பள்ளிக்கால குறும்புகள் (நினைவுகளின் தொகுப்பு)#2
#சாக்லேட்_மிட்டாய்
மேரி டீச்சர்..
பேர கேட்டாலே அலறுவோம்..
ஏன்னா ஒழுங்கா படிக்கலனா, சேட்டை செஞ்சா பின்னி எடுத்துடுவாங்க..
(ஒரு மாணவன அடிச்ச அடியில அவனுக்கு உடம்பு சரியில்லாம போக.. அவங்க வீட்ல வந்து சத்தம் போட.. அதிகமா அடிக்கிறத நிப்பாட்டிட்டாங்க)
குச்சிய எடுத்து கண்ண உருட்டி ஒரு மெரட்டு மெரட்டுவாங்க பாருங்க.. ஒன்னுக்கே வந்துடும்.. அடிச்சாங்க ஆயே வந்திடும்..
அவங்கள நாங்க மேரியம்மாவா பாத்தத விட, காளியம்மாவா பாத்தது தான் அதிகம்..
கிண்டலுக்காக சொல்லல..
ஆனால் பாடம் அவ்வளவு அருமையா நடத்துவாங்க.. கதைகள் சொல்லி விளக்கங்கள் தருவாங்க..

ஒரு நாளு டீச்சர் பாடம் நடத்திகிட்டு இருக்கும்போது முனியம்மா ஆயாம்மா வகுப்புக்கு வந்து ஏதோ ஒரு நீளமான நோட்டுபுக்க காட்டுனாங்க. (முனியம்மா ஆயம்மானு சொல்றத விட அம்மானு சொல்லலாம்.. அந்த கதை அடுத்ததா பாப்போம்) எங்க மேரி டீச்சர் படிச்சு பார்த்து கையெழுத்து போட்டுட்டு, எங்கள பார்த்து..
"பசங்களா.. நம்ம ஹெச்செம் சார் ரூம்ல சாக்லெட் மிட்டாய் தராங்களாம்.. அதனால பைகளை எல்லாம் இங்கே வச்சிட்டு.. முனியம்மா கூட போங்க" என்று சொன்னதும்..முனியம்மா லேசா சிரிச்சாங்க..
"ஐ..ஐ..சாக்லெட் தரப்போறாங்களாம் டா..ஐ..ஐ" என்று நான் சொல்ல..
வகுப்பில் உள்ள எல்லாரும் இதையே முனுமுனுக்க வகுப்பறையே சலசலப்பானது..
மிட்டாய்னா, வருசத்துக்கு ரெண்டு தடவ அதாவது குடியரசு நாளுக்கும், சுதந்திர நாளுக்கும் கொடியேத்தி புட்டு மைக்ல பெரிய ஆளுங்க பேசி முடிச்சதுக்கு அப்பறம் கடைசியா கைல கொடுத்து வீட்டுக்கு விரட்டிவிட்டுடுவாங்க...
ஆனா இப்ப ஏன் கொடுக்குறாங்கனுலாம் யோசிக்கல..
'மிட்டாய் தராங்க..மிட்டாய் தராங்க.. அதுவும் சாக்லேட் மிட்டாய் தராங்க' னு இப்படியே சத்தம் கூட..
"சைலண்ட்" என்று டீச்சரின் ஒத்த குரலுக்கு வகுப்பில் மொத்தப் பேரும் அமைதியானோம்..
"அமைதியா, வரிசையா ஆயாம்மா கூட போங்க.. ஏதாவது சேட்டகீட்ட செஞ்சீங்க வெளுத்து புடுவேன் வெளுத்து" என்று எங்க மேரி டீச்சர் கண்களை அகலமா விரிச்சி சொல்ல , நாங்களெல்லாம் கப்சிப்..

வகுப்பிலேயே நான் இரண்டாவது குட்டையன்.. முதல் இடம், இரட்டை குட்டையர்களான அக்பரும்,அன்வரும்.. என்னைவிட ஒரு அரை அங்குலம் குள்ளமா இருப்பானுங்க.. அவங்க ரெண்டு பேரையும் பின்னாடி தள்ளிபுட்டு,
"கூஊஊ..சிக்புக்..சிக்புக்..சிக்புக்..
கூஊஊ" என்று ரயில் இன்ஜின் போல நான் கூவிக்கொண்டு முன்னாடிப் போக.. மத்த பிள்ளைகள் கூட வர ரயில் பெட்டிகள் போல வரிசையா பின்னாடி வர.. எங்கள கண்காணிச்சி சிரிச்சிகிட்டே எங்க முனியம்மா ஆயாம்மா வந்தாங்க..

ஹெச்செம் சார் ரூமுக்கும் எங்களுக்கும் கொஞ்சம் தூரம் இருக்கும்போதே, எங்கள விட உசரமாகவும், தடியாவும் சில பசங்க இருந்தானுங்க.. அவனுங்க வந்து முன்னாடி நின்னுகிட்டு 'எங்களுக்குத் தான் முதல் சாக்லேட்' னு முதல் மூனு பேரா நின்ன எங்கள பின்னுக்கு தள்ளிபுட்டானுங்க..
நாங்களும் விடல.. அவிங்ககிட்ட மல்லுகட்டிகிட்டு நிக்க..
"டேய்..சண்ட போடாம நில்லுங்கடா.. இல்லனா உங்க டீச்சர்கிட்ட சொல்லிடுவேன்" னு ஆயாம்மா சொல்ல..
எதுக்குடா வம்பு அவனுகளே நிக்கட்டும்னு நாங்க அவனுங்க பின்னாடியே நின்னுகிட்டோம்..

ஹெச்செம் ரூமுக்குள்ள நுழைஞ்சோம்..
அங்க ஹெச்செம் சாரும், வெள்ள கலர் புடவை கட்டுன அம்மா வயசுல ரெண்டு பெண்களும் இருந்தாங்க..
அங்க ஹெச்செம் சாரும், வெள்ள கலர் புடவை கட்டுன அம்மா வயசுல ரெண்டு பெண்களும் இருந்தாங்க..
எங்கள வரிசையா கீழே உக்கார வச்சாங்க.. ஏதோ பேசப்போறாங்க போல .. பேசிபுட்டு அப்பறமா மிட்டாய் தருவாங்க போல னு நினைச்சிகிட்டு உக்காந்தோம்..
அந்த ரூமுக்குள்ள ரெண்டு கதவு..
நாங்க நுழைஞ்ச கதவ மூடிட்டாங்க..
கொஞ்சம் தள்ளியிருந்த கதவுகிட்ட ரவி சார் கையில் சாக்லேட்டோட நின்னுகிட்டு இருந்தாங்க..
''ஆகா மிட்டாய்டோ''னு ஒருசத்தம் எவன் சத்தம்னு தெரியல..
அந்த ரூமுக்குள்ள ரெண்டு கதவு..
நாங்க நுழைஞ்ச கதவ மூடிட்டாங்க..
கொஞ்சம் தள்ளியிருந்த கதவுகிட்ட ரவி சார் கையில் சாக்லேட்டோட நின்னுகிட்டு இருந்தாங்க..
''ஆகா மிட்டாய்டோ''னு ஒருசத்தம் எவன் சத்தம்னு தெரியல..
உக்காந்து இருந்ததுல முதல்ல இருந்த ரெண்டு பேரை கூப்புட்டாங்க..
ரெண்டு பேரும் போனானுங்க..
போனாஆஆஆஆ..
ரெண்டு பேர்ல ஒருத்தன் ''அய்யய்யோ எனக்கு வேணாம்''னு அலற ஆரம்பிச்சுட்டான்..
எதுக்குடா அலறுரான்னு பாத்தா..
வெள்ளை புடவை கட்டியிருந்த ரெண்டு பேர் கைகளிலும் ஊசி மருந்து..
ஏதோ தடுப்பூசி போல இருக்கு..
அவங்க ஆஸ்பத்திரி நர்சுங்க போல..
ட்ரவுசர கழட்டச் சொல்லி...
முனியம்மா ஆயாம்மாவும், ஹெச்சம் சாரும் புடிச்சிக்கொள்ள ..
ஒரு நர்சம்மா ஊசிய லோட் பண்ணி கொடுக்க .. இன்னொரம்மா ஊசி போட்டாங்க..
முன்னாடி முந்திகிட்டு நின்ன ரெண்டு தடி பையன்களுக்கும் மொத ஊசி..
அழுதுகிட்டே .. பின்னாடி தடவிகிட்டே.. ரவி சார் நின்னுகிட்டு இருந்த கதவுகிட்ட போக ..அவரு ஆளுக்கொரு மிட்டாய் கொடுத்து அங்க உக்கார வச்சாரு..

'ஆகா.. அடுத்து நாம தானடா'னு நினைச்சிகிட்டே பின்னாடி உக்காந்துகிட்டே நழுவி அக்பரை முன்னுக்கு தள்ள, அவனும் அன்வரும் சேர்ந்து என்னை முன்னுக்குத் தள்ள .. ஹெச்செம் சார் என்னை கூப்பிட .. நான் எழுந்திருக்க மறுக்க "அடேய் ரொம்பலாம் வலிக்காதுடா வாடா .. லேசா எறும்பு கடிச்சா மாதிரி இருக்கும் .. அவ்வளவுதான் "னு சொல்லி கூப்புட ..நா அப்பவும் போகல .. உடனே ஆயம்மா கிட்ட "அவன தூக்கிட்டு வாமா " சொல்ல அவங்களும் என்கிட்டே வர.. நா அப்படியே கீழ படுத்து பக்கத்துல இருக்குறவங்கள கெட்டியா புடிச்சிக்க .. அவனுகளும் என்னைய குண்டுகட்டா தூக்கிட்டு போய் ஹெச்சம் சார் பக்கத்துல நிப்பாட்டிட்டாங்க ..
சும்மா தான் நின்னுட்டு இருந்தாரு அவரு.. நம்ம செஞ்ச அலபரைல கையில குச்சிய எடுத்துகிட்டாரு ..
"டேய் டவுசர கழட்டு "
"சார் வேணாம்ங்க சார்"
"கழட்டுரியா இல்லையா "
"சார் பொம்பள புள்ளைங்களாம் இருக்காங்க சார் "
"ஆமா இவரு பெரிய இளவட்டம் .. அவங்களாம் அந்த பக்கம் தான் உக்காந்து இருக்காங்க கழட்டு "
"சார் ..சார்.. " எவ்வளவுதான் கெஞ்சியும் நம்ம பேச்சு எடுபடல ..
"முனியம்மா .. இவன புடி " னு சார் சொல்ல ..
அவங்க ரெண்டு கைகளையும் பலமா புடிசிகிட்டாங்க ..
ஹெச்சம் சார் நம்ம டவுசர கழட்ட .. அந்த நர்சம்மா ஊசி எடுத்துட்டு நம்மகிட்ட வர .. பயத்துல நான் குதிக்க .. "டேய் குதிக்காதடா .. ஊசி குத்தும்போது உடைஞ்சிரும்டா ..சொன்னா கேளு " னு நர்சம்மா சொல்ல .. நாம வேகமா குதிக்க ..
இன்னொரு நர்சம்மாவும் வந்து பிடிக்க .. அப்பவும் நான் துள்ள .. அப்ப ரவி சார் வந்து "டேய் ஆட்டாத .. ஊசி ஒடைஞ்சது அப்பறம் பெரிய கத்திய வச்சு வெட்டித்தான் எடுப்பாங்க "னு சொல்ல ..
நம்மலோட சப்த நாடிகளும் அடங்கிபோச்சு ..
ஆடாம அப்படியே நின்னாச்சு ..
நர்சம்மா ஊசிய போட்ட உடனே "ஆ" ஒரே கத்து காது சவ்வு கிழியிற அளவுக்கு ..
"ச்சே.. இப்படியா கத்துவ"னு ரவி சார் நொட்டு னு ஒரு கொட்டு தலையில ..
அப்பறம் ஒரு மிட்டாய கைல கொடுத்து வரிசையில் உக்கார வச்சாரு ..
நாமதான் இப்படினா நம்மளுக்கு பின்னாடி ஊசி போட வந்தவனுங்க நம்மல விட ..
இப்படியே ஒவ்வொரு ஆளுக்கா ஊசிய போட்டு .. கையில மிட்டாய் கொடுத்து வரிசையில் நிக்க வச்சு .. முனியம்மா ஆயம்மா கூட அனுப்பி வச்சாங்க .. வரும்போது "கூ..சிக்கு புக்கு..கூ "னு வந்த ரயிலு .. போகும்போது "ஊ ..ஊ "னு போச்சு .. (முக்காவாசிப் பேரு அழுதுகிட்டு வந்தோம் )..
வகுப்புக்குள்ள வந்தோம் ..எங்க மேரி டீச்சர் எதுவுமே தெரியாத மாதிரி "என்னங்க மாணவ செல்வங்களே மிட்டாய் வாங்கிட்டீங்களா ?" னு கேக்க, அவங்கள பாத்துகிட்டே(கொலைவெறிலாம் இல்லைங்க ) ஆமாம்னு உக்காந்தோம் ..கொஞ்ச நேரத்துல சீக்கிரமா பள்ளிகூடம் விட்டுட்டாங்க .. ஓட வேண்டிய நாங்க.. இடுப்ப புடிசிகிட்டு நடந்து போனோம்.
மறுநாள் ..
பசங்கள்ல முக்கால்வாசி பேரு வரல..
பிள்ளைங்கள்ள கால்வாசிப் பேரு வரல .. ஊசி போட்டதுல காய்ச்சல் வந்துடுச்சு..
(நினைவுகள் தொடரும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக