"ஏம்பா.. விகுவேமு எங்கபா நம்ப புனே பெரீவர ஆளையேக் காணோம்?.. திருந்திட்டாரா பேஸ்புக் பக்கமே காணோமே?"
"அந்த கொடுமைய ஏங்கேக்குறீங்க புகழேந்தியண்ணே.. ஒரு சம்பவம் நடந்திருச்சு.."
"சம்பவமா? என்னாச்சு? அண்ணி ஏதாவது... சத்தம் போட்டுபுட்டாங்களா?"
"அதுதான் எப்பவும் நடக்குற சம்பவமாச்சே.. அதுக்கெல்லாம் அசர்ர ஆளா பெரீவரு.. இது வேற.."
"அப்போ அண்ணி #வெயிட்டா_கவனிச்சுட்டாங்களா .?"
"அதுக்கூட அப்பப்ப நடக்கும்.. இது வேறங்க அண்ணே"
"ஏம்பா ..டென்சன ஏத்தாம நீயே சொல்லிடேன்"
"மாடு முட்டிடுச்சுங்க ணே"
"ஏம்பா.. என்னப்பா சொல்ற? ..(அதிர்ச்சியாக )
ஓ..ஜல்லிக்கட்டுக்கு மாட்ட அடக்கப் போனாரா?"
"அப்படி இருந்தாக்கூட பரவால்லையே.. நமக்கு எருமையாச்சே.. ச்சேய்.. பெருமையாச்சே.. ஒரு அப்பிராணி பசுமாட்டுகிட்ட முட்டு வாங்கிட்டு வந்துல படுத்து கிடக்காங்க"
"அடப்பாவமே.. அப்படி என்னயா ஆச்சு?"
"சொல்றேன் நல்லா கேட்டுக்கங்க ..நம்ம அண்ணி கோலம் போடுறேனு வண்ணக்கோலமாவ எடுத்துகிட்டு வாசலுக்குப் போனாங்களா.. நம்ம ஆளும் பின்னாடியே போனாரு..
அண்ணி ஏதோ கோலம் போட ஆரம்பிக்க.. 'ஏமா.. இன்னைக்கி மாட்டுப் பொங்கல் தானே.. அதை தானே வரையுனும்.. இப்படி கொடு நானே வரையிறேன்'னு சொல்ல.. 'வேணாங்க.. போன தடவ மாடு வரையிறேன்னு காண்டா மிருகத்த வரைஞ்சிட்டீங்க.. அத அந்த பாரதி பயலும், விஜயகுமாரும் உங்க ரொம்ப கலாய்ச்சுட்டாங்க.. எனக்கே அப்ப சிரிப்ப அடக்கமுடியல.. அதானால நானே போடுறேன்'னு அண்ணி சொல்ல.. 'ஏம்மா.. அது அப்ப.. டீவியில டிஸ்கவரி சேனல் பாத்துட்டு வந்து வரைஞ்சதுனால அப்படி ஆகிடுச்சு.. இப்ப பார் எவ்வளவு தத்ரூபமா வரையிறேன்'னு சொல்லிபுட்டு, பெரீவர் வீட்டுக்கு எதிர்ல இருந்த ஒரு பசுமாடு, கன்னுகுட்டிய பாத்து வரைய ஆரம்பிச்சாரு..
நேரம் ஆக ஆக அண்ணி முகம் மாற ஆரம்பிச்சது.. வரைஞ்சி முடிச்சதும் 'இது தான் தத்ரூபமா?' னு கோபமா பல்ல கடிச்சிகிட்டே கேட்டாங்க.. பெரீவரு 'இஇஇ' னு சிரிச்சிகிட்டு இருக்கும்போது..
எதிர்ல இருந்த பசுமாடு நேரா வந்து கோலத்த பாத்துச்சு..
அதோட படத்த பாத்து சும்மா இருந்ருச்சு.. ஆனா.. அதோட குட்டிய பாத்தவுடனே என்னாச்சுனு தெரியல.. வெறி வந்தா மாதிரி 'ம்ம்மேஏஏஏஏ'' னு கத்திகிட்டே பெரியவரே பின்னாடியே ஓங்கி ஒரு முட்டு.. காத்துல பறந்து போய் தள்ளி விழுந்தாரு.. அதுல அடிபட்டது தான் ஆஸ்பத்திரில ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு வீட்ல இருக்காரு"
"அடப்பாவமே.. அப்படி என்னத்தப்பா வரைஞ்சி வச்சாரு"
"அந்த கொடுமைய நீங்களே கீழப்பாருங்க ணே"
புகைப்படம் இணையத்தில்..
எழுத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக