காத்திருந்த கண்கள் (2)
அந்த முகமூடி மனிதர்களை கறுப்பும், அவன் நாய் கொம்பனும் புரட்டி எடுத்துகிட்டு இருக்கட்டும்..
நாம அப்படியே கறுப்பின் முப்பாட்டன் காலத்துக்குப போயிட்டு வருவோம்..
நான்கு தலைமுறைக்கு முன்பு ..
கறுப்பின் முப்பாட்டன் .. சங்கிலியாண்டி கறுப்பு என்கிற சங்கிலி கறுப்பு..
ஆளு நல்ல வாட்டசாட்டமா ஆறடிக்கு மேல உயரம்.. பார்க்கும் பார்வையிலேயே பயமுறுத்தி ஒன்னுக்கு கழிய வச்சிடும் ஒரு நெருப்பான பார்வ.. முட்டை அளவு கண்ணு.. கட்டை விரல் அளவுள ஒரு சுருட்ட வாயில் வச்சி புகைச்சிகிட்டு இருப்பாரு.. சிவபக்தர்.. நெத்தியில எந்த நேரமும் திருநீறு பட்டை..
இடுப்பு பட்டையில ஒரு பக்கம் நீளமான வாளு.. இன்னொரு பக்கம் திருநீறு பை ஒன்னு தொங்கும்..கையில ஒரு சங்கிலி சுத்தியிருப்பாரு.. ஆகா மொத்தத்துல ஒரு சின்ன அளவு அய்யனார் சிலைப்போலவே இருப்பாரு..
அந்த ஊருக்கு பரம்பரையான காவல் குடும்பத்து ஆள்..
(இதுக்கு மேல அவர பத்தி சொன்னா நீங்கள் டென்சன் ஆகிடுவீங்க. கதைக்குள்ள போவோம்)
இப்ப அவர் பேரு தான் அந்த ஊருக்கும்..
#சங்கிலியாண்டிபுரம்..
நல்ல விவசாய பூமி.. அந்த ஊரை காவல் காக்குறது இவரோட பொறுப்பு.. இவரை மீறி ஒரு குண்டு மணிக்கூட ஊரவிட்டு போக முடியாது..
அந்த ஊரில் பழமையான சிவன் கோவில்.. அந்த சுற்று வட்டாரத்திலேயே மிகவும் சிறப்பு பெற்றது்..
அந்த காலத்துல சோழமன்னர்கள் அந்த கோவிலுக்கு நிறைய தங்க, வைர நகைகளை அள்ளித் தந்திருந்தார்கள்..
அதில் மிகமுக்கியமா நாகாபரணம் சுற்றிய மரகத லிங்கம்..
ரொம்ப விலைமதிப்பற்றது..
அக்கோவில் மிக சக்திப்பெற்று விளங்கியது..
அந்த கோவிலுக்கும் காவலாக சங்கிலி கறுப்புத்தான்..
இது போல ஒரு விசயம் இருந்தால் அதை கொள்ளையடிக்க ஒரு திருட்டுக்கூட்டம் ஒன்னு இருக்கும்ல..
அப்படி ஒருக்கூட்டம் ரொம்ப நாளா அந்த கோவில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்தது..
ஒருநாள் ..
சங்கிலி கறுப்பு காவலுக்கு கிளம்ப தன்னோட வாளை எடுத்து இடையில் சொறுகிக்கொண்டு.. ஒரு சிலம்ப தடியை எடுத்து வலதுக்கையில் வைத்துக்கொண்டு நகர..
ஒரு பச்சோந்தி சங்கிலியின் கையில் விழுந்து ஓட..
அதை பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பு ..
'என்னடாயிது ரொம்ப நாளு இல்லாம நம்ம ஊருக்கு யாரோ புது விருந்தாளிங்க வரப்போறாங்க போலயே.. என் அய்யனே..நீ எச்சரிக்க செஞ்சிட்ட.. உன்மேல பாரத்த போட்டுட்டு கிளம்புரேன்..' என்று மனசுக்குள் நினைச்சகிட்டே.. ஒரு புடி திருநீறை எடுத்து 'என்னாட்டவருக்கும் இறைவா போற்றி' என சொல்லியபடி நெற்றியில் பூசிவிட்டு, ஒரு மர்ம புன்னகை சிரித்தவாரே நடந்தார் சங்கிலி கறுப்பு..
ஊரெல்லாம் அடங்கியிருந்தது..
வீட்டு வாசலில் இருந்த சிறிய அகல் விளக்குகள் மட்டும் லேசாக எரிந்துக்கொண்டிருந்தது..
விளக்குத் தூண்களில் தீவெட்டிகள் எரிந்துக்கொண்டு சற்று இருளை விரட்டிக்கொண்டபடி இருந்தது..
சங்கிலி கறுப்பு வானத்தைப் பார்க்க நிலாவின் ஐந்தாம் நாள் உருவத்தோடு, நட்சத்திரங்களும் மினிக்கியபடி இருக்க,
லேசாக ஒரு விசிலடித்ததும் இருட்டுச் சந்திலிருந்து ஒரு குதிரை குதித்தபடி ஓடி வந்தது.. அந்த லேசான வெளிச்சத்தில் அதன் செந்நிறம் (செம்பு நிறம்) தெரிந்தது..
"வாடா.. சிப்பி.. சாப்பிட்டியா.." என கேக்கவும்
சிறிய கனைத்தல்..
அதன் பிடறியை தடவியவாரே..
"ஏடேய்.. இன்னைக்கி நமக்கு சரியான வேட்டை இருக்கும்" என்று சொல்லியபடியே குதிரையின் மீது தாவி உக்காந்து சங்கிலி கறுப்பு குதிரையை கோவில் நோக்கி விரட்ட ஆரம்பித்தார்..
அப்பொழுது...
(தொடரும்)
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக