#ஆம_வட
"தம்பி.. விஜய் எனக்கு ஒரு ஆமவடையும், ஒரு காபியும் போதும்.. உனக்கு என்ன வேணும்?"
"பெரீவரே.. எனக்கு முதல வடையும், ஒரு டீயும் போதும்"
"ஏலேய்..வடைக்கு பறக்குற பறக்காவெட்டி.. உனக்கு வடைய முதல்ல தரசொல்றேன் இரு..
ஏம்பா.. சர்வர்...."
''பெரியவரே ஒரு நிமிசம்..
நான் வடைய மொதல்ல கேக்கல #முதலை_வடைய கேட்டேன்"
"ஏம்பா.. என்னப்பா.. சொல்ற?
முதலைய வச்சி எப்படிப்பா வடைய போடுவாங்க?"
"ஆமைய வச்சி வடைய போடும்போது .. முதலைய வச்சிப் போடக்கூடாதா?
ரெண்டும் தண்ணியில தானே இருக்குது.. எனக்கு முதலை வடைய சுட்டுத் தரச்சொல்லுங்க.. ஏம்பா சர்வர்ர்ர்ர்.."
"யோவ்..சர்வர் நீ அங்கேயே நில்லு.. இங்க வராத..
அடப்பாவமே..ஏம்பா தம்பி இப்படி செய்யுற.. அந்த வடையோட ஒரு பக்கம் பாக்க ஆமையோட முதுகு மாதிரி இருக்குறதுனால, ஏதோ பேச்சு வழக்குல ஆமவடனு சொல்றாங்க.. அதுக்கு இப்படி ஒரு அளிச்சாட்டியமா செய்யுறது?"
"பெரியவரே.. அதுக்குத்தான் மசால் வடைனு ஒரு பேரு இருக்குல.. அத சொல்ல வேண்டியது தான.. அத விட்டுட்டு ஆம வட, கீம வடனு"
"ஏலேய் ..ஏலேய்.. ஏம்பா என்னிய இப்படி படுத்துற.. எதுக்குலே நீ இப்படி இருக்குற?"
"ம்ம்ம்.. உங்க கூட சேந்தா வேற எப்படி இருப்பாங்களாம்"
"(அய்யோ..அய்யோ.. நம்மலுக்குனு வந்து சேருரது எல்லாம் இப்படியா இருக்கும்.. பாடா படுத்துறானே..அவ்வ்வ் - பெரியவர் மைன்ட் வாய்ச்) ஏம்பா சர்வர்.. எனக்கு ஒரு ஆம..இல்ல..இல்ல... ஒரு மசால் வடையும், ஒரு காப்பியும்"
"ஆங்.. அப்படி வாங்க வழிக்கி.. எனக்கு ஒரு டீயும்.. அப்பறம் .. இன்னொரு டீயும்"
"(இன்னொரு டீயா.. இவன் ஒருத்தன் தானே இருக்கான்..அது எதுக்கு.. வேண்டாம்பா..கேக்கவே வேண்டாம்.் அதுக்கு எதையாவது சொல்லி நம்ம உசுற எடுப்பான்."-பெரீவரோட மைண்ட் வாய்ச்)
" என்னங்க பெரியவரே.. ஏதாவது கேக்கப்போறீங்களா?"
"இல்ல..ராசா..இல்லவே இல்ல.. நீ டீய குடிப்பா..இஇஇஇ. (யப்பா.. இதுகிட்ட காலங்கடுத்துறது இருக்கே.. ரொம்ப ரொம்ப கஸ்டமடா சாமீ.. நாம வடைய திம்போம்"-மைண்ட் வாய்ச்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக