சனி, 16 மே, 2020

எனக்கு ஒரு சந்தேகம்

#பெரியவரே_எனக்கு_ஒரு_சந்தேகம்?

"அலோ.. பெரீவரே எப்படி இருக்கீங்கோ"

"வாப்ப விஜய்..இதுவரைக்கும் நல்லா தான் இருந்தேன் .. இப்ப நீ வந்துட்டீல இனி எப்படியோ"

"இன்னா பெரியவரே கலாய்க்கிறீங்களா..
விடுங்க..விடுங்க..பாத்துக்கிறேன்"

"சரி..சரி.. விடுவிடு.. ஆமா.. கையில என்ன ஏதோ பேப்பர் துண்டு மாதிரி இருக்கு?"

"ஓ இதுவா.. சினிமா டிக்கெட்டுங்க பெரியவரே"

"ஓகோ.. இப்ப பிளாக்ல சினிமா டிக்கெட் வேற விக்க ஆரம்பிச்சிட்டியா.. போலீஸ் பிடிக்கப்போறாங்க பா"

"ம்க்கும்.. டிக்கெட்ட கொடுத்வரே போலீஸ் தான்.. சரி.. அத விடுங்க.. ரெண்டு டிக்கெட் இருக்கு.. வாங்க போயிட்டு வருவோம்..''

" ஏம்பா.. எனக்கு ஆபீஸ் இருக்கு போவனும்"

"ம்க்கும்.. ஆபீஸ்ல வேல நைட் சிஃப்ட் தானே.. அதில்லாம இன்னைக்கி ஞாயித்துக்கிழம வேற.. யாருகிட்ட கதை விடுறீங்க.. ஒழுங்கா கிளம்புங்க..
இல்ல.. அண்ணிகிட்ட போயி.. ரெண்டு டிக்கெட்ட காமிச்சு 'எந்த பொண்ணுகூடவோ சினிமாக்குப்போக டிக்கெட்ட வாங்கிட்டு வரச்சொன்னீங்க'னு கதை கட்டி விட்டுடுவேன்.. அண்ணியும் நா சொல்றத நம்பிடுவாங்க.. அப்பறம் உங்க பாடு திண்டாட்டந்தான்.. எப்பூடி'

"அடப்பாவமே.. நா உனக்கு என்னபா பாவம்  செஞ்சேன்.. என்னைய சோதிக்கிறதுக்குனே வந்திருக்கியா..
சரி..இரு ..நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன் (பயபுள்ள நம்மல சிக்கல்ல சிக்கவுட்டு சின்னாபின்னமா ஆக்குறதுக்குனே வந்து தொலையுறானே- மைண்ட் வாய்ச்)

சினிமா தியேட்டர்..
ரெண்டு பேரும் வாசல்ல நுழையுறாங்க..
அங்க ஒரே கும்பலா நின்னு ஏதோ வேடிக்கை பாத்துகிட்டு இருந்தாங்க..
இவங்களும் கூட்டத்த விலக்கிட்டு உள்ள போய் என்ன நடக்குதுனு பாத்தாங்க..
ரெண்டு பேரு நின்னு கோவமா பேசிட்டு இருந்தாங்க..
அதுல ஒருத்தன் இன்னொருத்தன பார்த்து " உன்னோட முகத்திரைய கிழிக்கல என்னோட பேரு விஷ்வா இல்லடா"னு சத்தமா கத்தினான்..
அப்ப எங்க இருந்தோ 'கட்..கட். சூப்பர் சார்'னு ஒரு குரல் வர திரும்பி பத்து ஒரு ஆளு சூட்டிங் பிடிக்கிற கேமராகாரரோட நின்னுகிட்டு இருந்து கைய தட்டுனார்..
என்னாடானு விசாரிச்சுப் பாத்தா ஏதோ சீரியல் நாடகத்தோட படப்பிடிப்பாம்..
அப்பறம் அந்த கூட்டத்த விட்டு பெரியவரும், விஜயும் வெளியே வந்து, தியேட்டர்குள்ள நுழைச்சி அவங்களுக்கான சேர்ல  உங்காந்தாங்க..

"பெரியவரே எனக்கு ஒரு சந்தேகம்?"

"என்ன.. இன்டர்வெல்ல இங்க போண்டா பஜ்ஜி விப்பாங்களானா? அதெல்லாம் இந்த தியேட்டர்ல கிடைக்காது..  வேணும்னா பாப்கானும், ஐஸ்கிரீமும் வாங்கித் தரேன் .. அலையாம இரு"

"ஐயோ.. பெரியவரே அது இல்ல.. இது வேற சந்தேகம்?"

"(பயபுள்ள கொஞ்ச நேரம் இவன் இம்சையில இருந்து தப்பிக்கலாம்னு நினைச்சி ஓசியில படம் பாக்க கூட வந்தா.. இங்கேயும் இப்படி படுத்துறானே - மைண்ட் வாய்ச்)"

"பெரீவரே.. நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது.. ஒழுங்கா ..."

"சரி..சரிபா.. கேளு..கேளு..நீ கேளு (இந்த இடத்துல வடிவேல் 'அவ்வ்வ்' முகபாவனைய நினைச்சிக்கோங்க)..நீ கேளு ராசா.."

"அதோ எதுத்தாப்ப தெரியுதுல ஒரு திரை (ஸ்கிரீன்) அது என்ன கலர்?"

"வெல்வெட் சிவப்பு கலர்.. இதுல என்ன உனக்கு சந்தேகம்?"

"இருங்க வரேன்.. அந்த திரை மேல ஏறுன உடனே ஒரு திரை தெரியுமே அது என்ன கலர்?"

"ஓ.. படம் தெரியுற ஸ்கிரீனா கேக்குறியா அது வெள்ளைக் கலர்"

"சரி..  அந்த திரை வெல்வெட் சிவப்புக் கலர்..
அடுத்த திரை வெள்ளைக்கலர்..'

" சரி"

"எனக்கு இப்ப என்ன சந்தேகம்னா..
வெளியில் ஒரு ஆளு 'முகத்திரைய கிழிச்சுடுவேன்'னு சொன்னான்ல ..
அந்த #முகத்திரை என்ன கலரு?"

"அது வந்து..அது..அது.."

"பெரியவரே.. இப்ப ஒன்னும் சொல்ல வேணாம்.. நல்லா யோசன செஞ்சி படம் முடியறதுக்குள்ள சொன்னா போதும்"

"ம்க்கும்..இன்னைக்கி படம் பாத்தாப் போலத்தா" னு மொனகிகிட்டே பெரியவரு பேய் முழி முழிச்சிகிட்டு நின்னாங்க..

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக