#பண்ணையாரும்_குமாரும்
"ஏம்பா.. கொமாரு.. அதென்ன.. எப்ப பாரு 'நாம உண்டு நம்ம வேல உண்டுனு இருப்போம்'னு சொல்றியே அப்படி என்ன வேலதான்யா உன்னோடது?"
"அது வந்துங்க பண்ணையார், நம்ம Maran Mani பெரியவரை ஒரண்ட இழுத்து அண்ணிகிட்ட #பாட்டு வாங்க வைக்கிறது தான் நம்ம வேல.. அதுல வர திருப்த்தி இருக்கு பாருங்க பரம திருப்த்திங்கோ"
"அடப்பாவி மனுசா..
அப்பறம் அந்த 'நாம யாரு வம்புக்கும் போறதில்ல.. யாரு தும்புக்கும் போறதில்ல'னு சொல்றியே அதுக்கு என்ன அர்த்தம்யா?"
"நல்ல வேள கேட்டிங்க பண்ணையார்.. எங்க நீங்க கேக்காம போயிடுவீங்களோனு தவிச்சி போயிட்டேனுங்க..
அது என்னானா.. நாம இழுத்துவிட்ட ஒறண்டையில அண்ணி நம்ம பெரியவர அடிக்கும் போதோ .. பொதுவாக அண்ணி பெரியவர வெளிய வச்சி குமுற மாட்டாங்க.. அதனால திட்டிகிட்டு இருக்கும்போதோ நாம அவங்க வம்பு தும்புக்குள்ள தலையிடாம அப்பாவியா தள்ளி நின்னு வேடிக்கை மட்டும் பாக்கணும்.. அப்ப தான் அண்ணி 'உங்க தம்பி தானே குமாரு எவ்வளவு சமத்தா இருக்காப்ல.. அத பாத்து நீங்க திருந்தக் கூடாதா?'னு கேப்பாங்க.. அப்ப வர ஆனந்தத்துக்கு அளவே இருக்காதுங்க பண்ணையார்."
"அடப்படுபாவி.. ஒரு மனுசன மாட்டி விடுறதுல உனக்கு இவ்ளோ சந்தோசமா?..
சரி.. நம்ம வீட்ல இதுபோல ஒறண்டய இழுத்து விட மாட்டியே?"
"சேச்சே.. உங்களுக்கெல்லாம் இப்படி செய்வேனா.. நீங்க எப்படிப்பட்ட ஆளூஊஊ.. போங்க பண்ணையார் இப்படிலாம் செய்யமாட்டேன்"
"அப்பாடி.. நெஞ்சில பால வார்த்தய்யா"
"அதனால உங்களுக்கு வேற லெவல்ல செய்வேங்கோ பண்ணையார்" னு சொல்லிட்டு ஓட..
"அய்யய்யோ.. யோவ்.. கொமாரே நில்லுயா..நில்லுயா வந்தேன் மென்னிய கடிச்சி முழுங்கிபுடுவேன்" னு கத்திகிட்டு பண்ணையார் வெரட்ட..
"அதுக்காகதாங்க பண்ணையார் நான் நிக்கமாட்டேன்" னு சொல்லிபுட்டு குமாரு தலதெறிக்க ஓடுனாப்ல..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக