"ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..டொடக்.. அலோ..வணக்கம்.. நான் மாஸ்டர் பேசுறேன்ங்க பாஸ்"
"ஆஆங்.. வணக்கம் வணக்கம்ங்க மாஸ்டர்.. சொல்லுங்க என்ன விசயம்?"
"நம்ம விஜய்ட்ட வடை வாங்கிட்டு வரச்சொன்னேன்..
ஆளு போயி ஒரு மணி நேரம் ஆகுது..
இதுவரைக்கும் ஆளையே காணோம்..
அங்க வந்தாப்பலயா?"
"இல்லங்களே மாஸ்டர்...
ஆமா.. அப்படி என்ன வடை வாங்கிட்டு வரச்சொன்னீங்க?"
"உளுந்து வடத்தான்"
"ம்க்கும்.. அந்த பக்கி கிட்டையா சொன்னீங்க.. எங்க விழுந்து கெடக்கோ"
"உளுந்த வடைக்கும், விழுந்து கெடக்குறதுக்கும் என்ன சம்மந்தம்?"
"நீங்க உளுந்து வடைனு சொன்னத அந்த பயபுள்ள " உழுந்து (விழுந்து - பேச்சுவழக்கு) வாங்குற வடனு நினைச்சிருக்கும்.. கொஞ்ச நேரம் பொறுங்க.. நம்ம ஆளுங்கள்ல யாராவது ஒருத்தரு கூட்டிட்டு வந்து விடுவாங்க பாருங்க"என்று அவர் சொல்லிகொண்டு இருக்கும் போதே
"டிங்டாங்..டிங்டாங்'' என்று காலிங்பெல் சத்தம் கேட்டது..
" பாஸ் நீங்க சொன்னது போலவே யாரோ காலிங் பெல்ல அடிக்கிறதுப் போல இருக்கு.. இருங்க மறுபடியும் கூப்புடுறேன்" மாஸ்டர் போன வச்சிட்டு வாசல் கதவ திறந்தால் தாஸ் நின்னிகிட்டு இருந்தாரு..
"வாங்க தாஸ் .. என்ன விசயம்?"
"மாஸ்டர்..விஜய என்ன வாங்கிட்டு வரச்சொன்னீங்க?"
"ஏன்? என்னாச்சு? உளுந்து வடை வாங்கிட்டு வரச்சொன்னேன்"
"அந்த பக்கி என்ன செஞ்சிறுக்குனு பாருங்க" னு தாஸ் சொல்லிட்டு கொஞ்சம் விலக..
முகத்துல கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று ஒரு கணக்குப் பாடமே இருழ்துச்சு.. போதாக்குறைக்கு கையில வேற கட்டுப்போட்டு தொட்டில் மாட்டிருந்தாங்க..
"அடப்பாவமே.. இப்ப தாம்பா நம்ம பாசு சொன்னாரு.. அதேப்போல நடந்துருச்சே..
இந்தாள நினைச்சி சிரிக்கிறதா அழுவுறதா" தலைல கைய வச்சிகிட்டாரு மாஸ்டர்..
(மாஸ்டர் வட வாங்க விஜய அனுப்ப ..
அவரு நேரா கடைக்குப் போயி, அங்கிருந்த பென்ச் மேல ஒரு ஸ்டூல போட்டு அதுமேல ஏறி நின்னு குதிச்சி வட கேட்டிருக்காரு.. வேற ஒன்னுமில்ல)
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக