பள்ளிகால குறும்புகள் (நினைவுகளின் தொகுப்பு) #1
#டி_டா
"டேய் விஜி உன்ன அமிர்தம் டீச்சர் கூப்ட்டாங்கடா .." நண்பனின் குரல் கேட்டு நிமிர்ந்து ..
"எதுக்குடா குணா?" கேட்டுக்கொண்டே அவனுடன் நடக்க..
"தெரியலடா..விஜி .. சீக்கிரமா கூட்டிட்டு வரசொன்னாங்க டா " என்று சொல்லிவிட்டு டீச்சர் முன்பு விட்டுட்டு குணா போயிட்டான் ..
அங்க நம்ம கூட படிக்கிற சக மாணவி நின்னுகிட்டு இருந்தாங்க ..
அமிர்தம் டீச்சர் கோவமா இருந்தாங்க ..
டீச்சர் முகத்தையும் .. அந்த பொண்ணு முகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன் ..
இந்த பொண்ணுகிட்ட நாம எந்த வம்பும் வச்சுக்கிறது இல்லையே .. என்னவா இருக்கும்னு யோசிக்கும்போது ..
"வாங்க சார் ..வாங்க " னு அவங்க சொல்லும்போதே தெரிஞ்சிடுச்சு நம்மலுக்கு ஏதோ அடி விழப்போவுதுன்னு ..
"ஆமா .. இந்த பொண்ண ஏன்டா "வாடிபோடின்"னு சொன்ன?" பிரம்ப கையில எடுத்துகிட்டே கேட்டாங்க ..
"ஆகா ..இது நேத்து நடந்த சம்பவமாச்சே .. பக்கி இன்னைக்கு வந்து சொல்லிருக்கே.."னு மனசுல நினைச்சுகிட்டே டீச்சர பாக்க ..
"ஏன் வாய் திறந்து சொல்லமாட்டிங்களோ"னு டீச்சர் பிரம்ப ஆட்ட..
"அ..அப்படிலாம் இல்லைங்க டீச்சர் .. வாடி போடிலாம் சொல்லல"
"பின்ன .. ஏன் இந்த பொண்ணு வந்து சொல்லுது "
"டீச்சர்.. முந்தா நேத்து நீங்க தானே சொன்னீங்க .. பொம்பள பிள்ளைங்க ஆம்பள பிள்ளைங்கள #டா போட்டு கூப்புட கூடாது .. அதே போல நாங்க அவங்கள #டி போட்டு கூப்புட கூடாதுன்னு .."
"ஆமா .. அப்படி சொல்லியுமா நீ இவள வாடி போடி னு சொன்ன .. என்ன கொழுப்புடா உனக்கு .. கைய நீட்டு " னு சொல்லி பிரம்ப தூக்க ..
"டீச்சர் இந்த பொண்ணுதான் என்னிய முதல்ல 'டேய் ..விஜி இங்க வாடா ' னு கத்தி கூப்டுச்சு .. நான் கிட்ட வந்து 'என்னடி'னு மெதுவாத்தான் கேட்டேன் "னு நான் சொல்ல டீச்சர் அந்த புள்ள முகத்த பார்க்க ..
அந்த புள்ள பயந்துகிட்டே தரைய பாக்க..
"நீ ஏமா அவன அப்படி கூப்ட்ட " டீச்சர் கேள்விய அப்படி திருப்ப.. நாம 'அப்பாடி'னு வடிவேல் பாணியில் நிற்க ..
"டீச்சர்.. எங்க அக்கா ஒரு புக்கு இவன்ட்ட "னு சொல்ல டீச்சரோடு நானும் சேர்ந்து முறைக்க ,
"விஜிகிட்ட கேக்க சொன்னாங்க .. அதான்" அந்தம்மா இழுக்க..
"முதல்ல நீ கைய நீட்டு "னு சொல்லி அந்த புள்ளைக்கு 'நொட்டு'னு ஒரு அடி ..அந்தம்மா கண்ணுல தண்ணி வந்துடுச்சு..
நம்ம பக்கம் திரும்பி .. நம்ப கையில 'நொட்டு'னு ஒரு அடி.. "ஸ்ஸ்ஸ்..அப்பா .." னு கைய உதறிவிட்டு நிற்க ..
"இனிமேட்டு இதுபோல வந்து நின்னிங்க தோல உறிச்சிபுடுவேன் போங்க கிளாசுக்கு"னு வெரட்டிபுட்டாங்க எங்க அமிர்தம் டீச்சர்..
அந்த புள்ள கிளாசுக்கு போயிடுச்சு..
அந்த நேரம் பார்த்து மண்டை அரிக்க ...
நான் அடி வாங்குன கையால மண்டைய சொரிய ..
அத பார்த்த எங்க டீச்சர் என்ன நினைச்சாங்கனு தெரியல "சேட்ட ..சேட்ட ..கொரங்கு சேட்ட "னு சிரிச்சிகிட்டே ரெண்டு அடி மெதுவா அடிச்சாங்க..
ம்ம்ம் நினைவுகள் தொடரும் ...
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக