சனி, 16 மே, 2020

நான்

இடிந்து போய் உக்கார்ந்து இருந்தேன் அந்த மிக மிக பழமையான கோவிலின் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு மூலையில் .. அப்படியும் இப்படியுமாக  சில பட்டாம் பூச்சிகள் பறந்துக்கொண்டு இருந்.. அப்ப அப்ப வந்து என்மேலையும் வந்து உக்காந்து அப்பறம் பறந்து போவதுமாக இருந்தன ..
மூக்கில் சிறிது அரிப்பு எடுத்தது .. இரண்டு கைகளும் தூக்க முடியாத அளவில்  இருந்ததால் சொரிந்து கொள்ள முடியவில்லை ..
 ஒரு ஆள் என்னருகில் வந்து உக்கார்ந்தார் ..ஆள் நல்ல வசதியானவரா தெரிந்தார் .. வாயில் ஏதோ முணுமுணுப்புகள் .. மந்திரம் சொல்கிறாரோ என்று நினைத்து காதை சற்று கூர்மையாக்கி கேட்டேன் ..
"கடவுளே என்னை இப்படி ஏன் சோதிக்கிற ..எனக்கு மட்டும் ஏன்  இவ்ளோ கஷ்டத்த கொடுக்குற .. இது உனக்கே நல்லாயிருக்கா .. உனக்கு எவ்வளவு  பூஜை செஞ்சேன் .. எவ்வளவு பாலாபிசேகம் செஞ்சேன் .. எவ்வளவு அன்னதானம் செஞ்சேன் ..   வீட்லயே வெள்ளி பலகைல வச்சு தங்க ஆபரணங்களால அலங்கரிச்சு தினமும் நெய் தீபம்லாம் ஏத்துனேனே.. என்னைய இப்படி சோதிக்கலாமா .." என்று முதல்ல இருந்து அதே புலம்பல் ..
என்னடாயிது இவ்வளவு வசதியா இருக்காரே .. எல்லாம் நல்லாத்தானே செய்யிறாரு இவர ஏன் நம்ம ஆளு சோதிக்கிறாருனு நினைச்சிகிட்டு இருக்கும்போதே இன்னொரு ஆளு வந்தாரு .. நல்ல கலையான முகம் .. உடையில ஏழ்மை தெரிஞ்சது ..
"ஆண்டவா .. எங்க குடும்பத்த கஷ்டத்துல இருந்து காப்பாத்திட்டு வர உனக்கு ரொம்ப ரொம்ப நன்றிய மனசார தெரிவிச்சுகிட்டு .. உன்னையே முழு சரணாகதி அடையிறேம்பா .. இப்படி நிம்மதியாக இருக்குற வாழ்வை உன் பாதம் சரணாகதியை (உயிர் உள்ளவரை )அடையிற வரைக்கும் தாப்பா .." என்று அவர் வேண்டிக்கிட்டு போயிட்டாரு ..

இப்ப எனக்கு கொழப்பமா போயிடுச்சி ..

//மனுஷனுக்கு உள்ள வாழ்க்கை ஒன்னு தான் .. அதை அவங்க அவங்க வாழ்றத பொருத்து இன்ப துன்பங்கள் அமையுது//ன்னு ஒரு குரல் கேட்டுச்சு ..

அப்படி இப்படின்னு சுத்தி பார்த்தேன் ஒரு ஆளையும் காணோம் .. எங்கடா இருந்து குரல் கேட்டுச்சுனு மண்டைய சொரியலாம்னு பாத்தா கை தூக்க முடியாத நிலையில  இருந்துச்சு ..
ரெண்டு சின்ன பசங்க அங்க விளையாட வந்தாங்க .
"இங்க பாருடா சிலை ஒருபக்கம் இருக்கு .. அதோட கை அந்த பக்கம் இருக்கு.. வாடா எடுத்து ஒட்ட வைப்போமா "னு இவன் கேட்க அவன் சரின்னு தலையாட்ட .. தள்ளியிருந்த  கைகள எடுத்து என்மீது வைத்து அங்க இருந்த கயிற எடுத்து கட்டிட்டு போயிட்டாங்க .. இப்ப நான் மூக்கை சொரிஞ்சிகிட்டேன் ..

ஆனா கடைசி வரை அந்த குரல் யாரோடது என்று தெரியாம தலையையும் சொரிஞ்சிகிட்டே இருந்தேன் ..

உங்களுக்கு தெரியுமா? 

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக