சனி, 16 மே, 2020

பண்ணையாரும் குமாரும்

#ஈகே 
(பண்ணையாரும் குமாரும் )

"புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரதத்தில் சோத்து சண்ட தீரவில்ல" 
(என்னடா இது பாட்டுன்னு பாக்குறீங்களா .. வேற ஒண்ணுமில்ல நம்ம பண்ணையாரோட போன் காலர்டோன் தான்)
''என்னடா இது .. மணி ராத்திரி பத்து ஆகுது இந்த நேரம் இந்த பக்கி போன் செய்யுதே.. என்னவா இருக்கும் ''னு போன எடுத்து ''அலோ ..சொல்லுயா குமாரே ..என்ன இந்த நேரத்துல கூப்பிட்டிருக்க?"

"பண்ணையார் .. பண்ணையார் ..ஒ..ஒரு சம்பவமாகி..போ..போச்சு" என்று குமார் பதட்டத்தோட சொல்ல 

"யோவ்.. என்னையா சொல்ற .. பதட்டபடுத்தமா சொல்லுயா "

"அ...அது வந்துங்க பண்ணையார்.. நம்ம பெரியவரு இருக்கார்ல .."

"அட.. ஆமா ..என்னாச்சுயா அவருக்கு?"

"அவருக்கு ஒண்ணுமில்ல .. அவர்தான் குத்துக்கல்லாட்டம் இருக்காரே .."

''அட பக்கி.. வாய கிளராம ஒழுங்கா சொல்லி தொலையா "

"பெரியவரு வீட்டுகுப் பின்னாடி ஒரு தெரு போகுதுல்ல .. அந்த தெரு போயி சின்ன ரோட்டுல முடியுதுல .. அந்த சின்ன ரோடு .."

"யோவ் .. எப்பயா முடியும் நீ சொல்ற கத ?''

"இதோ இப்ப முடிச்சிடுறேனுங்க பண்ணையார் .. அந்த சின்ன ரோடு போயி அடுத்த பெரிய ரோட்ட புடிக்கிதுல்ல அங்க.."

"அடப்பாவி மனுசா .. அது பேரூர் போற வழின்னு சொல்ல வேண்டியது தானே  "

"  ஆங்ங்.. அதுதானுங்க பண்ணையார் .. அந்த ரோட்லயே போயி லெப்ட்ல திரும்புனா ..."

"ஆமா ஈகே வீடு வரும்"

"ஆமா ஆமா .. அங்கதான் நம்ம ஈகே மயக்கப்பட்டு விழுந்து கிடக்காங்க "

"அட படுபாவி குமாரே.. ஈகே மயங்கி கிடக்கார்னு முதல்லையே சொல்றதுக்கு என்னயா .. வீனபோன தொண்ண .."

"நீங்க தானே பண்ணையார் எதை சொன்னாலும் வெளக்கமா சொல்லனும்னு சொல்லிருக்கீங்க .."

"ஒன் வெளக்கத்துல தீய வைக்க .. அங்கயே நில்லுயா இதோ வரேன் "னு சொல்லிபுட்டு பண்ணையார் வேகமா கிளம்பி வண்டிய எடுத்துட்டு போயிட்டாங்க..

ஈகே வீட்டு வாசல்..
"வாங்க பண்ணையார் .. அதோ அங்க பென்ச்ல படுக்க வச்சிருக்கேன் பாருங்க.. நீங்க போய் பாருங்க நான் வண்டிகிட்டயே நிக்குறேன் .."னு சொல்லிபுட்டு குமாரு அங்கேயே நிக்க , பண்ணையார் ஈகே பாக்க போனாங்க ..

ஈகே லேசா கண்ண தெறந்து தெறந்து பாத்தாரு ..

"என்னங்க ஈகே ..என்னாச்சு ?"

"கொமாரு..கொமாரு .."

"ஓ.. குமார கூப்புடவா?"

"ம்ஹும் .. குமாரு பாட்டு ..பாட்டு .."

"ஓ குமார கூப்பிட்டு பாட்டு பாட சொல்லவா "

"அய்யோ .. ப..பண்ணையார் ..வே..வேணாம்ம்ம்ம்ம்ம்ம்"னு சொல்லிபுட்டு ஈகே மறுபடியும் மயக்கமாயிட்டாரு..

"ஈகே..ஈகே.. அய்யய்யோ.. பயபுள்ள என்ன செஞ்சான்னு தெரியலையே.. யோவ் .. குமாரு சீக்கிரமா வாயா.."

"வந்துட்டேன் பண்ணையார்"

"என்னயா செஞ்ச .. மனுசன் உன்னைய பத்தி சொன்னதும் மயங்கிட்டாப்ல "

"பண்ணையார்.. நம்ம ஈகே எப்பவுமே சினிமா பாட்டுகள தொகுத்து போடுவாங்கள்ள .. அதானால நா பாடுன மொழிபெயர்ப்பு பாடலை போடுறீங்களா னு கேட்டேன் .. அவரும் சரிப்பா கொடு பாட்ட கேட்டுட்டு தொகுத்து போடுறேன்னு சொன்னாங்க .. நானும் சரின்னு நான் பாடுன பாடல கொடுத்தேனா ..டேப் ரெக்கார்டர்ல போட்டு  அத அவரு ஹியர் போன்ல  கேட்டாங்களா .. திடீர்னு என்ன ஆச்சுனு தெரியல .. ஹியர் போன புடிங்கி போட்டுட்டு .. டேப் ரெக்கார்டரயும் ஒடைச்சு போட்டுட்டு என்னைய மொறச்சி பாத்துட்டே மங்கி விழுந்துட்டாங்க.. பண்ணையார்"

"அடப்பாவமே ..அப்படி என்ன பாட்டுயா அது ?"

"அதான் டேப்ப ஒடைச்சிட்டாங்களே"

"அத ஒடைச்சா என்னய்யா .. நீ பாடுனது தான .. பாடி காமி "

"சரிங்க பண்ணையார் ..
யூ தானா  தட்டு குயில்
ஹு ஹௌசு வோனு குயில்
மம்மிடி மைண்டு குள்ள கைட்டுடி 
 மைக்கு ஒன் மதர் மடி கிடைக்குமா ''
னு குமார்  பாடிகிட்டே திரும்ப , பண்ணையார் வாயில நொறைதள்ளி மயங்கி விழ ..

"அய்யய்யோ பண்ணையார் .. பண்ணையார் என்னாச்சு என்னாச்சு " னு குமார் கத்திகிட்டே பண்ணையாரை பிடிச்சாப்ல..

பக்கத்துல மயக்கம் போட்டு விழுந்த ஈகே மயக்கம் தெளிஞ்சி எழுந்து வந்தாரு ..

"அடப்பாவி கிராதகா .. நானாவது வெறும் மயக்கம் தான் .. பண்ணையார நுறைத்தள்ளி மயக்கம் போட வச்சிட்டியே ..உன்ன " ன்னு சொல்லிகிட்டே பக்கத்துல இருந்த ஒரு கட்டைய எடுக்க..

"அய்யய்யோ .. இனிமே பாடமாட்டேனுங்க அண்ணே .. என்ன விட்டுடுங்க .. விட்டுடுங்க "னு குமாரு அலறிகிட்டு ஓட .. பின்னாடியே ஈகே விரட்டிகிட்டே ஓடினாரு ..

விஜயகுமார் வேல்முருகன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக