து பிசுபிசுப்பாக இருந்தது..
" டேய்.. இந்த முட்டைக்காகவாட எங்களை வெறுப்பேத்துன" என்று மூவரும் தொடர்ந்து அடிக்க, அவன் அடியை வாங்கிக்கொண்டு திருப்பி அடிக்காமல் அங்கிருந்து மறுபடியும் நகர முற்பட,
மூவரில் ஒருவன்.. "மச்சான்.. இவன் நம்பல ரொம்ப வெறுப்பேத்திட்டான்.. பொருள எடு போட்டுடுவோம்" என்று சொல்ல ஒருவன் ஒரடி உள்ள கத்தியை எடுத்து அவனை குத்தப் போக..
சற்றென்று அவன் சுதாரித்து, அங்கியின் இன்னொரு பையிலிருந்து ஏதோ ஒரு பொடியை எடுத்து, உடைந்த முட்டை கருவில் கண்ணிமைக்கும் நேரத்தில் கலந்து மூவர் மேலும் தெளிக்க..
திடீரென மூவரின் மீதும் தீ எரிய ஆரம்பிக்க.. மூவரும் அலறியடித்து உருண்டு புரண்டு.. மறுபடியும் எழுந்திருக்க.. தீ மறுபடியும் எரிய அலறியடித்து ஓடினார்கள்..
அவன் தன் வாயில் வழியும் ரத்தத்தை துடைத்துக் கொண்டு, சிரித்தான்..
பின்பு கோவமாக தன் முகத்தை மாற்றிக் கொண்டு "யாருகிட்ட உங்க வேலைய காட்டுறீங்க.. அடுத்த தடவ இந்த #மணிமாறன் கண்ணுல மாட்டுனீங்க.. சாம்பல் கூட மிஞ்சாது" என கத்த அந்த மூவரும் விழுந்தடித்து ஓடினார்கள்..
(தொடரும்)
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக