பிளாட்பாரம்
( பண்ணையாரும் குமாரும்)
"ட்ரிங்..ட்ரிங்..
ட்ரிங்..ட்ரிங்.. டொடக்..
அலோ.. வணக்கம் நான் பண்ணையார் பேசுறேன் கொமாரே"
"வணக்கம்.. வணக்கம்.. சொல்லுங்க பண்ணையார்.. "
"வீட்ல சும்மா தானய்யா இருக்க.. வா நாம ஒரு இடத்துக்குப் போய் வருவோம்"
"ஏதாவது விசேசமாங்க பண்ணையார்.. சாப்ட.. கீப்ட போகனுமா?"
"ம்க்கும்.. திங்கிறதுலேயே இரு.. சீக்கிரம் வந்து தொலையுமய்யா?"
"இதோ.. கிளம்பிட்டேனுங்க பண்ணையார் " என்று சொன்னபடி , குமாரு பேன்ட் சட்டைய மாட்டிகிட்டு அவரோட லொட லொட சைக்கிள்ல 'லொடக்கு..லொடக்கு'னு சத்தம் வர கிளம்பிட்டாரு..
பண்ணையார் வீடு..
"வாயா.. கொமாரு.. ஒன்னு சைக்கிள மாத்து இல்லனா அதுக்கு ஏதாவது செய்யி.. நீ படுத்துற பாட்டுக்கு பாவம் அதுக்கு வாயிருந்தாக் கூட கதறி கதறி அழுவும் போலயே.."
"ஹிஹிஹி.. சரிங்க பண்ணையார்"
"அய்யே..நல்லாவே இளிக்கிறய்யா.. சரி..சரி.. சைக்கிள ஓரங்கட்டிட்டு.. கார்ல ஏறு" பண்ணையார் காரை ஸ்டார்ட் செய்ய குமாரு பண்ணையார் பக்கத்துல உக்காந்துகிட்டாரு..
வண்டி மெயின் ரோட்டுக்கு வந்துச்சு..
பட்டிக்காட்டான் முட்டாய் கடைய பாக்குறா மாதிரி வாயை பொலந்துகிட்டு வேடிக்கை பாத்துகிட்டு வந்தாரு..
"யோவ் குமாரு வாய்க்குள்ள பல்லி நுழைஞ்சி காது வழியா வருது பாரு"
"பண்ணையார் விளையாடாதீங்க பண்ணையார்.."
"பின்ன.. இப்படியாய்யா வாய் பொலந்துகிட்டு வேடிக்கை பாத்துகிட்டு வருவ.. எப்ப பாரு நொய்நொய்னு பேசிகிட்டு வருவியே..
இப்ப எங்க போறோம் எதுக்குப் போறோம்னு விசாரிக்காம வரியே அதான் கேட்டேன்"
"ம்க்கும்.. போங்க பண்ணையார்..
இப்படித்தான் போன தடவ கேட்டதுக்கு 'பக்கி போகும்போதே எங்க போறீங்கனு கேக்குது பார்.. போற காரியம் விளங்குமா'னு திட்டிபுட்டீங்க"
"யோவ் ..அப்ப.. அது நான் தனியா போவும்போதுயா.. இப்ப தான் நாம ரெண்டு பேராவ்ல போறோம்..
அதுவுமில்லாம அது போன மாசம்..
நான் கேக்கச் சொல்றது இந்த மாசம்.. புரியுதா?"
"ஓ..அப்படியா.. அப்பச்சரி.. அப்பச்சரி..
பண்ணையார்..பண்ணையார்.."
"என்னய்யா?"
"இப்ப நாம எங்கப்போறோம்?"
"அது வந்துயா.." னு பண்ணையார் சொல்ல வாயெடுக்க "டொம்''னு ஒரு வெடிச்சத்தம்.. ''க்ரீஈஈஈஈச்'னு தேயுற சத்தத்தோடு வண்டி நின்னுடுச்சு..
ரெண்டு பேரும் பதட்டத்தோட இறங்கி வந்து பார்க்க..
வண்டியின் முன்பக்க சக்கரத்துல ஒன்னு வெடிச்சிபுடுச்சு..
பண்ணையார் அப்படியே கவுண்டமணி ஸ்டெயில்ல தலைய கொஞ்சம் சாச்சி 'அடப்பாவமே.. இவ்வளவு எஃபெக்ட்டாயா உன்னோட வாயி.. சும்மா இருந்த உன்ன உசுப்பேத்திவிட்டேன் பாரு ..எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்' மைண்ட் வாய்சோட குமார பாக்க..
" அய்யய்யோ.. என்னங்க பண்ணையார்.. டயர்ல காத்து ரொம்ப புடிச்சிட்டீங்களோ.. வெடிச்சிப் போச்சு" குமாரு கேக்க.. அவரும் மண்டைய ஆட்டியபடி "என்னோட கெரகம் சரியில்லயா.. சரி..சரி அந்த டிக்கிய தொறந்து ஸ்டெப்னிய மாட்டுவோம் வா" என்று சொல்லியபடி
காரின் பின்பக்கம் வந்து டிக்கி கதவை தூக்க..
உள்ளே ஸ்டெப்னி டயர் இல்ல..
"அடப்பாவமே.. என்னங்க பண்ணையார் நம்மலுக்கு வந்த சோதனை..டயர காணோம்" குமார் சொல்ல..
பண்ணையார் தலையில் லேசாக தட்டியபடி "அடடே.. நேத்து அண்ணன் மகன் வந்து எடுத்துட்டுப் போனாப்ல .. மறந்துட்டேன்.. இரு.. போன் போட்டு கூப்புடுவோம்" னு சொல்லிட்டு போன் போட்டு விவரத்த சொல்லிட்டு பண்ணையார் போன வச்சிட்டாங்க..
"சரி.. வாயா குமாரு.. எப்படியும் மகன் வர 20 நிமிசம் ஆகும்.. நாம அந்த பிளாட்பாரத்து பென்ச்ல உக்காருவோம் வா'' பண்ணையார் சொல்லிட்டு அந்த பிளாட்பாரத்த நோக்கி போனாங்க..
" இருங்க பண்ணையார் ஒரு நிமிசம்" என்று சொல்லிவிட்டு குமாரு வேகமாக பிளாட்பாரத்தின் ஓரமாவே எதையோ தேடியபடி அந்தப்பக்கம் நடந்தாப்ல..
கொஞ்சம் தூரம் போயி மறுபடியும் திரும்பி வந்து பண்ணையார தாண்டி போக "என்னயா கொமாரே?"
"இருங்க பண்ணையார் சொல்றேன்" னு சொல்லிபுட்டு,
இந்த பக்கம் எதையோ தேடிகிட்டு நடந்தாப்ல..
மறுபடியும் திரும்பி 'என்னது ஒரு இடத்துலையும் காணோமே'னு முனகிகிட்டே வர..
"யோவ்.. குமாரே.. என்னய்யா? நில்லுயா.. என்னத்தையா தேடுற?"என்று குமார தடுத்து நிறுத்தி வேகமா கேட்டாங்க..
" ஒன்னுமில்ல.. டிக்கெட் கவுண்டர தேடுறேனுங்க பண்ணையார்"
"என்னாது.. டிக்கெட் கவுண்டரா.. எதுக்குயா?
" நீங்க தானே சொன்னீங்க..பிளாட்பாரத்துல டிக்கெட் இல்லாம நின்டா செக்கிங் வரும்போது புடிப்பாங்கனு"
"நானா.. எப்பயா சொன்னேன்?"
"போங்க பண்ணையார் உங்களுக்கு வரவர மறதி அதிகமாயிட்டே போவுது"
"யோவ்.. படுத்தாம சொல்லுயா.. எப்பயா ணொன்னேன்?"
"போன வாரந்தான்.. ரயில்வே ஸ்டேசனுக்கு ஒருத்தர கூட்டிட்டு வரப்போனமே .. அப்ப சொன்னீங்களே"
"அடப்பாவி மனுசா.. அது ரயில்வே ஸ்டேசன் பிளாட்பாரம் யா.. அங்க கண்டிப்பா டிக்கெட் எடுத்து ஆகனும்..
இது ரோட்டு ஓரமா இருக்குற பிளாட்பாரம்.. இதுக்கெல்லாம் எடுக்கக்கூடாது யா"
"அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க பண்ணையார்.. அதுவும் பிளாட்பாரம் தான்.. இதுவும் பிளாட்பாரம் தான்.. பேச்ச மாத்தி மாத்தி பேசப்படாது நீங்க.. ஆமாஞ்சொல்லிபுட்டேன்.. இங்க நிச்சயம் டிக்கெட் கவுண்டர் இருக்கும் .. நான் போயி பாத்து டிக்கெட் எடுத்துட்டு வரேன்..
அது வரைக்கும் நீங்க இந்த பிளாட்பாரத்துக்கு ஓரமாவே நில்லுங்க ..
மேலகீல ஏறிபுடாதீங்க.. செக்கிங் வந்தா புடிச்சிட்டு போயிடப்போறாங்க" னு சொல்லிபுட்டு வேகமா நடக்க ஆரம்பிச்சாப்ல குமாரு..
"அட பக்கிபயபுள்ள.. இந்தாளே எப்பவுமே இப்படி தானா.. இல்ல இப்படித்தான் எப்பவுமேவா.. ஒன்னும் புரியலையே..
இப்படி ஒரு இம்சைகிட்டவா இம்புட்டு வருசமா சகவாசம் வச்சிருக்கோம்.. நம்மல சொல்லோனும்..
அய்யய்யோ.. அய்யய்யோ.. இப்படி பிளாட்பாரத்துல நின்னு பொலம்ப விட்டுட்டு போயிட்டானே இந்த பக்கி..
யோவ்.. குமாரே.. நில்லுயா..நில்லுயா'' என்று பண்ணையர் குமாரு போன திசையிலேயே போக ஆரம்பிச்சாங்க..
படமும், எழுத்தும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக