ஞாயிறு, 17 மே, 2020

பண்ணையாரும் குமாரும்

#டொக்_டொக்_டொக்

"டொக்..டொக்..டொக்.."

"யாரது"

"டொக்..டொக்..டொக்.."

"யாரு பா அது?"

"டொக்..டொக்..டொக்.."

"அட..யாருனு கேக்குறேன் ல"

"டொக்..டொக்..டொக்.."

"யோவ்.. யாருயா அது..
எனக்கு நல்லா கோவம் வந்திடும்"

"டொக்..டொக்..டொக்.."

"அடங்கொப்புரானே.. எவன்டா அவன்?"

"டொக்..டொக்..டொக்.."

''யோவ்.. கொமாரே நீதானாயா?"

"டொக்..டொக்..டொக்.."

"யோவ்..குமாரே சும்மா விளையாடாத"

"டொக்..டொக்..டொக்.."

"யோவ்..குமாரே.. வந்தேன் மென்னிய கடிச்சி மென்னு  முழுங்கிடுவேன்"

"டொக்..டொக்..டொக்.."

"இதுக்கு மேல உன்கிட்ட வாயால பேசக்கூடாது.. இரு இரு உருட்டுக்கட்டையோட வரேன்"

"டொக்..டொக்..டொக்.."

"அடேய்..உன்ன"

"என்னாங்க..என்னாங்க.. என்னச்சுங்க உங்களுக்கு..
 யாருக்கூட மல்லுகட்டுறீங்க" பண்ணையராம்மா குரல் கேட்டதும்,
பண்ணையார் எழுந்து உக்காந்துகிட்டு,
"யாருன்னு தெரியலம்மா கதவ ரொம்ப நேரம் தட்டிகிட்டே இருக்காங்க..
யாருனு கேட்டா பதில சொல்லாம தொடர்ந்து தட்டிகிட்டே இருக்காங்க..
ஒரு வேள அந்த குமாரு பயலா  தான் விளையாடுறான் போல"

"ம்க்கும்..
என்ன.. கனவுகினவு கண்டீங்களா? அந்த குமாரு தம்பி தான் குடும்பத்தோட ஊருக்குப் போயி 3 நாளாச்சே.. வர ஒரு வாரம் ஆகும்னு நம்மகிட்ட வந்து சொல்லிட்டு தானே போனாப்ல.."

"அடடே.. ஆமால்ல.. அப்ப யாரு கதவ தட்டுனது? ஒரு வேள ஆவியா இருக்குமோ?"

''ஏங்க.. கொஞ்சம் திரும்புங்க.. அந்த காதுல என்னவோ மாட்டியிருக்கீங்கள்ல அத எடுங்க"

"அடடே.. இது புளூடூத் ஹெட்செட்டாச்சே.."

"ம்க்கும் எத்தன தடவ சொல்றது.. தூங்க போகும்போது அத கழட்டி வைங்கனு.. கேக்குறீகளா?
அதில்லாம அது ரெண்டு மூனு நாளா ரிப்பேர்ல இருக்கு..
நீங்க தூக்கத்துல அங்கிட்டு இங்கிட்டு திரும்பும் போது அமுக்கி சத்தம் வந்திருக்கும் போல"

"அப்படியா?"

"ஆமாமா.. அந்த சைடுல இருக்குற பட்டன அழுத்திகிட்டே, காதுல வச்சிப் பாருங்க" பண்ணையாரம்மா சொல்ல..
பண்ணையாரும் காதுல வைக்க, அந்த
"டொக்..டொக்..டொக்.." சத்தம் கேட்டதும்,
நம்மாளு அசடு வழிய சிரிச்சாங்க..

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக