ஆசையில் ஓர் கடிதம்..
"ஏம்பா குமாரு இந்த லட்டர Mohamed Rafeeq தான் எழுதுனதுனு எப்படிச் சொல்ற?"
"பண்ணையார் படிக்கிறேன் கேளுங்க..
'அன்பே #சேமியா (சௌமியாதான் சேமியானு மாறியிருக்குப் போல).. உன்னை நினைக்ககயிலே மனம் #பாயாச_நிலை அடைகிறதே..
உன் #இடியாப்ப_சிக்கல் மொனத்தினால் என் மனம் #கருகிய_தோசையென மாறுகிறதே..
#சூடான_தோசைக்கல்லில் தெளிக்கும் நீரைப்போல நீ சிந்திச் செல்லும் சிறு புன்னகையில் #சட்டி_எண்ணையில் முட்டி எழும் #பூரியைப்போல பூரித்து தான் போகின்றேன்..
நீ அருகே வந்து பேச நிற்கும் போதெல்லாம்
#ஆப்பத்திற்கு_பாயாவா #குருமாவா என யோசிக்க மனம் குழம்புவது போல திக்கித் திணறிதான் போகின்றேன்..
உன் ஒத்த பார்வையில் என்னை
#கொத்து_புரோட்டாவாய் கொத்திப்போட்டவளே....
எலும்பே (அன்பே தான் இப்படி) உன்னை பார்த்துக் கொண்டே #தேங்காய்_சட்னிக்கு பதிலாக
#காரச்-சட்னியை தொட்டு சாப்பிட்டாலும் அது
#தேங்காய்_பாலாய் இனிக்கிறதே..
உன் முகம் இருக்கின்றதே ஆகா..
#இட்லி போன்ற கன்னங்கள்..
#சமோசா_மூக்கு..
#குட்டி_குளோப்ஜாமுன் கண்கள்..
#பச்சைமிளகாய் சாய்துவைத்தது போன்ற புருவங்கள்..
வெட்டிய #ஸ்ட்ராபெரியாய் உதடு..
#ஊத்தப்பத்தில் ஆங்காங்கே மேலே தெரியும் #கடலைப்பருப்பு போல அழகழகான பருக்கள்.. நாளெல்லாம் ரசித்துக்கொண்னே இருக்கலாம்..
அழகே.. உனக்காக
#ரெஸ்ட்டாரன்ட்_சிங்கப்பூராவில்
ரெண்டாம் நம்பர் டேபிளில்
#நண்டுக்கால்_சூப்போடு,
#காயல்பட்டினம்_நெய்ச்சோறு
#காரைக்குடி_கறிக்குழம்பு
#ஆம்பூர்_கத்தரிக்காய் பச்சடி
#விருதுநகர்_வீச்சு புரோட்டா இவற்றோடு #ஃபுரூட்_பலோடாவோடும், #ஃபுரூட்_பீடாவோடும் காத்திருப்பேன் கண்மணியே..
மறவாமல் வருவாயே..
இப்படிக்கு
உன் வீட்டுச் சமையலறையில்
உப்பென நான்..'
கேட்டீங்களா பண்ணையார்..
நான் சொன்னது சரிதான"
"அட ஆமாயா கொமாரு..
ஓகோ கத அப்படிக்கா போவுதா"
"ஆமாங்க பண்ணையார்.. வாங்க நாம இப்படிக்கா போவோம்"..
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக