ஞாயிறு, 17 மே, 2020

கஷ்டமான வேல

"பண்ணையார் உலகத்திலேயே ரொம்ப கஷ்டமானது என்னானு சொல்லுங்க?"

"எனக்கு உன்னைய சமாளிக்கிறது தான்யா கொமாரு"

"அட.. விளையாடாம சொல்லுங்க பண்ணையார்"

"நீயே சொல்லு ராசா.. நாஞ்சொன்னா ஏதாவது சொல்லி ஒறண்ட இழுப்ப"

"அது வந்துங்க பண்ணையார்.. ஸ்கூல் நாட்கள்ல மதிய சாப்பாட்டுக்கு அப்பறம் பாடம் எடுப்பாங்கல.. அப்ப வர தூக்கத்த கண்ட்ரோல் பண்ணுறது இருக்கேஏஏ..
அப்பப்பா.. அது தானுங்கோ.."

"அட ஆமாயா கொமாரு.. அந்த சொகம் இருக்கே.. பாடத்த கேக்குறா மாதிரி நடிச்சிகிட்டே தூங்குறது.. ம்ம்ம்.."

"பண்ணையாஆஆர்ர்ர்"

"யோவ்..ஏன்யா கத்துற?"

"நீங்க வாத்தியார் வேலைக்கித் தானே படிச்சீங்க.. பசங்கள தூங்க வச்சி தானே பழக்கம்.. நீங்க எப்படி தூங்குனீங்க"

''யோவ்.. உன்னோட பெரிய ரோதனையா.. இப்ப நீதான சொன்ன 'வாத்தியார் வேலைக்கி #படிச்சீங்க னு' ..
அப்ப நாங்க படிக்கும் போது தூங்கமாட்டோமா"

"அப்பச்சரி..அப்பச்சரி.."

"என்ன நொப்பச்சரி..நொப்பச்சரி.. போயா அங்கிட்டு''

" (என்ன இது பண்ணையார் 'போயா அங்கிட்டு'னு சொல்லிபுட்டு.. அவரு அந்தப்பக்கமா போறாரு"- மைண்ட்_வாய்ச்)

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக