ஞாயிறு, 17 மே, 2020

அப்பர்_பெர்த்

#அப்பர்_பெர்த்_கன்ஃபாமா?

பண்ணையாரும், குமாரும் ரயில்வே ஸ்டேசன்ல நின்னுகிட்டு இருந்தாங்க..
"குமாரே.. 'அப்பர் பெர்த் கன்ஃபாமா'னு உள்ள போயி கேட்டுட்டு வாப்பா... நான் லக்கேஜ் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்"

"அதை ஏனுங்க பண்ணையார் இங்க போயி கேக்கனும்.. நேரா சிவன் கோயிலுக்குப் போனா தெரியப்போவுது"

"என்னாது..சிவன் கோவிலுக்கா.. யோவ்.. என்னயா சொல்ற?"

"ஆமாங்க பண்ணையார் அங்க போனாத்தான் அப்பர்,சுந்தரர், திருஞானசம்பந்தர் இவங்க திருவுருவங்கள் இருக்கும்..
அதில்லாம அப்பர் பாடிய பாட்டெல்லாம் எழுதி வச்சிருப்பாங்க.. அப்பர் பொறக்காமலா பாட்டெழுதப் போறாங்க.. அவரு பாடாமலா கோவில்ல எழுதி வைக்கப் போறாங்க.. இதுல தெரியாதா
அப்பர் பொறந்தது உறுதிதான்னு"

"யோவ்.. கொமாரே.. என்னையா உளர்ற.. நான் என்ன கேட்டா... நீ என்னத்தய்யா சொல்ற"

"ஆமாங்க.. பண்ணையார் நீங்க இங்கிலீஸ்ல என்ன சொன்னீங்க
'அப்பர் பெர்த் கன்ஃபாமா'னு அதுக்கு தமிழ்ல என்ன அர்த்தம்?"

"என்ன அர்த்தம்?"

"அப்பர் பொறந்தது உறுதியானு தானே அர்த்தம்"

"அய்யய்யோ..உன்னோட மொழிபெயர்ப்பு அர்த்தத்துல தீய வைக்க..என்னிய வம்புல சிக்கவிடாம போக மாட்ட போல இருக்கே.."

"அப்படி என்னங்க சொல்லிட்டேன் பண்ணையார்?"

"என்ன, நொப்படி நொன்னங்க நொல்லிட்டேன் நொண்ணையாரு?
இப்படி பாடா படுத்துறீயேயா..
யோவ்.. வந்தேன் மென்னிய 'படக்கு'னு கடிச்சி 'சடக்கு'னு முழுங்கிடுவேன்.. அப்படியே ஓடிப்போயிடு.. வரவர இந்தாளு அலிச்சாட்டியம் தாங்க முடியலப்பா'' பண்ணையாரு தலையிலேயே அடிச்சிகிட்டு அங்கிட்டு நகர்ந்துட்டாரு..

" அய்யய்யோ.. என்னோட மென்னிய கடிச்சி அவரு முழுங்கிட்டா.. நா எப்படி முழுங்குவேன்?
'கடக்.கடக்'னு குடிக்கிற தண்ணீலாம் 'பொடக்..பொடக்'னு கீழ ஊத்துமே..
'கபக்கு..கபக்குனு' சாப்புடுற சாப்பாடெல்லாம் 'தொபக்..தொபக்குனு' கீழே விழுந்திடுமே..
என்னத்தக்கு பண்ணையாரு இவ்வளவு கோபமா போறாங்கனு தெரியலையே..'

"ஆமா.. உங்களுக்கு யாருக்காவது தெரியுமா மக்கா  'நான் என்ன தப்பா சொல்லிபுட்டேனு பண்ணையாரு கோபமா போறாங்க'னு?"

விஜயகுமார் வேல்முருகன்

மென்னி- குரல்வளை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக