ஞாயிறு, 17 மே, 2020

ஒரே மயம்

#எல்லாம்_ஒரே_மயம்

"பண்ணையார்..பண்ணையார்ர்ர்ர்ர்.."

"(அய்யய்யோ.. இந்த பக்கி வேற கத்திகிட்டு வருதே.. இன்னைக்கி என்ன ஒறண்ட இழுத்துச்சுனு தெரீலையே - பண்ணையார் மைண்ட் வாய்ச்) யோவ் .. குமாரே.. பாத்து..பாத்து மெல்ல வாயா.. விழுந்துட போற.. மழை வேற பேஞ்சி களிமண்ணு ஈரமா இருக்கு''னு பண்ணையார் சொல்லி முடிக்கிறதுக்குள்ள 'சர்ர்ரக்..' னு வழுக்கி கீழ விழப்போன குமார பிடிக்க பண்ணையார் கையை நீட்ட, அவரையும் பிடித்துக்கொண்னு 'பொத்'துனு விழுந்தான் குமாரு..

''அட பக்கி.. உன்ன புடிக்க வந்த எனக்கு இதுவும் தேவ இன்னமும் தேவை..
அய்யோ.. இடுப்பு புடிச்சுகிச்சே" னு பண்ணையார் இடுப்ப புடிச்சிகிட்டே எழுந்திருக்க..

"அய்யய்யோ.. "

"என்னயா.. உனக்கும் புடிச்சுகிச்சா?"

"இல்லைங்க பண்ணையார் உங்களுக்கு புடிச்சிக்கிச்சேனு சொன்னேன்" என்றபடி கைகாலில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிட்டபடி குமார் சொன்னான்..

"வருத்த படுறாராமாம்.்
என்னத்துக்குயா இப்படி தலைதெறிக்க ஓடி வந்த.. நாய் விரட்டுச்சா?"

"அதில்லைங்க பண்ணையார்"

"அதான பாத்தேன்.. ஊர்ல இருக்குற நாயெல்லாம் உன்ன பாத்தா, அதுங்க தலைதெறிக்க ஓடுதாமே.. அந்த அளவுக்கு அதுங்களையும் டார்ச்சர் செஞ்சிருக்க நீ"

"அதெல்லாம் இல்லைங்க பண்ணையார்.. ஒரு நாள் டீக்கடையில டீ குடிக்கும்போது ஒரு பொறைய எடுத்து 
டீல தொட்டு சாப்புடலாம்னு எடுத்தேன் அது கீழ விழுந்திடுச்சு.. அத எடுக்கலாம்னு பாத்தா .. அதுக்கு அங்க இருந்த நாய் அந்த பொறய தூக்கிட்டு ஓடிடுச்சு.. அதனால அத வெரட்டி ஓடி.. புடிச்சி.. கட்டி உருண்டு சண்டைய போட்டு.. கடைசியா அது வாலை புடிச்சி கடிச்சுபுட்டேன்.. அது வலி தாங்க முடியாம பொறய கீழ போட்டுட்டு கத்திகிட்டே ஓடிடுச்சுங்க பண்ணையார்.. அன்னையில இருந்து அந்த நாயிக்கும் ஆதோட சகாக்களும் நம்மல கண்டா மெரண்டு ஓடிடுவாங்க.."

"என்னாது.. நாய் வால கடிச்சுபுட்டியா.. எதுக்கும் ரெண்டு அடி தள்ளி நில்லு ராசா..
சரி.. இப்ப எதுக்குயா ஓடி வந்த?"

"நம்ம தாஸண்ணன் இருக்காங்கள"

"ஆமா.. அவர்ட்ட ஏதும் ஒறண்ட இழுத்தியா?"

"இல்லைங்க பண்ணையார்..
அவரு மயங்கி விழுந்துட்டாருங்க"

"அய்யோ.. எதுக்குயா?"

"நம்ம அண்ணனுக்கு உப்புமானா கொஞ்சம் அலர்ஜி.. "

"சரி"

"தினமும் காலையில அண்ணி ரவா உப்புமாவா செஞ்சி கொடுத்துட்டு வந்திருக்காங்க.. அண்ணனும், 'எவ்வளவோ வேலையிருந்தாலும் நம்மலுக்காக சமைச்சு போடுறாங்களேன' நினைச்சு பொறுத்துகிட்டு சாப்பிட்டு வந்தாரு..
நேத்து மனுசரு 'தினமும் ஒரே ரவா உப்புமாவா.. கொஞ்சம் வேற ஏதாவது மாத்தி செய்யலாமே மா'னு அண்ணிகிட்ட சொல்ல..
அவங்களும் 'சரிங்க..வேற சமைக்கிறேனுங்க'னு சொல்லிட்டு இன்னைக்கி இட்லி, தோசை இன்னும் சில பலகாரங்களையும் சமைச்சி வச்சிருந்தாங்களா அத பாத்துபுட்டு மயங்கி விழுந்துட்டாருங்க பண்ணையார்"

"என்னடாயிது.. அவரு சொன்னாப்போல தானே சமைச்சிருக்காங்க.. அதுக்கு ஏன் தாஸு மயங்கி விழனும்?"

"பண்ணையார்.. அவங்க செஞ்சது எல்லாம் ரவையில..
அதாவது ரவா இட்லி, ரவா தோசை, ரவா ஊத்தப்பம், ரவா சட்னி, ரவா பாயாசம் அப்பறமா ரவா பச்சதண்ணி"

"அது என்னபா ரவா பச்சதண்ணி"

"குடிக்கிற தண்ணியில கொஞ்சம் ரவைய வறுத்து போட்டுட்டாங்க.."

"அடப்பாவமே.. எல்லாம் ஒரே ரவை மயமா இருந்தா எப்படி.. அதான் மயக்கமாயிட்டாரு"

"அதுக்கு கூட அவரு மயக்கமாகல கடைசியா ஒன்னு சொன்னாங்க பாருங்க அதுக்குத்தான் அவரு மயங்கி விழுந்துட்டார்.."

"அப்படி என்ன சொன்னாங்க?"

"நாளைக்கி பிரியாணி செய்யப் போறாங்களாம்.. அதுவும் #ரவா_பிரியாணியாம்.. அத கேட்ட உடனே மனுசரு மயங்கி பொத்துனு விழுந்துபுட்டாரு"

"அப்பறம் என்னாச்சு?"

"அதை NA Dhass அண்ணனே வந்து சொல்வாங்க பண்ணையார்"

"யப்பா, இப்பத்தான் கொஞ்சம் தெளிஞ்சது. பாரே மயக்கம் தெளியறதுக்கு கூட ரவா கசாயம்தான் குடுத்தாங்க." தாஸ் அண்ணன

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக