ஞாயிறு, 17 மே, 2020

பொதுப்பணித்துறை

செந்தில் : அண்ணே..அண்ணே..

கவுண்டமணி: அட என்றா..கோமுட்டி தலையா..

செந்தில்: எனக்கு ஒரு சந்தேகம்ணே..

கவுண்டமணி: 
அட..ஆரம்பிச்சிட்டியா.. எதுவா இருந்தாலும் கொஞ்சம் கவனமா கேளு..

செந்தில் : 
இனிமேட்டு நான் ஏடாகூடமா கேக்கமாட்டண்ணே.. உங்ககிட்ட அடி வாங்கி வாங்கி அலுத்துப் போச்சுணே..
இனிமே அறிவ வளத்துக்குற மாதிரி தான்ணே கேப்பேன்..

கவுண்டமணி: 
ஆஆஆங்.. அப்படி வாடி வழிக்கி.. உன்ன அடிச்சி அடிச்சி எனக்கும் வெறுத்து போச்சு..
இனிமே நீயும் அப்டி நடந்துக்காத.. நானும் அடிக்க மாட்டேன்..
சரீ..
ஏதோ அறிவ வளத்துக்க மாதிரி கேக்கப்போறேன்ன.. அப்டி என்றா கேக்கப் போற..

செந்தில்: 
ஓ..அதுவாணே.. அந்த
பொதுப்பணித்துற..பொதுப்பணித்துற னு ஒன்னு இருக்குங்களே ணே..

கவுண்டமணி:
அட..ஆம் ராசா.. அதுக்கென்ன இப்ப..

செந்தில்: அதோட முக்கிய வேலைங்க என்னணே..

கவுண்டமணி:
ஆஆகா..ஆஆகா.. இப்ப கேட்டப்பாரு அது கேள்வி.. சொல்றேன் பாரு நல்லாக்கேட்டுக்க..

1. பத்து வருசமா அந்த ஏரியாவுல ரோடே போட்டுருக்க மாட்டானுங்க..
போனா போவுதுனு ரோட்ட போட்டுட்டுப் போனா இவனுங்க மறுநாளே வந்து
காவா போடனும்னு தோண்டுவானுங்க..
அதுக்கு அடுத்த நாளு தெரு விளக்கு போடனும்னு தோண்டுவானுங்க..
அதுக்கு அடுத்த நாளு குடிதண்ணி பைப்புக்குனு தோண்டுவானுங்க..
அதுக்கு அடுத்த நாளு எதுக்கு தோண்டுறோம்னு தெரியாம தோண்டி போட்டுட்டு அத மூடாம போயிடுவானுங்க..
அப்பறம் அதுல ஆடு மாடுங்க விழும், அப்புறம் மனுசனுங்க விழுவாங்க..
கடைசியில எதாவது குடுகுடு பெருசு விழுந்து மண்டைய போட்டுடும்... அதுக்கப்பறம் போராட்டம் செஞ்சபொறவுதான் மூடுவானுங்க.

2. அப்பறம் இந்த ஏரி, குளம், குட்டை, கம்மா,ஊருணி இதையெல்லாம் பாத்துக்குற வேலை இவனுங்களுதான்..
ஆனா இவங்க பாத்துக்குற மொறையே வேற.. 
அதுகள மண்ண மூடி பிளாட் போட்டு விக்கிறதுக்கு உடந்தையா இருப்பானுங்க..
அத கேக்கப்போனா ஏதாவது ஒரு அரசியல்வாதிய கையில போட்டுகிட்டு, கேக்குறவன குண்டர்கள வச்சி மிரட்டுவானுங்க..

3.. அதுல விடுற டெண்டரை எல்லாம் அந்த துறை அமைச்சரோட சொந்தகாரவங்களுக்கே கொடுத்துடுவானுங்க..
அப்பறம் எல்லா காண்ட்ராக்ட்டு காரவனுங்க கிட்ட எல்லாம் கமிசன் வாங்கித்தர உதவி செய்வானுங்க..
இப்படியே நீண்டுகிட்டே போகும்டா அவங்களோட "முக்கியமான வேலைகள்"..

செந்தில் : அடடடடடே..

கவுண்டமணி: என்றா.. வாய்க்குள்ள வண்டு போயிடுச்சா..

செந்தில் : அதில்லணே.. அறிவுக்கொழுந்துண்ணே நீங்க..

கவுண்டமணி: ஆமாஆஆ.. அப்படியே கிள்ளி வாயில போட்டுக்க..
இந்த டகால்டி வேலையெல்லாம் நம்பகிட்ட வேண்டா மகனே..
கையில எடுத்த அந்த முறுக்கு பாக்கெட்ட அங்கேயே வச்சிட்டு அப்பிடியே ஓடிபோயிடு..

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக