சனி, 16 மே, 2020

திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள்..
(நம்ம பாணியில்.. விஜயகுமார் வேல்முருகன்)

#இன்னா_செய்தார்_ஒறுத்தாரை_அவர்நாண 
#நன்னயஞ்_செய்து_விடல்.!

எப்பவுமே பிசியா இருக்குற ரோடுதான் அது..
எப்ப பாரு வண்டிங்க போய்கிட்டும் வந்துகிட்டும் இருக்கும்..
அதனால ரோட்டை தண்டுறதுக்கு உசுற கையில புடிச்சிகிட்டு நடக்கனும்..

இன்னைக்கி அப்படித்தான் கார்த்திக் தன்னோட சைக்கிள்ல வந்துட்டிருந்தான்..
ரோட்டுக்கு அந்தப்பக்கம் போகலாம்னு போகும்போது ஒரு பைக்காரன் வேகமாக வந்து திடீர்னு பிரேக் போட்டான்.. இருந்தும் லேசாக கார்த்திக்கின் சைக்கிளின் மீது மோதிட்டான்..
தப்பு பைக்காரன் மேல்தான் என்றாலும் அந்தாளு முந்திகிட்டு கார்த்திக்கை திட்டிகிட்டே வந்து ஓங்கி ஒரு அடி கன்னத்தில் வச்சிட்டான்..
அவன் கண்கள் கலங்கிப் போயி கன்னமும் லேசா வீங்கிடுச்சு.. அங்கயிருந்த மக்கள் பேசி விலக்கி விட்டாங்க..
"தோல உரிச்சுபுடுவேன் உரிச்சி" னு சொல்லிட்டு அந்த பைக்காரன் போயிட்டான்..
கார்த்திக்கும் கன்னத்த தடவிகிட்டு போயிட்டான்..

ரெண்டு நாளு கழிச்சு..

 அதே ரோடு..
கார்த்திக் அங்க இருக்குற டீக்கடையில டீ குடிச்சிகிட்டு நின்னான்..
அதே பைக்காரன் வேகமா வந்துகிட்டு இருந்தான்.. திடீர்னு ஒரு ஆட்டோ யுடர்ன் அடிச்சி திரும்பி போக..
வேகமா வந்த பைக்காரன் ஆட்டோவுல மோதிடக்கூடாதுனு பிரேக்க அமுக்க.. அப்படியே சறுக்கி வண்டியோட கீழ விழுந்து தேச்சிகிட்டே போக.. எல்மெட் போடாததால மூஞ்சி மொகற கை காலு எல்லாம்
தேஞ்சி போச்சு..
டீக்குடிச்சிகிட்டு இருந்த கார்த்திக் டீய அப்படியே வச்சிட்டு, ஓடிபோயி அந்த பைக்க தூக்க மத்தவங்களும் வந்து உதவ..
கார்த்திக் கைத்தாங்களா அந்த பைக் காரன பிடிச்சு கூட்டிட்டுப் போயி டீக்கடை பெஞ்ச் மேல உக்கார வச்சான்..
அப்பறம் பைக்ல இருந்த முதல் உதவி பையில் இருந்த பஞ்ச எடுத்து , டீக்கடையில கொஞ்சம் சுடுதண்ணி வாங்கி வந்து பொறவு வீட்டுக்கு ஓடிப்போயி ஏதோ தண்ணி மருந்த எடுத்து வந்து அடிப்பட்ட இடத்த துடைச்சி விட்டு.. களிம்ப எடுத்து முகம் கைக்கால்ல தடவி விட்டான்..
"அண்ணே.. பர்ஸ்ட் எய்ட் செஞ்சிட்டேன்.. ஒரு ஆட்டோவ்ல ஏத்தி விடுறேன்.. ஆஸ்பத்திரிக்கு போயி ஊசிப்போட்டுக்கங்க அண்ணே.. உங்களால பேச முடிஞ்சா வீட்டுக்கு போன் போட்டு தகவல் சொல்லுங்க" னு சொல்ல..
பைக் காரன்னால கையை அசைக்க முடியல..'தம்பி பேண்ட் பாக்கெட்ல போன் இருக்கு.. அத எடுத்து வீடுனு தமிழ்ல டைப் செஞ்சிறுப்பேன் அதக்கு போன் போட்டு பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரிக்கு வர சொல்லுப்பா"னு சொல்லிட்டு.. லேசாக ஒரு பக்கமா சாய.. கார்த்திக் போன எடுத்து அந்த நம்பர கூப்புட்டு விவரம் சொல்லிகிட்டு இருக்க..
இத பார்த்த அந்த பைக்காரன் ரெண்டு நாளுக்கு முன்பு அவன அடிச்ச சம்பவத்த நினைச்சிப் பார்க்க.. அந்த ஆளுக்கு கண்ணீர் வந்திடுச்சு..'ச்சேய் ... நாம அவன அடிச்சிருந்தும்.. அத மனசுல வச்சிக்காம.. ஒன்னுமே நடக்காத மாதிரி வந்து உதவிச்செய்றானே.. இவனப் போயி அடிச்சிட்டோமே'னு மனசுக்குள்ள நினைச்சி சங்கடப்பட கண்ணீர் இன்னும் அதிகம் வழிய ஆரம்பிச்சது..
கார்த்திக் ஒரு ஆட்டோவ கூப்புட்டு அவர வண்டியில ஏத்தி விட..
அவரும் கைய கூப்பி அவன கும்புட..
"ணே..என்னண்ணே நீ.. சின்ன பையன போயி கும்புட்டுட்டு.. போயிட்டு வாண்ணே.. எல்லா சரியாப்பொயிடும்" னு சொல்ல..
ஆட்டோ நகர.. கார்த்திக்கையே பாத்துகிட்டு இருந்தான் பைக் காரான்..

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக