ஜூஸுக்கு ஆசைப்பட்டு 1
(அப்புத் தாத்தாவும், குப்பு பாட்டியும்..)
"நாங்களாம் அந்த காலத்துல" என பேச ஆரம்பிச்சார் அப்புக்குட்டித் தாத்தா..
"ம்க்கும்..அந்த லச்சனம் எங்களுக்குத் தெரியாதாக்கும்.. ஏங்க பேரக்குழந்தைங்க கிட்ட இல்லாததையும், பொல்லாததையும் அள்ளி விட்டுகிட்டு இருக்கீங்க.. நல்லதா நாலு விசயங்கள சொல்லிக்கொடுங்கனா..
'அந்த காலத்துல, நொந்த காலத்துலனு' புருடா விடுறது..
பேரக் குழந்தைகளா இங்குட்டு வாங்க உங்களுக்காக லெமன் ஜூஸ் போட்டிருக்கேன் வந்து குடிச்சிட்டு போய் விளையாடுங்க" என்று குப்புலட்சுமி பாட்டி கூப்பிட பிள்ளைகள் அவரிடம் ஓடினர்..
தாத்தாவின் முகம் அஷ்டகோணலாகி,
'அடிப்பாவி ஆரம்பத்துலேயே எண்டு கார்டு' போடுறீயே.. இது உனக்கே நல்லாயிருக்கா..கிராதகி, குண்டோதரி, மண்டோதரி'
வாய்க்குள்றயே பாட்டிய திட்றா மாதிரி முனகுனாரு..
"என்ன அங்க முனகல் " என்று குப்பு பாட்டிக் கேக்க..
"ஒ..ஒ..ஒன்னுமில்ல குப்பு.. லெமன் ஜூஸ் போட்டுருக்கியா.. எனக்கு ஒரு கிளாஷு கொடேன்னு சொல்லிகிட்டு இருந்தேன் ஹி ஹி ஹி" னு தாத்தா இளிக்க...
"அய்யோ.. நல்லாவே.. இளிக்கிறீங்களே..
உங்கள பத்தி எனக்குத் தெரியாது.. இருங்க பேரப்பிள்ளைங்க குடிக்கட்டும் மிச்சமிருந்தா தரேன்" னு பாட்டிச் சொன்னதும்..
தாத்தா அவரோட நாக்கை சப்புக்கொட்டியபடியே அந்த ஜூஸ் பாத்திரத்த ஏக்கத்தோட பாத்துகிட்டு இருந்தாரு..
பிள்ளைங்களுக்கெல்லாம் கொடுத்தது போக பாதி டம்ளர் ஜூஸை தாத்தாவிடம் கொடுக்க,
என்னமோ பலநாட்கள் சோறு தண்ணியே கண்ணுல பாக்காதவன் போல கடக் கடக் னு குடிச்சு முடிச்சுட்டு நாக்கால் உதட்டை ஒரு சுத்து நக்கி முடிச்சு 'ஆகா எவ்வளவு டேஸ்ட்டா செஞ்சிருக்கா .. நம்பலுக்கு இதுபோல ஒருதடவகூட செஞ்சி தரலையே, எலுமிச்சை,பனைவெல்லம்,இன்னும் வேற என்னென்னமோ போட்டு செஞ்சிருக்காளே ..'' என்று தன் விரலை தம்ளரில் விட்டு வழிச்சு அஞ்சி விரலையும் நக்குனாரு.. அப்படியே தலைய தூக்கி பாத்தாரு .. ஜூஸ் போட்ட வெண்கல குண்டான் பானை அங்க இருந்தது..
கண்ணுல ஒரு ஒளிவட்டம் போல மின்னுச்சு.. அங்குட்டும் இங்கிட்டும் ஒரு பார்வை பார்த்தாரு யாரையும் காணோம்..
அந்த பானைக்குள்ள எட்டிப்பார்த்தாரு.. உள்ள சில சொட்டுகள் ஜூஸு ஆடிகிட்டு இருந்துச்சு.. அப்படியே அந்த பானையத் தூக்கி வாய்க்கு நேரா கவுத்த, ரெண்டு மூனு சொட்டுகள் நாக்கில் பட்டு தொண்டைக்குள்ள இறங்க.. இன்னும் கொஞ்சம் கிடைக்காதானு ஏக்கம் .. அந்த ஏக்கத்தோட விளைவு.. தன் நாக்காலையே அந்த பானையின் உள்பக்கம் நக்க ஆரம்பிக்க.. ஆர்வ மிகுதியில அந்த பானைக்குள்ள தலை மாட்டிக்கிச்சு..
லேசாக எடுத்து பார்த்தார் வரல..
அப்படி இப்படி ஆட்டி எடுக்கப் பார்த்தார் வரல..
கொஞ்சம் வேகமாக இழுத்துப்பார்த்தார்.. ஊஹும்..வரல..
''ம்..ம்ம்..ம்ம்." என்று சத்தம் போட்டு இழுத்தார் .. வரவே இல்ல.
"அய்யய்யோ.. குப்பு..குப்பு.. தலை மாட்டிக்கிச்சு.. மாட்டிக்கிச்சு''னு கத்துனாரு.. அவரோட நேரம் அவர் குரலு அந்த பானைய விட்டு வெளியே போகல..
வாசல் பக்கம் போகலாம்னு வேகமா நகர்ந்தாரு.. நேரே வாசலுக்கு பக்கத்துல இருந்த சுவத்துல இடிச்சி பொத்துனு கீழே விழுந்தாரு..
தலையில பானை இருந்ததுனால அடியில்லை..
தரையில உக்காந்து தவழ்ந்த படியே தரையை தடவித்தடவி வாசலைத் தேடி ஒரு வழியா கண்டு பிடிச்சு.. வாசல்கிட்ட நின்னு " குப்பு..குப்பூ.." னு மறுபடியும் கத்த.. அந்த நேரம் பாத்து பேரப்பிள்ளைகள் டீவியில் கார்ட்டூன் சேனலின் சத்தத்தை அதிகமாக்கி பார்த்துக்கொண்டு இருக்க தாத்தாவின் சத்தம் எடுபடல..
அந்த நேரம்பார்த்து தாத்தாவின் பக்கத்துவீட்டு இந்திக்கார பையன் 'சுண்டக்கா பாண்டி' வந்தான்..
(என்னடாயிது இந்திக்காரனுக்கு சுண்டக்கா பாண்டினு பேரானு பாக்குறீங்களா.. அவனோட உண்மையான பேரு #சுரானாக்த்தா_பாண்டே அந்த பேரு தாத்தா வாயில நுழையாததால அவன #சுண்டக்கா_பாண்டினு மாத்திட்டாரு.. அவன் தாத்தாவோட தோஸ்த்.. இன்னொருத்தனும் இருக்கான்.. அவனப்பத்தி, அவன் வரும்போது சொல்றேன்)
அவன் வந்து தாத்தாவோட தோற்றத்த பார்த்தவுடனே "ஹைய்யய்யோ.. தாதா கர்மே சோர் பந்துட்டான்.. திருடன் பந்துட்டான்" கத்த..
"அடேய்..அடேய்.. நான் திருடன் இல்லடா... நாந்தான் .. நாந்தான்.. உன்னோட தாத்தா தான்டா.. மண்டையில குண்டான் மாட்டிக்கிச்சுடா.. அடேய் சுண்டக்கா பாண்டி கொஞ்சம் எடுத்து விட ஹெல்ப் பன்றா" னு தாத்தா அலற..
தாத்தாவோட குரல கேட்டவுடனே
"அரே.. தாதா.. நிங்களா.. குண்டான்குள்ளே இன்னா பன்றீங்கோ.் பாஹர் பாங்கோ (வெளியில் வாங்க) " என கேட்க..
"அடேய்.. நான் என்ன குண்டான்குள்ள ஒளிஞ்சா விளையாடுறேன்.. தலையில மாட்டிக்கிச்சுடா.. எடுத்துவிட்ரா" னு தாத்தா பரிதாபமாக சொல்ல,
சுண்டக்காவும் அந்த பானைய எடுக்க எவ்வளவோ எடுக்க முயற்சி செய்தும் வரல..
"தாதா.. குண்டான் பரல.. ஹம் ஜாக்கு தாதிக்கு(பாட்டி) கூட்டிட்டு பரான்" என்று சொல்லியபடி வீட்டின் சமையல் அறைக்கு ஓடினான்..
"தாதி.. தாதா மண்டைமேல குண்டான் இருக்கான்.. ஜல்தி பாங்கோ.. ஜல்தி பாங்கோ"னு கத்தியபடி சொல்ல..
குப்பு பாட்டிக்கு ஒன்றும் புரியல,
" யாருப்பா.. தாத்தா தலையில உக்காந்திருக்காங்க.. அவங்க பேரனா" பாட்டி கேட்க..
"அது இல்லா தாதி.. குண்டான்.. குண்டான்.. பானி வப்பாங்கள அந்த குண்டான்.. தாதா தலிக்கி மேலே இருக்கான்" என்று சொல்லியபடி பாட்டியின் கையை பிடித்து இழுத்து வந்து காட்ட,
பாட்டிக்கு 'களுக்'குனு சிரிப்பு வந்திடுச்சு..
"ஏங்க.. என்ன இது சின்ன புள்ளையாட்டம் பானைய தலையில மாட்டி வச்சிருக்கீங்க.. கழட்டி வைங்க" என பாட்டி சிரித்த படி சொல்ல..
தாத்தாவோ கழட்டமுடியலனை சொல்லியபடி கைகளை ஆட்ட..
"விளையாண்டது போதும் கழட்டுங்க" னு பாட்டி பானைமேல ஒரு தட்டு தட்டி கழட்டப் பார்க்க அது வரவில்லை..
பாட்டி கொஞ்சம் வேகமாக இழுக்க ..
"அய்யோ.. கழுத்து..கழுத்து.. அடியேய் வலிக்குது''னு தாத்தா கத்த..
பாட்டிக் கொஞ்சம் கலவரம் ஆனாங்க..
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக