சனி, 16 மே, 2020

ஆறு

ஆறு

பெரியவர பார்த்து ரெம்ப நாளாச்சே.. சரி வீட்டுக்குப்போய் ஒரு எட்டு பாத்துட்டு வருவோம்னு கிளம்பி போனோம் .. நாம ஒரு ஆளுதான் ..
வண்டிய கீழ விட்டுட்டு மாடிப்படி ஏறி போயிட்டு இருந்தோம் .. மேல தலைய தூக்கி பாத்தா அங்க ஒரு சலவை இயந்திரம் அதாங்க வாசிங் மெசினு .. அதுக்கு கால் முளைச்சி படி இறங்கி வரா மாதிரி தெரிஞ்சது .. நான் அப்படியே மெரண்டு போயிட்டேன் .. 
சரின்னு சுதாரிச்சுகிட்டு வேகமா படியேறி கிட்ட போயி பாத்தா .. நம்ம பெரியவரு அந்த வாசிங் மெசின கஷ்ட்டப்பட்டு தூக்கிகிட்டு படி இறங்குறாரு ..

"என்னங்க பெரியவரே வீட்ட காலி செய்யுறீங்களா .. நம்மகிட்ட சொல்லலியே .. இருங்க நானும் ஒரு கை பிடிக்கிறேன்"னு சொன்னேன் ..

"அட அதெல்லாம் இல்ல பா .. உங்க அண்ணி ஒரு வேலை சொன்னாங்க .. அதுக்காக தூக்கிட்டு போறேன்"னு பெருசு சொன்னாங்க 

"ஓ..அப்ப மெசின் ரிப்பேரா"

"இல்லப்பா "

"பின்ன எதுக்குங்க தூக்கிட்டு போறீங்க .. 
கீழ ஏறக்குங்க"னு சொன்னதும் இறக்கிட்டாங்க..

"தம்பி .. உங்க அண்ணி வெளியில கிளம்பும்போது 'ஏங்க மெசின்ல துணிய போட்டுருக்கேன் அத ஆறுல வச்சிருங்க'னு சொல்லிட்டு போனாங்க .. எதுக்கு ஆறுல வைக்கனும்னு கேட்டா டோஸ் விழுகும் ..அதனால நமக்கு எதுக்கு வம்புனு பாத்ரூம்ல போய் பார்த்தேன் .. தண்ணிய புடிச்சி துணிகள ஊற வச்சிருந்தாங்க .. மெசின  தூக்கிப் பாத்தேன் ரொம்ப வெயிட்டா இருந்துச்சு.. தூக்க முடியல .. அதனால தண்ணிய திறந்துவிட்டுட்டு துணிகள பக்கெட்ல அள்ளி போட்டுட்டு .. மெசின நம்ம பில்டிங்குக்கு பின்னாடி இருக்குற ஆறுல போட்டுடலாம் னு தூக்கிட்டு இறங்கினேன் நீ வந்துட்ட.. சரி வந்ததும் வந்த ஒரு கை பிடி .. அப்படியே ஆறுல போட்டுட்டு வந்துடுவோம்.."
"அய்யோ பெரியவரே .. நல்லா கேட்டிங்களா அது எந்த ஆறுன்னு .. அப்பறம் தேவையில்லாம அண்ணிகிட்ட வாங்கி கட்டிக்கப் போறீங்க.. எதுக்கும் ஒரு தடவ வாசிங் மெசின நல்லா பாருங்க .. ஏதாவது ஆறுன்னு நம்பர் கிம்பர் இருக்கப் போவுது .. அப்பறம் நானும் உங்ககூட சேர்ந்து டோஸ் வாங்க வேண்டியிருக்கும்"னு சொல்லிபுட்டு  மெசின பாக்க ..
மெசினோட தலை பக்கத்துல ரெண்டு மூணு ரெகுலேட்டர் சுச்சு போல இருந்தச்சு .. ஒண்ணுல ON /OFF இருந்துச்சு .. ஒண்ணுல WASH / DRAIN இருந்துச்சு.. இன்னொண்ணுல TIMER னு போட்டு MINITS  அத சுத்தி 3,6,9,12,15 னு போட்டிருந்துச்சு ..  
"பெரியவரே இங்க பாருங்க இதுல 6 போட்டிருக்கு பாருங்க..நல்ல வேளை நானும் உங்களோட சேர்ந்து தப்பு பண்ண பாத்தேன் "னு சொல்ல 
அவரு.. "நீ அங்க பாருன்"னு சொல்ல..
அங்க அண்ணி நின்னுகிட்டு இருந்தாங்க .. கையில கூட .. கண்ணுல அனல் பார்வ..
நானும் , பெரியவரும் வாசிங் மெசின மறுபடியும் தூக்கிட்டுப்போய் பாத்ரூம்ல வச்சோம்.
"சரிங்க பெரியவரே .. உங்களுக்கு ஏதோ #முக்கியமான வேல இருக்கும் .. நான் அப்பறம் வரேனுங்க.. அண்ணி வரட்டுங்களா"னு சொல்ல .. அண்ணி தலைய ஆட்ட.. நான் கிளம்ப ..
அண்ணி வாசல் கதவை மூட .. உள்ள டம்மு டும்மு னு சத்தம் கேக்க .. நான் திரும்பி பாக்காமல் ஓட ..
 பாவம் என்னாச்சுனு தெரியல.. யாராவது அங்கிட்டு போனிங்கனா கேட்டு சொல்லுங்க ..

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக