ஞாயிறு, 17 மே, 2020

ஓட்டிக்காமி

#ஓட்டிகாமி

"(என்ன இது இந்த பக்கி எப்பவுமே பதட்டத்தோடயே ஓடி வரும்.. இன்னைக்கி என்னடானா ரொம்ப அமைதியா வருதே..
வேற எதையாவது வம்ப இழுத்துகிட்டு வருதோ.. இது ஓடி வந்தாலும் பக்பக் னு இருக்கு.. அமைதியா வந்தாலும் அதவிட திக்திக் னு இருக்கு.. இன்னைக்கி என்னானு தெரியலையே)" பண்ணையார் தனக்குத் தானே மைண்ட் வாய்சில்  பேசிக்கொண்டு நிற்க..

"வணக்க்க்கம்ங்க பண்ணையார்"

"(என்ன இது வணக்கம் ரொம்ப அழுத்தமா இருக்கே"-மைண்ட் வாய்ச்..)
குமாரை ஏறயிறங்க பாத்துபுட்டு..
''வணக்கம் பா"

"எப்படி இருக்கீங்க பண்ணையார்?"

"இதுவரைக்கும் நல்லா தான் இருந்தேன்..
இனிமேட்டு தான் எப்படினு தெரியல"

"ஏனுங்க பண்ணையார்?"

"அதான் நீ வந்துட்டீல..்..
ஆமா.. பாக்கெட்ல என்னயா பொடைப்பா காகிதமா இருக்கு?"

"ஓ..அதுவா .. காரு ஓட்ட லைசன்ஸ் எடுக்கனும்.. அதுக்கான அப்ளிகேசன் பேப்பருங்க பண்ணையார்..
அதை உங்ககிட்ட காட்டி ஃபில்லப் செஞ்சிபுட்டு, அப்படியே ஆர்டிஓ ஆபீஸ்ல உங்களுக்கு தெரிஞ்ச ஆளு யாராவது இருக்காங்களானு கேட்டுட்டு போலாம்னு வந்தேங்க பண்ணையார்"

"ஆகா.. இத்தன வருசத்துல இன்னைக்கிதா(ன்)யா குமாரு, உருப்படியான வேலைக்காக வந்துருக்க.. எங்க அந்த பேப்பர கொடு"

"இந்தாங்க பண்ணையார்..
ஆமாம் நமக்கு லைசன்ஸ் எப்படி கொடுப்பாங்க"

"நாம வண்டியில சரியா ஓட்டிக் காட்டுனோம்னா  கொடுப்பாங்கயா கொமாரு" பண்ணையாரு கண்ணாடிய மாட்டிகிட்டி அப்ளிகேசனை ஃபில்லப் செஞ்சிகிட்டே பதில் சொன்னார்..

"ஓ.. நாம சரியா ஓட்டிக்காமிச்சா உடனே கொடுத்துடுவாங்களா..பலே..பலே" என தலையை ஆட்டிகிட்டு, பண்ணையார் கேட்ட கேள்விகளுக்கு பதிலை சொல்ல, கொஞ்ச நேரத்துல அப்ளிகேசனை எழுதிகொடுத்தாரு பண்ணையார்..

"யோவ்.. குமாரு.. நேரா ஆர்டிஓ ஆபிசுக்கு போ.. அங்க ஜெரா னு ஒருத்தரு இருப்பாரு.. இந்த அப்ளிகேசன அவர்ட்ட கொடுத்து என் பேர சொல்லு.. உன்ன ஸ்பெசலா கவனிப்பாரு.. சரியா.." என்று பண்ணையார் சொல்ல

"சரிங்க பண்ணையார்" என்று வேகமாக தலைய ஆட்டிபுட்டு அப்ளிகேசன வாங்கிபுட்டு ஒரே ஓட்டமா ஓடிட்டாரு குமாரு..

கொஞ்ச நேரங்கழிச்சு..

"(என்னடாயிது இந்த மனுசன் முகத்த தொங்கப் போட்டுட்டு வரானே.. என்னவாயிருக்கும்)"மீண்டும் மைண்ட் வாய்சில் பேசியபடி பண்ணையார் பார்க்க.. அங்க குமாரு சோகமா வந்துகிட்டு இருந்தாப்ல..

"என்னயா குமாரு என்னாச்சு? போன காரியம் என்னயா ஆச்சு? ஏன் மூஞ்சிய இப்படி தொங்க போட்டுட்டு வர?" பண்ணையார் வரிசையா கேட்க..

"பண்ணையார்.. நீங்க சொன்ன மாதிரியே ஆர்டிஓ ஆபீஸ் போனேன்..
நீங்க சொன்ன ஜெரா ஆபீசர்ட்ட அந்த அப்ளிகேசன கொடுத்தேன்.. கொடுத்தேனா.."

"சரி.. கொடுத்த.. அப்பறம் என்னாச்சு?"

"அவரும் அத பாத்துபுட்டு காருல ஏறி ஓட்டிகாட்டச் சொன்னாரா.."

"சரி.. ஓட்டிக்காட்டச் சொன்னாரு.. அப்பறம்?"

"நானும் ஓட்டி காட்டுனேனா.."

"சரி.. ஓட்டி காட்டுன.. அப்பறம் என்னாச்சு?  படுத்தாம சொல்லுயா"

"படக்குனு திட்டிபுட்டாரு"

"ஏன்.. நீ நல்லா ஓட்டிக்காட்டலையா?"

"நல்லா.. தெளிவா தான் ஓட்டிக்காட்டுனேன்.. மனுசன் திட்டிபுட்டாரு"

"தெளிவா ஓட்டிக் காட்டியும் திட்டிபுட்டாரா? ஏம்பா என் பேர சொன்னீயா?இல்லயா?"

"சொன்னேனே..லேசா திட்டுன மனுசரு உங்க பேர சொன்னதும் பயங்கரமா திட்ட ஆரம்பிச்சிட்டாரு.. அதான் திரும்ப வந்துட்டேனுங்க பண்ணையார்"

"என்னாது எம்பேர சொன்னதும் பயங்கரமா திட்ட ஆரம்பிச்சுட்டாரா? யோவ் கிளம்பு .. இப்பவே என்னானு போய் கேட்டுட்டு வந்துடுவோம்"

"இல்லங்க பண்ணையார் நான் வரல நீங்களே போயிட்டு வாங்க ..நா இங்கயே இருக்குறேன்" என்று குமாரு சொல்ல..

"யோவ்.. வாயா கூட" பண்ணையார் டென்சனாக..

"சரிங்க பண்ணையார் வரேன்.. ஆனா நான் ஆபீசுக்குள்ள வரமாட்டேன்.. வெளியவே நின்னுப்பேன் சரியா.."

"சரி..சரி.. சீக்கிரமா ஏறித்தொல" என்று
பண்ணையார் தன்னோட காரை எடுத்துட்டு வேகமா கிளம்பிட்டாரு.

ஆர்டிஓ ஆபீஸ்..

கோபமா காரை விட்டு இறங்குன பண்ணையார் நேரா ஜெரா அவரோட அறைக்குள்ள நுழைஞ்சாரு..
"ஏனுங்க ஜெரா.. நான் குமாருங்குறவர லைசன்ஸ் எடுக்க அனுப்பியிருந்தேன்.
நீங்க என்னடானா அவர திட்டி அனுப்பிச்சிட்டீங்களாமே.. அதுவும் என்னோட பேர சொன்னதும் இன்னும் அதிகமா திட்டிபுட்டீங்களாமே.. ஏன் அப்படி செஞ்சீங்க?"

"கோவப்படாதீங்க பண்ணையார்..
குமாரு உங்க பேரை சொன்னதுனால திட்டோட நிப்பாட்டிட்டேன்.. இல்லனா அடிச்சே அனுப்பியிருப்பேன்"

"அய்யய்யோ.. ஏன்? அவரு நல்லா தானே ஓட்டிக் காட்டுனேன்னு சொன்னாரு?"

"ம்க்கும்.. நல்லாவே காட்டுனாரே.. அவரு ஓட்டிக் காட்டுனத நீங்களே வந்து பாருங்க" என்று அறையை விட்டு வெளியே வந்து, அங்க நின்னுட்டுருந்த கார் கதைவை திறந்து.. உள்ளே இருந்து ரெண்டு சதுரமான அட்டைகள எடுத்து காட்ட..
ஒன்னுல இங்கிலீஸ் எழுத்து O வும், இன்னொன்னுல T யும் இருந்துச்சு..

"பண்ணையார், நான் 'ஓட்டிக்காமி னு செல்ல நீங்க அனுப்புன ஆளு இந்த ரெண்டு அட்டைகளையும் காட்டி 'சார் நல்லா பாத்துக்கோங்க நான் OT காட்டிட்டேன்'னு சொல்லிபுட்டு சிரிச்சான்..
அதான் செம டோஸ் விட்டேன்.. ஓடியே போயிட்டான்.. ஏன் பண்ணையார் இப்பேர்பட்ட ஆளுங்க கூடலாம் சகவாசம் புடிச்சி வச்சிக்கிறீங்க?" னு ஜெரா கேக்க..

"அய்யோ.. நான் எங்கங்க அந்த பக்கிய புடிச்சேன்.. அதுதானுங்க என்னைய புடிச்சி இம்சிக்கிது" என்று பண்ணையார் சொல்லி, ஜெரா அவர் கையில இருந்த அந்த O,T அட்டைகளை மறுபடியும் பாத்துபுட்டு '"அடப்பாவி குமாரே இது தான் நீ நல்லா ஓட்டி (OT) காட்டுனதா உன்ன" என்று கத்தியபடி ஆபீசுக்கு வெளியே நின்ன குமார பார்க்க..
 "வேணாங்க பண்ணையார்.. வேணாங்க பண்ணையார்" னு குமாரு தலை தெரிக்க ஓட..🏃
"யோவ்.. நில்லுயா..நில்லுயா" என்று பண்ணையார் கத்திகிட்டே விரட்ட🏃
"பண்ணையார்..பண்ணையார்..
நில்லுங்க..நில்லுங்க" என்று ஜெராண்ணே பண்ணையார் பின்னாடி ஓட🏃 

ஊரே வேடிக்கை பார்த்தது👀

🏃  🏃   🏃..

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக