"பண்ணையார்.. உங்களுக்கு சேதி தெரியுமா?"
"தம்பீ.. குமாரே.. சொன்னாதானே தெரியும்..
இப்படி தலையும் புரியாம, வாலும் புரியாம சொன்னா என்னானு நினைக்கிறது.. டென்சன் ஏத்தாம சொல்லு ராசா.. "
"நம்ம ஜெராண்ணன் இருக்கார்ல.."
"ஆமா.. மதுரையில இருக்காரு.. அவருக்கு என்ன இப்ப?"
"அவருக்கும் அவங்க ராமண்ணனுக்கும் நடந்த போட்டியில் நம்ம ஜெராண்ணன் ஜெயிச்சுபுட்டாங்க"
"ஆகா..அப்படியா?"
"ஆமாங்க பண்ணையார்"
"வெரிகுட்..வெரிகுட்.. ஆமா அப்படி என்ன போட்டி அவங்ககுள்ள?"
"சாப்புடுற போட்டி தான்..ஹூம்"
"அதுக்கு நீ..ஏன்யா சலிச்சிக்கிற.. உன்ன கூப்புடலனு வருத்தமோ.. சரி .. அப்படி என்ன சாப்புடுற போட்டி?"
''ஒரு சாத்துக்குடிய ரெண்டு பேருல யாரு முதல்ல உரிச்சி சாப்புடுறாங்களோ அவங்க வெற்றியாளர் .. அவங்களுக்கு ஒரு மூட்டை சாத்துக்குடி பரிசு"
"என்னடாயிது.. ஆளுக்கு ஒன்னு கொடுத்து உரிக்கச் சொல்லியிருந்தாக்கூட பரவால.. யாரு சிக்கிரமா உரிச்சாங்கனு தெரிஞ்சிடும்..
ரெண்டு பேருக்கு ஒன்னுனா மாறிமாறி பரிச்சி உரிக்கிறதுக்குள்ள அது ஜூஸ் ஆயிடுமேயா.. எப்படி?"
"ம்ம்ம்.. அது தானே.. போட்டி..
எப்படியோ.. ஒரு வழியா நம்ம ஜெராண்ணன் ,அவங்க ராமண்ணன் #வால_புடிச்சி_கடிச்சி செயிச்சு புட்டாருங்கோ"
'என்னாதுஉஉ.. ராமண்ணனோட #வாஆஆ_லாஆஆஆ.. யோவ் கொமாரே.. என்னயா உளர்ற.."
"அட ஆமாங்க .. பண்ணையார்.. ராமண்ண பழத்த உரிக்கிற வரைக்கும் காத்துகிட்டு இருந்து.. கடைசி நேரத்துல அவரோட வாலை கடிச்சிபுட்டு, ஜெராண்ணே லபக்குனு முழுங்கிபுட்டாரு..
நம்பிக்கை இல்லைனா..
போட்டியின் போது ராமண்ணன் சாத்துக்குடிய உரிச்சத படம் புடிச்சிருக்கு..
மொத கமண்டுல பாருங்க பண்ணையார்"
"அட பாவமே.." சொல்லிபுட்டே பண்ணையார் முதல் கமண்டுக்கு போனாங்க..
அப்படியே இத படிக்கிறவங்களும் மறக்காம முதல் கமண்ட ஒரு எட்டு பாத்துபுட்டு போங்கங்க..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக